திங்கட்கிழமை தோறும் பூஜை அறையில் இந்த விளக்கை ஏற்றி வைத்தால் வந்த துன்பங்கள் யாவும் நொடியில் காணாமல் போகுமாம்!

vilakku-chandran
- Advertisement -

திங்கட்கிழமையில் பொதுவாக சிவ வழிபாடு செய்வது நல்லது என்பார்கள். சிவ வழிபாடு மட்டுமல்ல சந்திர வழிபாடு செய்வதும் அன்றைய நாளில் சிறப்பான நல்லதொரு பலன்கள் கிடைக்க செய்யும். சந்திர பகவான் நம் மனதை ஆளக்கூடிய காரகத்துவர் ஆவார். நவ கிரகங்களில் மிகவும் வசீகரமானவர், அழகிய தோற்றம் உள்ளவர் சந்திர பகவான் ஒருவர் மட்டுமே! சந்திரன் இருக்கும் இடத்தை வைத்து தான் நம் ராசியும் தீர்மானிக்கப்படுகிறது.

chandra-graham2

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாக இருக்கும் சந்திர பகவான் எங்கு எந்த கட்டத்தில் இருக்கிறாரோ! அந்த கட்டத்திற்கு உரிய ராசி தான் நம்முடைய ராசியாகும். சுப மற்றும் அசுப பலன்கள் இரண்டையுமே கொடுக்கக் கூடியவர் சந்திர பகவான். வளர்பிறையில் சுப பலன்களையும், தேய்பிறையில் அசுப பலன்களையும் கொடுக்கக் கூடியவர். வெள்ளைக் குதிரையை தன் வாகனமாக கொண்டிருக்கும் சந்திரனுடைய ரத்தினக்கல் முத்து. முத்து அணிந்து வந்தால் சந்திரனுடைய அருளை பெறலாம்.

- Advertisement -

சந்திரன் நீசம் பெறும் சமயத்தில் முத்து ரத்தினத்தை அணிந்து கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும். ஒருவருடைய லக்னத்தில் சந்திரன் அமைந்து விட்டால் அவர்களுக்கு வசீகரமான தோற்றமும், காதலின் ரசனையும் அதிகரித்து காணப்படும். இத்தகைய அருமை பெருமைகள் நிறைந்த சந்திர பகவானை திங்களில் வழிபட்டு வந்தால் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். வந்த துன்பங்கள் எல்லாம் விலகி ஓடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

chandran

சந்திரனுக்கு மிகவும் பிடித்த நிறம் வெள்ளை. தானிய வகைகளில் பச்சரிசியை வைத்து இவரை வழிபட்டு வந்தால் நாம் வேண்டிய வேண்டுதல்களை அப்படியே நிறைவேற்றி தந்து விடுவாராம். சந்திரனுக்கு உகந்த திங்கட் கிழமைகளில் இந்த பரிகாரத்தை நாம் செய்து வந்தால் நம் கஷ்டங்கள் யாவும் தொலையும், துன்பங்கள் யாவும் அடியோடு நீங்கும். வீட்டில் வெள்ளை குதிரைகள் ஓடும் படத்தை வைத்திருந்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்கிற வாஸ்து சாஸ்திர பலன்கள் உண்டு. சந்திரனை அடிப்படையாக வைத்து தான் வெள்ளைக்குதிரை அதிர்ஷ்டம் தரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஒரு சிறிய பித்தளை அல்லது செம்பு தட்டில் பச்சரிசி மாவை அல்லது பச்சரிசியை பரப்பி கொள்ளுங்கள். அதன் மீது சிறிய மண் அகல் விளக்கு இரண்டை வையுங்கள். அதில் சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த பூஜை செய்யும் பொழுது ஒரு கண்ணாடியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் சந்திரன் பிரதிபலிப்பதாக நினைத்துக் கொள்ளலாம். சந்திரனுக்கு அதிபதி பார்வதிதேவி ஆவார். சிவபார்வதி படம் வைத்திருப்பவர்கள் அதற்கு முன்பு இந்தத் தட்டை பிரதிஷ்டை செய்யுங்கள்.

siva-parvathi

பின்னர் சந்திர பகவான் உடைய மூல மந்திரத்தை உச்சரித்து தீப, தூபம் காண்பியுங்கள். சந்திரனுக்கு வெண் பொங்கல் நைவேத்தியம் வைக்கலாம். அல்லது தயிர் சாதம் படைத்து வழிபட்டு வரலாம். திங்கட் கிழமைகளில் உங்களால் முடிந்தால் அரிசி தானம் செய்து வாருங்கள். அல்லது அன்னதானம் கூட செய்யலாம். இப்படி தொடர்ந்து திங்கட் கிழமைகளில் செய்து வர குறிப்பாக தேய்பிறை திங்கட் கிழமைகளில் செய்து வர குடும்பத்தில் இருக்கும் எத்தகைய பிரச்சனையும் பரிபூரணமாக விலகும்.

agal-vilakku-deepam

சொத்து தகராறுகள், குடும்பத்தில் பிரிவுகள், கணவன் மனைவி ஒற்றுமை இன்மை, அண்ணன் தம்பி பிரச்சனை, ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள், வியாபார விருத்தி இன்மை, தொழில் நஷ்டம் என்று எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவைகள் விரைவாக நீங்குவதை காணலாம். அத்தகைய சிறப்பான பலன்களைக் கொடுக்கும் சந்திர பகவான் வழிபாடு இப்படி வீட்டிலேயே எளிமையாக செய்து அனைவரும் பலன் பெறலாமே.

- Advertisement -