உங்கள் வீட்டின் இந்த பகுதியில் மட்டும் இதெல்லாம் இருந்தால் இது தான் நடக்கும்! இதை யாராலும் தடுக்க முடியாது.

vastu-tip

ஒரு வீட்டில் மிக முக்கியமாக இருக்கும் திசைகள் இரண்டு. அதில் முதலாவதாக வடகிழக்கு திசையும், இரண்டாவதாக தென்மேற்கு திசையும் கூறப்படுகிறது. வடகிழக்கு திசை வரவு என்றால், தென்மேற்கு திசை செலவாக அமைந்திருக்கிறது. வடகிழக்கு மூலையில் கனமான பொருட்கள் இல்லாமல் வெட்ட வெளியாக இருப்பது தான் நல்லது. அதற்கு நேர் எதிரே இருக்கும் இந்த தென்மேற்கு திசை எதிர்பதமாக மூடியிருக்க வேண்டும். வடகிழக்கு திசை பிறப்பு என்றால் தென்மேற்கு திசை இறப்பாக கருதப்படுகிறது. இத்தகைய தென்மேற்கு திசையை பற்றிய விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

vastu 1

வாஸ்து சாஸ்திரத்தின்படி தென்மேற்கு திசையை நைருதி மூலை அல்லது கன்னி மூலை என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் தெற்கு திசையும், மேற்கு திசையும் இணையும் அந்த இடத்தை தான் தென்மேற்கு திசை என்று கூறுகிறோம். தென்மேற்கின் வழியே தான் வீட்டிற்குள் கெட்ட அதிர்வலைகள் வருவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அதனால் தான் அந்த இடம் எப்பொழுதும் மூடிய படி இருக்க வேண்டும். அந்த இடத்தில் எவ்வளவு கனமான பொருட்களையும் நாம் வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக தென் மேற்கு மூலையில் படுக்கை அறையை அமைப்பது தான் உசிதமானது. அதுவும் குடும்பத் தலைவரின் படுக்கை அறை தென் மேற்கு மூலையில் அமைந்து இருப்பது அதிர்ஷ்டத்தை தரும். தென்மேற்கு மூலையில் கட்டாயம் தலைவாசல் இருக்கவே கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் ஆரோக்கிய பாதிப்புகளும், பணக் கஷ்டமும் இருந்து கொண்டே இருக்கும். தென்மேற்கு மூலையில் கழிப்பறை, குளியலறை போன்றவற்றை அமைத்து கொள்ளலாம்.

vastu-direction

வடகிழக்கு திசையில் பணத்தை ஈர்ப்பதற்கான நல்ல அதிர்வலைகள் எப்படி இருக்கிறதோ? அதே போல தென்மேற்கு திசையில் நேர்மறை எண்ணங்களை ஈர்க்கக்கூடிய அதிர்வலைகள் இருக்கும். அதனால் எப்பொழுதும் தென்மேற்கு மூலையை மட்டும் தேவையில்லாத குப்பைகளை போட்டு வைத்திருப்பது தவிர்ப்பது நல்லது. நல்ல எண்ணங்களையும், நல்ல அதிர்வலைகளையும் அதே போல் எதிர்மறையான அதிர்வலைகளையும் கூட எளிதில் ஈர்த்து விடும் தன்மை தென்மேற்கு மூலைக்கு உண்டு. இதனால் அந்த இடத்தில் நேர்மறையான அதிர்வலைகளை கொடுக்கும் பொருட்களை வைக்க வேண்டும்.

- Advertisement -

வாஸ்து சாஸ்திரத்தில் நேர்மறை ஆற்றல்களை வெளியிடம் வாஸ்து பொம்மைகள் வாங்கி வைக்கலாம். அதிக கனமுள்ள பொருட்களை அந்த இடத்தில் வைக்கலாம். தென்மேற்கு மூலையில் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற பொருட்கள் இருந்தால் அதனை மூடி வைப்பது நல்லது. தென்மேற்கு மூலையின் மேல்தளத்தில் நல்ல அதிர்வலைகளை உண்டாக்கும் சப்தம் தரக்கூடிய பொருட்களை வாங்கி மாட்டிக் கொள்ளலாம். இதனால் வீட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.

vastu-sound-chimes

தென்மேற்கு மூலையில் கழிப்பறை இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசக் கூடிய அமைப்பாக வைத்திருப்பது கூடாது. கழிப்பறையில் நறுமணம் மிக்க பொருட்களை வாங்கி வைப்பது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். கழிப்பறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் நல்லது.

bathroom-freshner

தென்மேற்கு மூலையில் படிக்கட்டு போன்றவை இருந்தால், அதற்குக் கீழே அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மணிபிளான்ட், கற்றாழை போன்ற செடிகளை வளர்ப்பது பண வரவை அதிகரிக்கும். தென்மேற்கு மூலையில் மகாலட்சுமி கடாட்சத்தை உண்டாக்கக்கூடிய பொருட்களை தவிர்த்து, அவற்றை வடகிழக்கிலும், நேர்மறை அதிர்வலைகளை உண்டாக்கக்கூடிய மற்றும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய பொருட்களை வாங்கி தென்மேற்கு மூலையில் வைப்பதும் வீட்டில் பண வரவை அதிகரிக்கும். நிம்மதி இருக்கும்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் தலைவைத்து தூங்க வேண்டிய திசை இதுதான்! இந்த திசையில் தலைவைத்து தூங்கினால் கோடீஸ்வரர் ஆகலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.