முருகனை போற்றி பெரியவர் ஒருவர் பாடிய பாடல்

Murugan padal
- Advertisement -

தமிழுக்கு தாயும் தந்தையாகவும் விளங்கும் முருகனை போற்றி, அவன் படைத்த மொழியை கொண்டே பாடுவதென்பது சிறப்பினும் சிறப்பு. அப்படி பாடப்படும் பாடல்கள் அனைத்தும் நமது செவிக்கு இன்பம் சேர்க்கும் வகையில் சிறப்புற்று இருக்கும். அந்த வகையில் முருக பக்தர் ஒருவர் முருகனை போற்றி பாடும் ஒரு அற்புதமான பாடல் இதோ.

முருகன் பாடல் வரிகள்
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

- Advertisement -

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

வீடியோவில் உள்ள சிவன் பாடல் வரிகள்
கண் இருந்தும் குருடாய் இருந்துவிட்டேன்
நான் காலம் எல்லாம் வீனே கழித்துவிட்டேன்.
பொன் பொருள் சதம் என்று பூமியிலே அலைந்து
உண்மையை பொய் என்று எண்ணியிருந்தேன் ஐயா..

- Advertisement -

உன் மனம் பாராமல் மறந்துவிட்டேன்
ஐயா உன்னையே.. இன்று தான் உணர்ந்து கொண்டேன் …

இது போன்ற மேலும் பல பக்தி பாடல்கள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -