பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்கள் வாழ்வில் இருந்தால், இந்த பரிகாரத்தை கட்டாயம் நீங்கள் செய்யலாம். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்குமே பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. அந்த பிரச்சனைகள் எல்லாம் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை எந்த கவலையும் இல்லை. நம்முடைய கட்டுப்பாட்டை மீறி பிரச்சனைகள் தலைதூக்கும் போது தான் நிம்மதி கெடுகிறது.
தகுதிக்கு மீறிய கடன், தகுதிக்கு மீறிய ஆடம்பரம், தகுதிக்கு மீறிய ஆசை, ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகலாம் ஒரே நாளில் லட்சாதிபதி ஆகிவிடலாம் என்று பேராசைப்பட்டு நாம் எடுக்கும் முடிவுகள் எல்லாம், நம்மை கடன் என்ற பாதாளத்தில் தள்ளி விடுகிறது. இருக்கும் நிம்மதியும் கெட்டுப் போகும். அளவோடு கடன் வாங்கி அளவோடு செலவு செய்து பேராசை இல்லாமல் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் நாம் எல்லோரிடத்திலும் வரவேண்டும்.
பேராசை பட்டு ஆடம்பரம் என்ற பாதாளத்தில் விழுந்துவிட்டால், அதிலிருந்து மீளவே முடியாது. நீங்களும் இப்படி அகல கால் வைத்து பிரச்சனையில் சிக்கி உள்ளீர்களா. நிறைய கடன் இருக்கிறது. நிறைய பணப்பிரச்சனை இருக்கிறது. வருமானத்திற்கு வழியில்லாமல் திண்டாடுபவர்கள், புதன்கிழமை உங்கள் குலதெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கு உண்டான வழியை அந்த கடவுள் காண்பித்துக் கொடுப்பான்.
பணப்பிரச்சினை தீர்க்கும் வெந்தய பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு வெந்தயம், ஐந்து ரூபாய் நாணயம், இந்த இரண்டு பொருட்கள் மட்டும் தான் தேவை. ஐந்து, 5 ரூபாய் நாணயங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மொத்தம் 25 ரூபாய் தேவைப்படும். இன்று இரவு 8 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஐந்து வெந்தயம், ஒரு ஐந்து ரூபாய் நாணயம் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பச்சை நிற துணியில் இந்த இரண்டு பொருளையும் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளவும். இந்த முடிச்சை உள்ளம் கைகளில் வைத்துக்கொண்டு ‘I am a powerful money magnet’ என்ற வார்த்தையை சொல்லலாம். நீங்கள் தமிழில் சொல்ல வேண்டும் என்றால் ’24 மணி நான்கு மணி நேரமும் என்னை நோக்கி பணம் வந்து கொண்டே இருக்கும். 24 மணி நேரமும் இந்த பிரபஞ்சம் எனக்கு பணத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்’ இப்படிப்பட்ட வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
எண்ணிக்கை எல்லாம் கிடையாது. நீங்கள் எத்தனை முறை அதிகமாக இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்களா, அவ்வளவு சீக்கிரம் பணம் உங்களை நோக்கி வர தொடங்கும். கையில் அந்த முடிச்சை வைத்துக்கொண்டு, இந்த வார்த்தைகளை சொல்லிவிட்டு ஒரு டப்பாவில் கையில் இருக்கும் முடிச்சை போட்டு விடுங்கள். தினமும் இதேபோல இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஐந்து நாட்கள் செய்வீர்கள்.
ஐந்து முடிச்சு அந்த டப்பாவில் சேர்ந்திருக்கும். ஆறாவது நாள் திங்கட்கிழமை இந்த முடிச்சுகளை எல்லாம் அவிழ்த்து அந்த வெந்தயத்தை எடுத்து செடி கொடிகளுக்கு கீழே கால் படாத இடத்தில் போடவும். 5 ஐந்து ரூபாய் நாணயங்கள் இருக்கிறது அல்லவா, அதை எடுத்து உங்களுடைய பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். மேலே சொன்ன பண ஈர்ப்பு வார்த்தைகள் இந்த நாணயத்தில் உருவேற்றி இருக்கும். 48 நாட்களுக்கு இந்த நாணயங்களுக்கு பவர் இருக்கும்.
48 நாட்களுக்குள் உங்களுடைய பண பிரச்சினைகள் எல்லாம் தீரும். பீரோவில் நிறைய பணம் சேர தொடங்குவதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். 48 நாட்கள் கழித்து இந்த நாணயங்களை சுப செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். சுவாமிக்கு பூ வாங்கி கொடுப்பது, அல்லது வீட்டிற்கு தேவையான கல் உப்பு பச்சரிசி வாங்குவது போன்ற செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தொலைந்து போக பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்து உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடந்ததாக நீங்கள் உணர்ந்தால் 48 நாள் கழித்து, மீண்டும் வரக்கூடிய ஒரு புதன் கிழமை அன்று இதேபோல பரிகாரத்தை செய்து பீரோவில் இந்த நாணயங்களை வைப்பதாக இருந்தாலும் வைக்கலாம். பரிகாரத்தை செய்த பிறகு உங்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றம் வருகிறது என்பதை உற்று நோக்குங்கள் நிறைய நல்ல மாற்றங்கள் கிடைத்தால் பரிகாரம் உங்களுடையது. இந்த பரிகாரத்தை விடாமல் செய்து வரும்போது நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.