இந்த சின்ன சின்ன தவறுகள் கூட நமக்கு பெரிய பாவத்தை தேடித்தரும்!

kali siva anger
- Advertisement -

முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் இருப்பது, பெற்றோரை கொடுமை செய்வது, பெண்களை கொடுமை செய்வது, முதியவர்களை மதிக்காமல் இருப்பது, குழந்தைகளை கொடுமை செய்வது, பசுக்களை துன்புறுத்துவது, வாயில்லா ஜீவன்களை அடிப்பது, இப்படி பெரிய பெரிய தவறுகளை செய்தால் தான் நமக்கு பாவம் ஏற்படும் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் அன்றாட வாழ்வில், நமக்குத் தெரியாமல் செய்யும் சில வகையான தவறுகள் கூட நமக்கு பாவத்தையும் கஷ்டத்தையும் தேடி தந்துவிடும் என்று நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தவறுகளை நாம் இனி அறியாமலும் கூட செய்யக் கூடாது, என்பதற்காகவும், இந்த தவறுகளை நாம் செய்வதன் மூலம் நமக்கு அடுத்த ஜென்மத்தில் பாவங்கள் தொடரும் என்பதற்காகவும், இந்த ஜென்மத்திலும் கஷ்டங்கள் வரும் என்பதையும், இனிமேல் இந்தத் தவறுகளைச் செய்யக் கூடாது என்பதற்காகவும் தான் இந்த பதிவு.

arasa-ilai

நம்முடைய வீடுகளின் அருகில் அரச மரங்கள் இருந்தால் அதன் கிளைகளை நாம் கட்டாயமாக வெட்டக்கூடாது. அந்த மரத்திலிருந்து கிளைகள் தானாக உடைந்து விழுந்தாலும், அதை யாகத்திற்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, நம் வீட்டில் அடுப்பெரிக்கவோ அல்லது மற்ற ஏதாவது ஒரு பயன்பாட்டிற்கோ கட்டாயமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது கோவில்களில் அன்னதானம் செய்ய பயன்படுத்தப்படும் அடுப்பில் வேண்டுமென்றால் எரித்துக் கொள்ளலாமே தவிர, கட்டாயம் நம்முடைய வீடுகளில் அரச மரக் கிளைகளை எரிய விடவே கூடாது. இது பெரிய பாவச் செயலாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சுடுகாடு, மயானம் இந்த இடங்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச காலத்தில் இல்லாமலேயே போய்விடும் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் மின்சார மயானங்கள் வந்துவிட்டன. இருப்பினும் மயானங்களாக இருக்கும் அந்த இடத்தில் சிவபெருமான் குடி கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட அந்த இடத்தில் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற தவறை யாரும் செய்யமாட்டோம். யாராவது செய்தால் கூட அது தவறு என்று சொல்லுவது மிகவும் சிறந்த ஒன்று. இப்படிப்பட்ட சிவன் வசிக்கும் இடத்தில் சிலர் குப்பைகளைக் கொண்டு போய் போடுவதும் பாவச் செயலாக கருதப்படுகிறது. முடிந்தவரை இந்த தவறை தவிர்த்து கொள்ளுங்கள்.

vilakkai anaipathu

விளக்கினை வாயால் ஊதி அணைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். எதற்காக இப்படிக் கூறுகிறார்கள் என்றால், மரணம் நிகழ்ந்த வீட்டில் தான் இப்படி ஒரு பரிகாரம் செய்யப்படும். இப்படி நம் வீட்டில் செய்தால் அது ஒரு பெரிய பாவ செயலாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தவறை நம்மில் யாரும் செய்வதில்லை. இருந்தாலும் விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? முடிந்தவரை பிறந்தநாளன்று மெழுகேவர்த்தியை வாயால் ஊதி அனைப்தையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

நம்மில் பெரும்பாலானோர் அம்மன் கோவிலுக்கு சென்றால் அங்கிருந்து எலுமிச்சை பழத்தை பிரசாதமாக நம் வீட்டிற்கு வாங்கிக்கொண்டு வருவோம். அதை என்ன செய்வது? நம் வீட்டில் கட்டாயம் வைத்து அழுக விடக்கூடாது. அழுகிய பழத்தில் தீய சக்தியுனது புகுந்துவிடும். இது நமக்கு பெரிய பிரச்சனையை தான் கொண்டு வரும். இதனால் இந்த பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்த உடனேயே அதில் இருந்து சாறு எடுத்து, சிறிது தேன் கலந்து குடித்து விடுவது நல்லது. கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பழத்தின் சாறில் கட்டாயமாக உப்பு கலக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

sun1

நம் வீடுகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாளில், திதி கொடுப்பவர் கட்டாயமாக சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து, பல் துலக்கி குளித்து இருக்க வேண்டும். இது ஒரு முக்கிய சாஸ்திரமாக கூறப்பட்டுள்ளது. திதி அன்று சூரிய உதயத்திற்கு பின்பு பல், தேய்த்து குளிப்பது பாவச் செயலாக கருதப்படுகிறது.

- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் பழைய சாப்பாட்டை அடுத்தவருக்கு தானமாக கொடுப்பது பாவச் செயலாக கருதப்படுகிறது. கூர்மையான பொருட்களான கத்தி, கத்திரிக்கோல், ஊசி இவைகளை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுத்தால் வீட்டிலிருக்கும் தம்பதியருக்கு வாக்குவாதம், பிரச்சனை ஏற்படும். பழைய துணியை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுத்தால் நமக்கு துரதிஷ்டம் வந்துவிடும். அதோடு இது ஒரு பெரிய பாவச் செயல். இனி தெரியாமலும் கூட மேற்கண்ட பாவங்களை யாரும் செய்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக உப்பு வாங்கி வீட்டில் வைத்து விட்டால் மட்டும் போதுமா? உப்பை முதலில் என்னதான் செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Paavam. Pavam in Tamil. Pavam theera. Seitha paavam theera. Paavam pokka pariharam.

- Advertisement -