மகாலட்சுமி தாயாரின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்தால் அவருக்கு பணவரவில் எந்தவித குறையும் இருக்காது. வீட்டில் செல்வ செழிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். அள்ள அள்ள குறையாத பணவரவு ஏற்படும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு பணத்தை வைக்கக்கூடிய பணப்பெட்டியை எந்த முறையில் எல்லாம் பராமரிக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வீட்டில் பணம் பெருக பரிகாரம்
பணத்தை சேர்த்து வைக்கக்கூடிய பணப்பெட்டி என்பது மிகவும் முக்கியமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. அந்த பணப்பெட்டியை நாம் முறையாக பராமரித்தோம் என்றால் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும், எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது, எப்படி பூஜை செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்று பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
பணப்பெட்டி என்பது முடிந்த அளவிற்கு தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பெட்டியாக இருக்க வேண்டும். தேக்கு மரத்தில் செய்த பெட்டியில் பணத்தை நாம் வைக்கும் பொழுது அது அங்கேயே தேங்கி இருக்கும் என்று கூறப்படுகிறது. தேக்கு மரம் கிடைக்காதவர்கள் சந்தன மரத்தை உபயோகப்படுத்தலாம். அந்த அளவிற்கு வசதியில்லை என்பவர்கள் நாம் பணம் வைக்கும் இடத்தில் தேக்கு மரக்கட்டையோ அல்லது சந்தன கட்டையோ வைக்கலாம்.
அடுத்ததாக கல்லாப்பெட்டியில் அப்படியே பணத்தை வைப்பதற்கு பதிலாக கோவிலில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய பட்டுத் துணியை வாங்கி வந்து விரித்து அதற்கு மேல் பணத்தை வைக்கும் பொழுது பணவரவு என்பது அதிகரிக்கும். அந்த பணப்பெட்டியில் பச்சை கற்பூரம், வெள்ளருக்கு வேர், மஞ்சள் பிள்ளையார், அருகம்புல் போன்றவற்றை வைப்பதும், மேலும் சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்ட தங்க நாணயங்களையும் வைக்க தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெறும்.
இதோடு மட்டுமல்லாமல் கல்லாப்பெட்டியின் உள்புறத்தில் பெருமாள் படத்தை ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். கல்லாப்பெட்டியை மூடும் கதவு இருக்கும் இல்லையா அந்த கதவின் உள்புறம் மகாலட்சுமியின் படத்தை ஒட்டி வைக்க வேண்டும். மகாலட்சுமி, கஜலக்ஷ்மி, தானிய லட்சுமி இந்த மூன்று லக்ஷ்மிகளில் யாராவது ஒருவருடைய படத்தை ஒட்டி வைக்க வேண்டும். அப்படி ஒட்டிவைக்கும் பட்சத்தில் அந்த கதவை நம் மூடும் பொழுது மகாலட்சுமி தாயாரும் பெருமாலும் எதிரெதிரே இருப்பார்கள்.
இந்த முறையில் நாம் கல்லாப்பெட்டியில் மகாலட்சுமியின் படத்தை வைத்தோம் என்றால் அந்த இடத்தில் மகாலட்சுமியின் அருளும் பெருமாளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். முடிந்த அளவிற்கு கல்லாப்பெட்டியை இருட்டு அறையில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் சிறப்பு. புதிதாக யாராவது வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் அவர்கள் கல்லாப்பெட்டியை பார்க்கிறார்கள் என்னும் பட்சத்தில் அவர்கள் சென்ற பிறகு சிறிது தண்ணீரில் கல் உப்பையும் மஞ்சள் துளையும் கலந்து வீடு முழுவதும் தெளித்து விட தீய எண்ணங்களுடன் பார்த்த பார்வை கண் திருஷ்டியாக மாறாமல் நம்மை விட்டு விலகி சென்று விடும்.
மேலும் பணத்தை கல்லாப்பெட்டியில் வைக்கும் பொழுது எண்ணி வைக்கக்கூடாது. எண்ணி வைக்கும் பொழுது அது பெருகுவதற்குரிய வாய்ப்புகள் என்பது குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் அமாவாசை தினத்தில் மாலை நேரத்தில் மகாலட்சுமி பூஜை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு பணத்தால் ஏற்பட்ட தோஷங்களும் கண் திருஷ்டிகளும் நீங்கி பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:கண் திருஷ்டி விலக ஆடி ஞாயிறு பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த வழிமுறைகளை முறையாக நாம் பின்பற்றி அதோடு நம்முடைய கடின உழைப்பையும் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் மகாலட்சுமியின் அருளால் நம் வீட்டில் பணம் பெருகிக்கொண்டே இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.