இந்த உண்டியலில் பணம் போட்டு வைத்தால், கடனை திருப்பிக் கொடுக்க காசு சீக்கிரமா சேரும். கடன் தொல்லையில் இருந்து சீக்கிரமே விடிவுகாலம் பிறந்திடும்.

hundiyal

நாம் வாங்கிய கடன் தொகையை சீக்கிரமாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால், நம்முடைய கையில் சேமிப்பு அதிகரிக்க வேண்டும். அதற்கு குறிப்பாக எந்த உண்டியலில் நாம் பணத்தை சேர்த்து வைக்கலாம்? எந்த முறையில் பணத்தை கடன்காரர்களுக்கு திருப்பிக் கொடுப்பது, என்பதை பற்றிய சிறிய ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுடைய வீடும், நீங்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சரி, சுற்றி வளைக்காமல் பரிகாரத்தை நேரடியாக பார்த்து விடலாம்.

kadan

இதற்கு செம்பு சொம்பு அல்லது செம்பினால் செய்யப்பட்ட பாத்திரம்தான் கட்டாயம் தேவை. இதற்கு பெயர் செம்பு உண்டியல் என்று கூட வைத்துக் கொள்ளலாம். செம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக கோமியத்தை விட்டு ஒரு முறை கழுவ வேண்டும். அதன் பின்பு மஞ்சள் கலந்த நீரில் கழுவி விட்டு, சுத்தமான நீரில் கழுவி விட்டு அதன் பின்பு பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

இந்த உண்டியலில் உள் பக்கத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை குங்குமத்தை முதலில் போட்டுவிட வேண்டும். அதன் பின்பு உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் உப்பு ஜாடியில் இருந்து, ஒரே ஒரு கல் உப்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய கல் உப்பு ஒன்றை எடுத்து உங்களது வலது கையில் வைத்து, நீங்கள் யாருக்கு கடனை கொடுக்க வேண்டுமோ அவருடைய பெயரை அந்த கல் உப்பிடம் சொல்ல வேண்டும். கையில் இருக்கும் கல் உப்பை முகத்தின் அருகில் எடுத்துச் சென்று, அதன் காதில் சொல்லுவது போல பாவனை செய்து கொண்டு மூன்று முறை அந்தப் பெயரை கல் உப்பிடம் சொல்லிவிடுங்கள்.

sembu-sombu

அதன்பின்பு அந்த கல் உப்பையும் செப்புப் பாத்திரத்தில் உள்ளேயே போட்டு விடுங்கள். முடிந்தால் ஒரு மஞ்சள் நிற துணியை கொண்டு செப்பு பாத்திரத்தின் வாயை மூடி, அந்தத் துணியில் சிறிய ஓட்டையை போட்டு, உண்டியலாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இல்லை என்றால் அப்படியே அந்த உண்டியலில் பணத்தை போட்டு வாருங்கள். நீங்கள் யாருக்கு பணத்தை கொடுக்க வேண்டுமோ அவர்களுடைய கடனை சீக்கிரமாக கொடுப்பதற்கு, பணம் உங்கள் கைக்கு வந்து கொண்டே இருக்கும். கூடிய விரைவில் அந்த பணத்தை நீங்கள் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கிறீர்களா இல்லையா என்று பின்பு சோதித்து பாருங்கள். நம்பிக்கையோடு செய்தால் 100% ரிசல்ட் உங்க கையில். ட்ரை பண்ணி பாருங்க!

sembu-sombu-salt

கட்டாயமாக அந்த உண்டியலில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை பணத்தை போடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். இதோடு சேர்த்து மாதம்தோறும் வரும் நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரம், நீங்கள் பிறந்த கிழமை இப்படிப்பட்ட நாட்களையும் தேர்ந்தெடுத்து அந்த உண்டியலில் பணத்தை போட்டு வந்தால், கடன் சுமை சீக்கிரமே குறைய தொடங்கும். நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கையோடு எதை செய்தாலும் அது பலனளிக்காமல் போனதாக சரித்திரமே இல்லை.

இதையும் படிக்கலாமே
9 செவ்வாய்க்கிழமை இதை செய்தால் கணவன்-மனைவிக்குள் வாழ்நாள் முழுவதும் பிரச்சனையே வராது தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.