உங்க வீட்டு மிக்ஸி ஜார் ரொம்பவும் அழுக்காக இருக்கிறதா, மிக்ஸி ஜாருக்கு அடிப்பக்கத்தில் கருப்பு கருப்பாக கறைகள் படிந்து ரொம்பவும் மோசமான நிலையில் இருக்கிறதா. உங்க வீட்டு மிக்ஸி ஜாரை புத்தம் புதுசு போல ஜொலிக்க வைக்க சூப்பரான ஒரு வீட்டு குறிப்பு இதோடு சேர்த்து உங்க வீட்டு சமையல் அறையை துர்நாற்றத்தில் இருந்து காப்பாற்ற போகும் அந்த சிறப்பு வாய்ந்த மிக்ஸி ஜாரை பற்றியும் ஒரு சூப்பரான வீட்டு குறிப்பு இந்த பதிவில் உங்களுக்காக.
மிக்ஸி ஜாரை சுத்தம் செய்ய
ஒரு அகலமான பவுல் எடுத்துக்கோங்க. அதில் ஆப்ப சோடா மாவு 1/2 கைப்பிடி அளவு போடுங்க. இதில் ஏதாவது ஒரு கூல்ட்ரிங்ஸ், செவன் அப், ஸ்ப்ரைட் இது மாதிரி கேஸ் இருக்கக்கூடிய கூல்ட்ரிங்ஸ் ஊற்றுங்கள். 10 ரூபாய்க்கு கூட இப்போது இந்த பாட்டிலில் கூல் ட்ரிங்ஸ் கிடைக்கிறது. அதை வாங்கி சோடா உப்பில்(பேக்கிங் சோடா) ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள்.
உடனடியாக இது கொஞ்சம் நுரை பொங்கி வரும் அல்லவா. அது அடங்கியவுடன் உங்களுடைய மிக்ஸி ஜாரின் அடிபாகத்தை இதில் வைத்து 10 லிருந்து 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு ஒரு பல் தேய்க்கும் பிரஷ் வைத்து மிக்ஸி ஜாருக்கு அடிபக்கம், இந்த தண்ணீரை ஊற்றி ஊற்றி தேய்த்து சுத்தம் செய்தால், மிக்ஸி ஜாருக்கு அடிப்பக்கம் சுத்தமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இன்னொரு மெத்தெடும் இருக்கு. ஒரு சின்ன கிண்ணத்தில் பேக்கிங் சோடா 1 ஸ்பூன், துணி துவைக்கும் பவுடர் 1 ஸ்பூன், தூள் உப்பு 1 ஸ்பூன், லெமன் ஜூஸ் 1 ஸ்பூன், ஊற்றி இதை எல்லாம் நன்றாக கலந்து 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி இந்த தண்ணீரை மிக்ஸி ஜாருக்கு அடிப்பக்கம் ஸ்ப்ரே செய்து விடுங்கள். ஒரு பல் தேய்க்கும் பிரஷ் வைத்து தேய்த்தால் ஊற வைக்காமலேயே உங்களுடைய மிக்ஸி ஜாருக்கு அடிப்பக்கம் இருக்கும் அழுக்கு நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தேவைப்பட்டால் ஐந்து நிமிடம் ஊற வைக்கலாம் எந்த தவறும் கிடையாது.
மிக்ஸி ஜாருக்கு உள்பக்கமும் சுத்தமாக இருக்க வேண்டும். மிக்ஸி ஜாருக்கு உள்ளே கல் உப்பு, பாத்திரம் தேய்க்கும் லிக்விட் இரண்டு சொட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஜாரை, மிக்ஸியில் வைத்து இரண்டு ஓட்டு ஓட்டினால் மிக்ஸி ஜாரில் பிளைடுக்கு இடுக்கில் இருக்கக்கூடிய அழுக்குகளும் முழுமையாக நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சரிங்க, சமையலறை கழிவுகளை மிக்ஸி ஜாரில் ஏன் போட வேண்டும். நம்முடைய சமையலறையில் துர்நாற்றம் வீசுவதற்கு காரணம், குப்பை கவரில் மீதமாகி போடும் சாப்பாடு பொருட்கள் தான். கருவேப்பிலை கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் தட்டில் மீதமான சாதம் இந்த பொருட்கள் தான். இதை மறுநாள் இரவு வரை அதே இடத்தில் வைத்திருந்தால் துர்நாற்றம் வீச தான் செய்யும்.
இந்த பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் போடுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டினீங்கன்னா இதெல்லாம் மொழு மொழுன்னு அறைந்து விடும். இந்த விழுதை சிங்கு ஓட்டையிலேயே கொட்டி விடலாம். பிறகு ஒரு ஜக் தண்ணீரை அந்த ஓட்டையில் ஊற்றி விட்டால் போதும் உங்களுடைய சமையலறை சுத்தமாகிவிடும்.
இதையும் படிக்கலாமே: பாத்ரூம் டேப்பை சுத்தம் செய்ய ஈஸியான வழி
சமையலறையில் இருக்கும் குப்பை சுத்தமாகிவிடும். தேவை என்பவர்கள் மட்டும் மிக்ஸி ஜாரில் இந்த குப்பையை போட்டு அரைத்து கழுவி ஊற்றி விடுங்கள். மாறாக கமெண்டில் கழுவி ஊத்தாதீங்க. பயனுள்ள இந்த வீட்டு குறிப்புகள் இல்லத்தரசிகளுக்கு பயனுள்ளபடி அமையும் என்று நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோமா.