- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசென்னையில் பழமையான திருப்பதி சென்ற பலன் அருளும் திருக்கோவில்.

சென்னையில் பழமையான திருப்பதி சென்ற பலன் அருளும் திருக்கோவில்.

- Advertisement -

‘திருப்பதிக்கு சென்றால் திருப்பம் நிகழும்’ என்று காலம் காலமாக அசைக்க முடியாத நம்பிக்கையாக பக்தர்களிடையே இன்றளவிலும் நம்பப்பட்டு வருகிறது. வருடம் தோறும் பக்தர்கள் அதிகம் குவியும் இந்த திருப்பதி கோவிலுக்கு நிகரான சக்தி உள்ள கோவில்கள் பல, நம்மை சுற்றியே உள்ளன. அத்தகைய கோவில்களில் ஒன்று இந்த கோவில்.. இக்கோவிலின் விசேஷமான பலன்கள் என்ன? எங்கு உள்ளது? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் பார்ப்போம் வாருங்கள்.

சுமார் 650 வருட பழமையான சிலையை கொண்டுள்ள இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக பக்தர்களிடையே பார்க்கப்படுகிறது. இங்கு குழந்தை வரம் இல்லாமல் வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு உடனே புத்திர பாக்கியம் உண்டாவதாக பெரும்பாலான பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். ‘மகப்பேறு’ எனும் இவ்வூரின் பெயர் காலப்போக்கில் மருவி ‘முகப்பேர்’ என்றானது.

- Advertisement -

திருப்பதியில் நடக்கும் பூஜைகள் அத்தனையும் இந்த கோவிலிலும் நடைபெறுகிறது. திருமலையில் இரவு ஆரம்பிக்கப்படும் ஏகாந்த சேவை முதல் பகல் முழுவதும் நடக்கப்படும் அத்தனை பூஜைகளும் ஸ்ரீ சந்தான சீனிவாச பெருமாள் கோவிலிலும் நடைபெறுகிறது. ஒன்பதரை அடி உயரம் உள்ள இக்கோவில் சிலையை கனவில் கண்டு ஸ்ரீ அருணாச்சலம் முதலியார் அவர்கள் இத்திருக்கோயிலை எழுப்பியுள்ளதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த சிலை திருமலை வெங்கடாசலபதி சிலையை போலவே இருக்கும் எனினும் அதைவிட உயரம் அதிகம் கொண்டதாக இருப்பது குறிப்பிடதக்கது.

முக்கிய நகரின் மையப்பகுதியில் இக்கோவில் விசாலமான இடத்தை பிடித்துள்ளது. ராஜ கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கு நடக்கும் சந்தான கோபால பூஜையில் கலந்து கொள்வது வழக்கம். நீண்ட வருடங்கள் குழந்தை இல்லாதவர்களுக்கு கூட குழந்தை வரத்தை உடனே கிடக்க செய்வது இத்திருகோவிலின் சிறப்பம்சமாக விளங்குகிறது. இந்த பூஜை பௌர்ணமி மற்றும் திங்கள் அன்று நடத்தப்படுகிறது. சுவாதி, ரோகினி, புனர்பூசம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தம்பதியர்கள் ஒற்றுமையாய் வந்து காலை 6:00 மணி முதல் 12 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

சந்தான கோபால விக்கிரகத்தை தொட்டிலில் வைப்பார்கள். தம்பதிகளின் மடியில் விக்ரஹத்தை பிடித்து வைத்து தாம்பூலம், தேன், வெண்ணை ஆகியவற்றை படைத்து கீழ்வரும் சுலோகத்தை வாசிக்க செய்வார்கள். தொடர்ந்து ஒரு மண்டலம் இந்த ஸ்லோகத்தை வாசித்து வர விரைவிலேயே புத்திர பாக்கியத்தை பெறுவார்கள். பூஜையில் தரும் தேன் மற்றும் வெண்ணெய் பிரசாதமாக தம்பதியர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்:
தேவகிஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே, தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் கதஹ,
தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்தி கரப்ரபோ, தேஹிமே தனயம் ஶீக்ரம் ஆயுஷ்மந்தம் யஶஶ்ரீணாம்.

- Advertisement -

ஸ்லோகம் பொருள்:
தேவகி புத்திர வாசுதேவா.. கோவிந்தா.. எனக்கு ஒரு குழந்தையை அருளும்.. உன்னை சரணடைகிறேன்.
கடவுளே எனது சந்ததி குழந்தையின் மூலம் பெருகட்டும். நீண்ட ஆயுளுடன் புகழோடு வாழக்கூடிய ஒரு குழந்தையை விரைவில் கொடுத்துருள்க என்பது பொருளாகும்.

இதையும் படிக்கலாமே: அதிரடி பண வரவை தரும் வெந்தய பரிகாரம்.

திருப்பதிக்கு சென்றால் திருப்பம் உண்டாவது போல இக்கோவிலுக்கு சென்று வந்தாலும் திருப்பங்கள் பல உண்டாவதாக நம்பப்படுகிறது. வேண்டிய வேண்டுதல்கள் தடையில்லாமல் பலிக்கிறது எனவே அருகில் இருக்கும் இக்கோவிலுக்கு நீங்கள் இதுவரை செல்லாவிட்டால் உடனே சென்று வாருங்கள்.

சற்று முன்