பணத்தை நம் வசம் ஈர்க்க எந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவது? பண வசிய எண்ணெயை தயாரிக்கும் ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

மகாலட்சுமியை வசியம் செய்வது. பணத்தை வசியம் செய்வது என்று கூறினால், அதில் எந்த ஒரு தவறும் இல்லை. வசியம் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டாம். அதாவது மகாலட்சுமியின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும். முழுமையாக கிடைக்க வேண்டும். அதுவும் விரைவில் கிடைக்க வேண்டும். அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்? எப்படி வழிபட்டால் மகாலட்சுமியின் அருளை நம்மால் முழுமையாகப் பெற முடியும், என்ற வழிமுறையை நாம் தெரிந்து கொண்டு, முறைப்படி தீபம் ஏற்றி வழிபடும் முறையை தான், ‘வசியம்’ என்ற வார்த்தையில் குறிப்பிடுகின்றோம். நாம் மனதார உருகி, தீபம் ஏற்றி, வழிபடும்போது அந்த மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம்மீது விழுந்து விட்டால் போதும். நாம் கட்டாயமாக அந்த தேவியை வசியப்படுத்தி விட்டோம் என்பதுதானே அர்த்தம்!

mahalakshmi

வசியம் என்றால் மந்திர தந்திர வித்தைகளை வைத்து செய்வது கிடையாது. முதலில் இதை புரிந்து கொள்ளுங்கள். மகாலட்சுமிக்கு பிடித்தமான சில பொருட்களை எல்லாம் சேர்த்து நல்லெண்ணெயில் போட்டு, ஒரு தீப எண்ணெய் தயார் செய்து, லட்சுமி தேவிக்கு தீபம் ஏற்றுவதன் மூலம் நம்மால் கட்டாயமாக அந்த மகாலட்சுமியின் அருளை முழுமையாக, விரைவாக பெற முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மகாலட்சுமியின் மனம் குளிர கூடிய அந்த விசேஷ எண்ணையை எப்படி தயார் செய்வது என்பதை பற்றிய பதிவுதான் இது.

புதியதாக வாங்கிய ஒரு மண்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். துளசி, வில்வம் இலை, தாமரை பூ, மல்லிகை, இவை அனைத்தையும் சரிசமமாக எடுத்துக் கொண்டு, அந்த எண்ணெயில் போட்டு நன்றாக 1 மணி நேரம் காய்ச்ச வேண்டும். என்னை நன்றாக காய்ந்த பிறகு அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூள், சிறிதளவு சந்தனம், 2பாதாம் போட்டு நன்றாக சூடு ஆறிய பின்பு, வடிகட்டி வாசம் மிகுந்த எண்ணையை எடுத்துக் கொள்ளலாம். வடிகட்டிய பின்பு அரை லிட்டர் அளவு நல்லெண்ணெய் கிடைத்தால், அதே அரை லிட்டர் சுத்தமான பசு நெய்யை, வாசம் மிகுந்த அந்த நல்லெண்ணெயில் கலந்து விடவேண்டும்.

vilaku

மகாலட்சுமிக்கு பிடித்தமான எல்லா பொருட்களையும் சேர்த்து, மகாலட்சுமியை நம் வசப்படுத்திக் கொள்ள, மகாலட்சுமியின் ஆசிர்வாதம் சீக்கிரம் நமக்கு கிடைக்க, பணத்தை நம் பக்கம் ஈர்க்க நம் வீட்டில் ஏற்றுவதற்கு தகுந்த எண்ணை இதுதான். மகாலட்சுமிக்கு பிடித்தமான இந்த வாசம் நாம் ஏற்றும் தீபத்தில் நிறைந்திருக்கும். கட்டாயம் நம் வீட்டில் துரதிஷ்டம் அனைத்தும் துரத்தி அடிக்கப்படும். பின்பு பணமானது நம் வசம் வரத்தான் செய்யும்!

- Advertisement -

agal vilakku

இந்த தீப எண்ணெயை பவுர்ணமி அன்றோ அல்லது ஒரு வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்ததாக புதிதாக வாங்கப்பட்ட ஒரு மண் அகல் விளக்கில் பசு சானத்தை மெழுகி, வெயிலில் காயவைத்துக் கொள்ள வேண்டும். தினம்தோறும் இந்த அகல் விளக்கில் தீபம் ஏற்றலாம். அதன்பின்பு அந்த அகல் விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ளுங்கள். இந்த எண்ணையை ஊற்றி, இரட்டை பஞ்சு திரி போட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் வழக்கம்போல தீபத்தை ஏற்றலாம். இந்த தீபத்தை நீங்கள் ஏயற்றிய சில நாட்களிலேயே உங்கள் வாழ்வில் நடக்கும் நல்ல மாற்றத்தை உங்களால் நிச்சயம் உணர முடியும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த சின்ன சின்ன தவறுகள் கூட நமக்கு பெரிய பாவத்தை தேடித்தரும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi arul pera. Mahalakshmi kadatcham Tamil. Deepam etrum ennai. Mahalakshmi vasam seiyya Tamil.