மணி பர்ஸ் வாங்கும் போது இப்படி வாங்கி பணம் வைத்து பாருங்கள், அள்ள அள்ள குறையாமல் பணம் பெருகிக் கொண்டே இருக்கும். பர்சில் எப்போதும் பணம் பெருக சூட்சம ரகசியம்.

money purse sukkiran
- Advertisement -

முதலில் பணம் நம் கைக்கு வரும் போது அதை வைக்கும் இடமே இந்த மணி பர்ஸ் தான். அதன் பிறகு தான் அந்த பணம் வீட்டின் பூஜை அறைக்கு கூட செல்லும். அதனால் நம் கைக்கு வரும் பணம் முதல் முதலில் வைக்கப்படும் இந்த மணிபர்ஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக ஒன்றாக கருதப்படுகிறது. இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மணி பர்ஸை குறித்த சில தகவல்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மணி பர்ஸில் பணம் சேர வழிகள்:
முதலில் இந்த மணிபர்சை வாங்கும் போது நாம் சரியானதாக தேர்வு செய்து வாங்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் இந்த மணிபர்சை பொருத்த வரையில் கருப்பு நிறத்தில் தான் வாங்குவார்கள். அப்படி இல்லாமல் ஒவ்வொருவரின் ராசிக்கும் ஒவ்வொரு நிறம் உகந்ததாக இருக்கும். அந்த வண்ணங்களில் மணி பர்ஸ் வாங்கும் பொழுது அது பணத்தை தக்க வைக்கும் தன்மை உண்டாகும். இந்த ராசி குறித்த நிறம் தெரியாதவர்கள் பொதுவாக சிகப்பு நிறத்திலான மணி பர்ஸை பயன்படுத்துவது சிறந்தது

- Advertisement -

அத்துடன் இந்த மணி பர்சானது புகழ் பெற்ற ஆலயங்கள் இருக்கும் இடத்திலோ அல்லது ஆலயத்தின் அருகில் உள்ள இடங்களிலோ தெய்வ அனுகிரகம் பெற்ற இடங்களிலோ வாங்கும் பொழுது அதற்கான பண ஈர்ப்பு தன்மை அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இத்துடன் இந்த மணி பர்சானது சுக்கிர ஓரையில் வாங்குவது மிக மிக நல்லது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

மணிப்பர்சை வெள்ளிக் கிழமைகளில் வாங்குவதும் மிகுந்த யோகத்தை கொடுக்கும். அது மட்டும் இன்றி தெய்வத்திற்கு உகந்த நல்ல நாட்களில் இதை வாங்குவது மேலும் மேலும் பணத்தை ஈர்க்கும் ஆற்றலை அதிகரிக்கும். நமக்கு சந்திராஷ்டமம் இருக்கும் நாளில் மணிபர்சை வாங்கவே கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இப்படி பார்த்து பார்த்து வாங்கும் மணிபர்சை நாம் பயன்படுத்தும் முறையும் சரியானதாக இருக்க வேண்டும். அதில் தேவை இல்லாத பில், பேப்பர் போன்றவற்றை எல்லாம் வைக்கக் கூடாது. முடிந்த வரையில் மணிபர்சில் பணம் மட்டுமே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் இன்றி அந்த பணத்தை நேர்த்தியாக அடக்கி வைக்க வேண்டும்.

இந்த மணிப்பரிசில் எப்போதும் ஒரு துண்டு பட்டையை வைத்து விடுங்கள். இதற்கு சமையலுக்கு பயன்படுத்தும் பட்டையல்லாது சுருள்பட்டை என்று கடைகளில் விற்கும் அந்த பட்டையை வாங்கி ஒரே ஒரு துண்டை எப்போது மணி பரிசில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் சிறிதளவு பச்சை கற்பூரம் ஒரு ஏலக்காய் ஒரு பேப்பரில் மடித்து உள்ளே வைத்து விடுங்கள். இவையெல்லாம் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் பெற்ற பொருள்கள். இவைகள் இருக்கும் இடத்திலே பண ஈர்ப்பு அதிகமாக இருக்கும். இந்தப் பொருட்களை எல்லாம் அமாவாசை பௌர்ணமி நாட்களில் எடுத்து விட்டு வேறு புதிதாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: நந்தி தேவரின் காதில் நாம் எதை எப்படி முறையாக சொன்னால் நமது அனைத்து கஷ்டங்களும் தீருவதோடு வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் தெரியுமா?

இனி நீங்கள் மணிபர்ஸ் வாங்கும் போது இது போன்ற தகவல்களை கவனத்தில் வைத்துக் கொண்டு வாங்குங்கள். அதை போல் அதை பராமரிக்கும் போதும் இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு கையாளும் போது, நிச்சயமாக அதில் பணப்புழக்கம் அதிகரித்து பரிசல் பணம் இல்லை என்று சொல்லும் நிலையே உங்களுக்கு ஏற்படாது. மணி பர்சிகான இந்த ஆன்மீக தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் இதே முறையை கடைப்பிடித்து பார்க்கலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -