மூச்சி பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

Moochi-thinaral

மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டால் பலருக்கும் அது சிரமத்தை உண்டாக்கும். மூச்சுப்பிடிப்பு இருக்கும் நேரத்தில் மூச்சை நன்கு இழுத்து விட முடியாது. சிறிது இழுத்து விட முயற்சி செய்தாலும் வலிக்கும். இதனால் மூச்சி பிடிப்பு உள்ளவர்கள் மெதுவாகவே மூச்சை விடுவது வழக்கம். ஒருவருக்கு மூச்சி பிடிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு பளு தூக்குவதால் மூச்சுப்பிடிப்பு ஏற்படும், சிலருக்கு மார்பு எலும்புகளில் உள்ள தசை நாறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம். சளி தொல்லை, ஆஸ்துமா போன்றவற்றால் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம், அஜீரணம் சம்மந்தமான நோய் உள்ளவர்களுக்கும் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம். மூச்சுப்பிடிப்பு குணமாக சித்த மருத்துவம் கூறும் சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

moochu pidippu

குறிப்பு 1 :
பெருங்காயம், சுக்கு, சூடம், சாம்பிராணி ஆகிய நான்கையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதை வடித்த கஞ்சியில் போட்டு நன்கு கலக்க வேண்டும். அதன் பிறகு கஞ்சியை சூடு படுத்தி வலி இருக்கும் இதில் ஒரு நாளைக்கு மூன்று வேலை வீதம் தடவி வந்தால் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.

குறிப்பு 2 :
வாயு தொல்லையால் மூச்சு பிடிப்பு ஏற்பட்டால், கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், பனைவெல்லம் ஆகிய நான்கையும் நன்கு இடித்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும், வயிற்று வலி குறையும், வாயு தொல்லையால் மூச்சி பிடிப்பு ஏற்பட்ருந்தால் அதுவும் நீங்கும்.

Mint leaf(puthina)

குறிப்பு 3 :
ஆஸ்துமா மற்றும் வீசிங் நோயால் மூச்சி பிடிப்பு ஏற்பட்டால் தினமும் காலையில் ஒரு கற்பூர வள்ளி இலையை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் நுரை ஈரல் நன்கு செயல்படும். மூச்சி பிடிப்பு நீங்கி நன்கு சுவாசிக்க முடியும்.

- Advertisement -

karporavalli

மேலே கூறிய குறிப்புகளில் உங்களுக்கு உகந்ததை பயன்படுத்தி மூச்சி பிடிப்பில் இருந்து விடுபடலாம். 10 சதவிகிதம் பேருக்கு மூச்சி பிடிப்பு ஏற்பட்டால் அது மாரடைப்பிற்கு அறிகுறியாக இருக்கிறது. ஆகையால் மூச்சி விட மிகுந்த சிரமம் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

இதையும் படிக்கலாமே:
குழந்தை சிகப்பாக பிறக்க வழிமுறை

English Overview:
This article discuss about the breathing touble(moochu pidippu) in tamil. There are some natural medicine for breathing trouble((moochu pidippu treatment). All those natural medicines are discussed in this article. The reason for the problem also discussed.