சட்னி அரைக்க, மாவு அரைக்க பயன்படும் இந்த மிக்ஸர் கிரைண்டர் பல வருடங்கள் நம் வீட்டு சமையல் அறையில் நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கும். திடீரென மிக்சி ஓடாமல் போனால் பதறிப் போய் விடுவோம். நீண்ட நாட்களாக ஓடிக் கொண்டிருந்த மிக்ஸி திடீரென நின்று விட்டால் முதலாவதாக இதை செஞ்சு பாருங்க, கண்டிப்பாக அதிக பட்சம் இந்த காரணத்தால் தான் மிக்ஸி திடீரென நிற்கும். ஓடாத மிக்ஸியை ஓட வைக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இனி இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மிக்ஸி ஓடவில்லை என்று உடனே மிக்ஸியை ரிப்பேர் கடையில் கொடுப்பதை விட, முதலாவதாக நாம் இதை செய்து பார்க்கலாம். இதிலேயே கண்டிப்பாக நம் பிரச்சினை தீர்ந்துவிடும். அப்படியும் தீராவிட்டால் நாம் மிக்ஸி கடையில் கொடுத்து ரிப்பேர் பார்த்துக் கொள்ளலாம். மிக்ஸியில் ஹெவி லோட் கொடுத்து ஓட விட்டால், அது தானாகவே நின்றும் படியான அமைப்பு எல்லாம் மிக்ஸியிலும் இயல்பாகவே தயாரிப்பாளர்கள் கொடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் விரைவாக மிக்ஸி பழுதடையாமல் இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சமாகும்.
மிக்ஸி ஜாரில் நீங்கள் ஹெவியாக ஏதாவது போட்டு அரைக்க முயன்றால் அது மிக்ஸியை பாதிக்காமல் இருக்க, மிக்ஸிக்கு அடியில் ஒரு பட்டன் போன்ற அமைப்பை கொடுத்து இருப்பார்கள். இந்த பட்டன் எதற்கு கொடுத்திருக்கிறார்கள்? என்று பலருக்கும் தெரிவதில்லை. சிகப்பு நிறத்தில் இருக்கும் இந்த பட்டன் ஹெவி லோடு செய்யும் பொழுது தானாகவே மிக்ஸியை நிற்க செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மிக்சி திடீரென லோடு தாங்க முடியாமல் நின்று கொண்டால் இயங்காமல் போய்விடும் இந்த சமயத்தில் மிக்ஸிக்கு பின்புறம் இருக்கும் இந்த சிகப்பு நிற பட்டனை அழுத்தி விட்டுப் பாருங்கள். இந்த பட்டனை அழுத்திய உடனே மிக்ஸி மீண்டும் இயங்க ஆரம்பித்து விடும். அப்படியும் மிக்ஸி இயங்கவில்லை என்றால் ஒரு பத்து நிமிடம் கழித்து மிக்ஸியை இதே போல பட்டனை அழுத்தி இயக்கி பாருங்கள், கண்டிப்பாக இயங்க ஆரம்பிக்கும்.
சிகப்பு நிற பொத்தானை அழுத்தியும் மிக்சி இயங்கவில்லை என்றால் அது பழுதடைந்து விட்டது என்று அர்த்தமாகும் எனவே மிக்ஸிக்கு பின்புறம் இருக்கக்கூடிய மூடியை அதற்குரிய டூல்ஸ் பயன்படுத்தி போல்டுகளை கழட்டி திறந்து பாருங்கள். அந்த பட்டனுக்கு இன்புட், அவுட்புட் என்று இரண்டு ஒயர் சென்று கொண்டிருக்கும். இதில் இரண்டு புறத்திலிருந்தும் டெஸ்டர் வைத்து பவர் சப்ளை வருகிறதா? என்று சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.
மிக்ஸி பவரில் இருக்கும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். மின்சாரத்துடன் விளையாட வேண்டாம். டெஸ்டர் பயன்படுத்தி பவர் சப்ளை இரண்டு புறமும் வருகிறதா? என்று பாருங்கள், அப்படி ஒருபுறம் வரவில்லை என்றால் பட்டன் பழுதடைந்து விட்டது என்று அர்த்தம். இதை கடையில் கேட்டு வாங்கி வந்து புதிதாக மாற்றிக் கொள்ளலாம். புதிதாக வாங்கிய பட்டனை செலுத்தி, பழைய பட்டனை நீக்கி விடுங்கள். பின்னர் அதே போல இரண்டு வயரையும் சரியாக நிறம் பார்த்து சொருகி விடுங்கள். அதன் பிறகு கண்டிப்பாக உங்களுடைய மிக்ஸி ஓட துவங்கிவிடும். இரண்டு புறமும் பவர் சப்ளை வந்தும், மிக்ஸி இயங்கவில்லை என்றால் வேறு ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம், இதை நீங்கள் கடையில் கொடுத்து சரி செய்து கொள்ளலாம்.