பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த மொச்சைக்கொட்டை போதும். தலைமுறை தலைமுறையாக வரும் வறுமையை கூட விரட்டி அடிக்கலாம்.

mochai
- Advertisement -

சில குடும்பங்களை நாம் பார்ப்போம். தாத்தாவிற்கும் பண கஷ்டம் இருந்திருக்கும். அப்பாவிற்கும் பண கஷ்டம் இருந்திருக்கும். மகன் பேரன் பேத்திகள் என்று குடும்பத்தில் பணக்கஷ்டத்தோடு தான் இருப்பார்கள். இப்படி தலைமுறை தலைமுறையாக ஒரு குடும்பம் பணக்கஷ்டத்தை பார்த்து வருகிறது என்றால், அந்த குடும்பத்திற்கு ஏதோ ஒரு தீராத கண்ணுக்கு தெரியாத கிரக தோஷம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஒருத்தருடைய தலையெழுத்து கூடவா பணக்காரராக வாழும் தகுதியை பெறவில்லை. இப்படிப்பட்ட குடும்பத்தின் தலையெழுத்தை மாற்ற என்ன செய்வது. ஒரு சுலபமான சாஸ்திர ரீதியான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் மொச்சை. நாம் எல்லோருக்கும் தெரியும் மொச்சை சுக்கிர பகவானின் தானியம் என்பது. குறிப்பாக வெள்ளை மொச்சை. இந்த வெள்ளை மொச்சையை வீட்டில் நிறைவாக வாங்கி வைக்க வேண்டும். கூடுமானவரை மொச்சையை தானம் கொடுக்க வேண்டும். நாங்களே கஷ்டத்தில் இருக்கிறோம் இதில் மொச்சை தானம் செய்ய வேண்டுமா. உங்களை விட கஷ்டப்படும் குடும்பத்திற்கு ஒரு 100 கிராம் மொச்சை வாங்கிக் கொடுப்பதில் ஒன்றும் நாம் குறைந்து போக போவது கிடையாது அல்லவா. முடிந்தவரை மொச்சை தானம் செய்யுங்கள்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் ஊற வைத்த மொச்சையை பசு மாட்டிற்கு கொடுக்கலாம். வீட்டில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி மொச்சையை போட்டு, அதில் ஒரு கைப்பிடி சில்லறை காசுகளை நிறைவாக வைத்தால் வருமானம் பெருகும். வாரத்தில் ஒரு நாள் மொச்சை சுண்டல் செய்யலாம். வெள்ளிக்கிழமை மொச்சை சுண்டல் செய்து மகாலட்சுமிக்கு நிவேதனமாக படைக்கலாம். இப்படி மொச்சையை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பணகஷ்டம் எவ்வளவு சீக்கிரம் தீர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தீர வேண்டும். அதே சமயம் முதல் தேதி என்றால் ஏதாவது ஒரு வருமானம் கைக்கு வர வேண்டும். இந்த மாத சம்பளமே அடுத்த மாதம் தான் வருகிறது என்பவர்களும் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம். வெள்ளிக்கிழமை இந்த விளக்கு ஏற்றுவது சிறப்பு. அப்படி இல்லையென்றால் வெள்ளிக்கிழமை ஏற்றிய இந்த விளக்கை தொடர்ந்து மூன்று நாட்கள், அல்லது 11 நாட்கள், 48 நாட்கள் கூட ஏற்றலாம். தவறு கிடையாது. பூஜை அறையில் ஒரு பித்தளை தாம்பல தட்டில், ஒரு கைப்பிடி அளவு மொச்சையை பரப்பி போட்டு, அதன் மேலே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சத்திற்கு குறைவே இருக்காது.

- Advertisement -

தினமும் அந்த மொச்சையை மாற்ற வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. வாரத்திற்கு ஒரு முறை பழைய மொச்சையை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பசு மாட்டுக்கு கொடுங்கள். அப்படி இல்லை என்றால் ஊற வைத்த மொச்சையை பறவைகளுக்கு தானியமாக கூட கொடுக்கலாம். தவறு கிடையாது.

இப்படி வீட்டில் மொச்சை தீபம் ஏற்றும் போது பரம்பரை பரம்பரையாகவே கஷ்டப்பட்டு வரும் குடும்பம் கூட பணக்கஷ்டத்தில் இருந்து மீண்டு வரும். சாஸ்திர ரீதியாக சொல்லப்பட்ட இந்த பரிகாரத்தை நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -