உங்க நகத்தில் இது இருக்கான்னு பாருங்க! சீக்கிரமே இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். மூட நம்பிக்கையும், அதில் ஒளிந்துள்ள அதிர்ஷ்ட யோகங்களும்!

நாம் சிறு வயதில் இருந்தே சில விஷயங்களை ஆழமாக நம்பி இருப்போம். அது யாரோ ஒருவர் சொன்னார்கள் அல்லது நம்முடைய முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக நாம் நம்பவில்லை. அவர்கள் சொன்னது நமக்கு அப்படியே நடந்து இருக்கும், அதனால் நாம் நம்பி இருபோம் அவ்வளவுதான். அது மூடநம்பிக்கையா? இல்லையா? என்பதெல்லாம் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. அந்த வகையில் இந்த ஒரு விஷயமும் நமக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்று சொல்வார்கள். அது என்ன விஷயம்? என்ன மாதிரியான அதிர்ஷ்டத்தை கொடுக்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

Kagam

பெரும்பாலும் 90களில் பிறந்தவர்களுக்கு நிச்சயமாக இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. இதை சொல்லி கொடுத்தது 80கள் தான் என்பதால் அவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அப்போதெல்லாம் மேலே பறக்கும் அண்டங்காக்கையை பார்த்து, நம் கைகளில் இருக்கும் இரண்டு நகங்களையும், அதாவது ஒரு கையில் இருக்கும் நகங்களை, இன்னொரு கைகளில் இருக்கும் நகங்களுடன் உரசினால் பூ விழும் என்பார்கள். அது அதிர்ஷ்டத்தை தருவாதாக கூறுவார்கள்.

நகத்தில் வெள்ளையாக புள்ளிகள் போன்று திடீரென தோன்றும் பார்த்து உள்ளீர்களா? இதைத் தான் நகத்தில் பூ விழுவது என்று சொல்வார்கள். இதற்கு அறிவியல் பூர்வமாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இப்படி பூ விழுந்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்று நம்பப்பட்டது. நகங்களில் பூ விழுந்தால் நமக்கு அடுத்த சில நாட்களிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தாடைகள் கிடைக்கும் என்பது யோக பலன் ஆகும்.

nail-white-dot

இது உண்மையிலேயே நிறைய பேருக்கு நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் கவனித்து பார்த்தால் உங்களுக்கே புரியும் உங்கள் நகங்களில் இது போல் பூ விழும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு கொஞ்ச நாளில் புத்தாடைகள் கிடைக்கும். ஒன்றல்ல நிறையவே கிடைக்கும் என்பது தான் இதில் இருக்கும் வியப்பிற்குரிய உண்மை. இவைகள் நடக்காத வரை மூடநம்பிக்கை தான், நடக்கும் பொழுது தான் அது அதிசயமாக மாறுகிறது.

- Advertisement -

ஆனால் அறிவியல் நகத்தில் பூ விழுவது என்பது உடம்பில் ஜிங்க் அல்லது கால்சியம் குறைபாட்டினால் நகத்தில் இது போன்ற வெள்ளை புள்ளிகள் ஏற்படுகிறது என்று கூறுவதாகவும், ஒரு சிலர் எப்போதாவது நம்மை அறியாமலேயே நாம் நகத்தில் பலமாக இடித்திருப்போம். அதனுடைய தாக்கம் நகம் வளர வளர இது போன்ற புள்ளிகளாகத் தெரியும் என்றும் கூறுகிறார்கள். எது உண்மை? என்பது நமக்கு தெரியவில்லை.

itchy-plams

ஆனால் நகத்தில் பூ விழுவது அதிர்ஷ்டம் தரும், உள்ளங்கை அரித்தால் பணம் வரும், தலையில் பேன் அதிகம் இருந்தால் காசு தங்கும் என்றெல்லாம் கூறுவது மூடநம்பிக்கையாக இருந்தாலும், அதனை நம்புவதற்கும் சுவாரசியமாகத் தான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இது போன்ற பல்வேறு சுவாரஸ்யமான கருத்துக்களும், அதனால் வரும் அதிர்ஷ்டங்களும் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கும்.

money

ஒரு சிலருக்கு அது உண்மையில் நடக்கும் பொழுது வியப்பாக பார்ப்பார்கள் என்பது தான் உண்மை. உள்ளங்கை அரிக்கும் பொழுது உடனே இந்த பழமொழி தான் நம் எல்லாருக்கும் ஞாபகத்திற்கு வரும். அன்றைய நாளில் பணம் வருமா? என்றெல்லாம் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருப்போம். வரவில்லை என்றால் நம்மை நாமே நினைத்துக் கொண்டு சிரித்துக் கொள்ள வேண்டியது தான். வந்தால் அதிர்ஷ்டம் யாரை விட்டது!

இதையும் படிக்கலாமே
வீட்டில் கட்டாயம் இருக்கக் கூடாத 4 பொருட்கள்! இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் நடக்கும் விபரீதத்தை யாரும் தடுக்க முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.