சோம்பேறித்தனம் உங்கள் பக்கத்தில் கூட நெருங்க முடியாது. உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள நீங்கள் இதை மட்டும் செய்தாலே போதும்.

chakra
- Advertisement -

நம்முடைய உடம்பில் உள்ள உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்குவதற்கு காரணம் நம்முடைய கண்ணுக்கே தெரியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் 7 சக்கரங்கள் தான். அதில் மூலாதார சக்கரம் சுறுசுறுப்பாக இயங்கினால் நம்முடைய உடலும் மனதும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். மூலாதார சக்கரம் சோர்வடைந்து விட்டால் நாமும் சோர்வாக மாறிவிடுவோம். துவண்டு போவோம். சோம்பேறித்தனம் நம் உடலுக்குள் வந்து விடும். இந்த மூலாதாரச் சக்கரத்தை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும். இதை தான் இன்னிக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

chakra1

மூலாதாரச் சக்கரத்தை எப்படி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு, மூலாதார சக்கரம் என்றால் நம்முடைய உடலில் அது எந்த இடத்தில் உள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதனுடைய ஆசனவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் நடுவில் இருக்கக்கூடிய இடம்தான் மூலாதார சக்கரம் ஆக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

மூலாதாரச் சக்கரத்தை வலிமை படுத்துவதற்கும், மூலாதார சக்கரம் சீராக இயங்குவதற்கும் மிக மிக சுலபமான ஒரு வழி உள்ளது. வெறும் கால்களில் மண்தரையில் நடந்தாலே போதும். நம்முடைய உடம்பில் இருக்கும் மூலாதார சக்கரம் சீராக இயங்கும். இது ஒரு வழி. இது இல்லாமல் இன்னொரு வழியும் நமக்குச் சொல்லப்பட்டு உள்ளது. அது என்ன என்பதையும் இப்போது தெரிந்துகொள்வோம்.

meditation

பஞ்ச பூதங்களில் மூலாதார சக்கரம் மண் சக்தியை கொண்டது. வண்ணத்தில் மூலாதாரச் சக்கரத்திற்கு சிவப்பு நிறம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை வைத்து நாம் ஒரு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

முதலில் உங்களுடைய மூலாதார சக்கரம் தரையில் படும்படி அல்லது நாற்காலியில் படும்படி அமர்ந்து கொள்ள வேண்டும். உங்களுடைய வசதிப்படி எப்படி வேண்டுமென்றாலும் அமர்ந்து கொள்ளலாம். சம்மணம் போட்டும் அமர்ந்து கொள்ளலாம். நாற்காலியில் காலை கீழே தொங்க விட்டும் அமர்ந்து கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம்தான். முதுகு தண்டுவடம் நேராக இருக்கட்டும். உங்களுடைய விரல்களில் மோதிர விரலும் கட்டை விரலும் சேர்த்து இந்த முத்திரையை பிடித்துக் கொள்ளுங்கள். இந்த முத்திரையை சூரிய முத்திரை என்று சொல்லுவார்கள். கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முத்திரை.

surya-mudra

இந்த முத்திரையை விரல்களின் பிடித்து கொண்டு மனதில் சிவப்பு நிறத்தை நினைத்துக்கொண்டு, முதலில் 4 முறை ‘லம்’ என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டும். அதன் பின்பு 3 முறை ‘லங்’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை எப்படி முறையாக உச்சரிப்பது. மூச்சை நன்றாக உள் வாங்கிக் கொள்ளுங்கள். அதன்பின்பு ‘lammmmmmm’ என்று இந்த மந்திரத்தை முழு மூச்சாக ஒரு நிமிடத்திற்கு, இரண்டு எழுத்து வார்த்தையை ஒருமுறைதான் உச்சரிக்க வேண்டும்.

lazy

இதே போல் தான் ‘lungggggggg’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எடுத்துக்காட்டிற்கு ஒரு நிமிடம் மூச்சை உள்வாங்கி கொண்டு ‘ஓம்’ என்ற மந்திரத்தை எப்படி உச்சரிப்போம். ‘ooommmmmmmm’ அதேபோல் தான் மேலே சொல்லப்பட்டிருக்கும் ‘லம்’ ‘லங்’ மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். இந்த இரண்டு மந்திரத்தை தினந்தோறும் தொடர்ந்து, 27 ஏழு நாட்கள் உச்சரித்துப் பாருங்கள்.

sad

உங்களுடைய உடம்பில் நீங்கள் அறியாத நிறைய மாற்றங்களை உணர்வீர்கள். இந்த பூமியில் வாழ்வதற்கு தேவையான அத்தனை தகுதிகளும் உங்களை வந்து அடையும். உங்களுடைய மூலாதார சக்கரம் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிடும். இருபத்தி ஏழு நாட்கள் இந்த பயிற்சியை எடுத்துக் கொண்டு உங்களுடைய மனதிலும் உடலிலும் மாற்றம் ஏற்பட்டால் அதன் பின்பு தொடர்ந்து 48 நாட்கள் செய்யலாம். அதன் பின்பு தொடர்ந்து இந்த பயிற்சியை செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. உடல் சோர்வடையும் போது மனது சோர்வடையும் போது மீண்டும் இந்த பயிற்சியை மேற்கொண்டால் மட்டும் போதும். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் இன்னும் நம்ப முடியாத நிறைய விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

- Advertisement -