மூதேவி முகத்தில் வந்து குடி கொள்ளாமல் இருக்க, தினமும் குளிக்கின்ற தண்ணீரில் ஒரு சிட்டிகை இதை போட்டு குளித்து பாருங்கள்.

manjal

நம்முடைய வீட்டில் பணம் காசு நிறைந்திருக்கின்றதோ இல்லையோ, தங்கம் வெள்ளி கொட்டி கிடைக்கின்றதோ இல்லையோ, நம்முடைய முகம் எப்போதுமே பொலிவோடு இருக்க வேண்டும். முகம் பொலிவாக எப்போதும் பிரகாசமாக இருந்தால், பணம் காசு தங்கம் வெள்ளி இவை அனைத்தும் நம்மை தேடி வரும். லட்சுமி கடாட்சம் நம் வீட்டில் இல்லை என்றாலும், நம் முகத்தில் இருந்தால் நம் வீடு தேடி லட்சுமி நிச்சயமாக வருவாள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. எப்போதுமே நம்முடைய முகத்தில் மூதேவி குடி கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalashmi3

அந்தக் காலத்தில் பெண்களுடைய முகம் எப்போதுமே லட்சுமிகடாட்சம் தோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மஞ்சள் பூசிக் குளிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். இது ஆன்மீக ரீதியான காரணம். இதோடு மட்டுமல்லாமல், அறிவியல் ரீதியாக மஞ்சள் பூசிக் குளிப்பதால் கிருமிகள் நம்முடைய முகத்தை தாக்காமல் இருக்கும். நம்முடைய முகத்தில் தான் காது மூக்கு கண் வாய் போன்ற துவாரங்கள் உள்ளன. இந்த துவாரங்களின் மூலம் கிருமிகள் உடலுக்குள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே, இந்த இடங்களிலெல்லாம் மஞ்சள் தேய்த்து பூசி குளித்து வந்தால், அந்த கிருமிகளை உள்ளே விடாமல் தடுத்து விடும், அந்த அளவிற்கு மஞ்சள் ஒரு கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டது.

இது வெரும் பெண்களுக்கு தானா? ஆண்களுக்கு ஏன் சொல்லப்படவில்லை? என்று சிலர் கேட்கலாம். ஆனால் அந்த காலத்தில் பெண்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டு வந்த ஒரு விஷயம் தான் மஞ்சள் பூசிக் குளிப்பது என்பது. பெண்கள் மிகவும் மென்மையானவர்கள், பலவீனமானவர்கள். அதாவது ஆண்களை ஒப்பிடும்போது பெண்களின் சருமமும் கொஞ்சம் நாசுக்கான தான். இதனால் கூட பெண்களுக்கு நோய்த்தொற்று சீக்கிரம் தாக்கிவிடும் என்பதற்காக இதை நம் முன்னோர்கள் சொல்லிவைத்து இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் மஞ்சளுக்கு முகத்தில் வளரும் ரோமத்தை தடுக்கும் சக்தி உள்ளது. ஆண்கள் மஞ்சளை பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

manjal1

இன்றைய சூழ்நிலையில் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது கிடையாது. சில பெண்களின் முகம் கலை இழந்து இருப்பதற்கு மஞ்சள் பூசி குளிக்காமல் இருப்பதும் ஒரு காரணம். ஆகவே, மஞ்சள் பூசி குளிக்க முடியாதவர்கள் கூட, நீங்கள் குறிக்கின்ற ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு கஸ்தூரி மஞ்சள் பொடியை போட்டு விடுங்கள். அதன்பின் அந்த தண்ணீரில் முகம் கழுவி, குளிப்பதன் மூலம் உங்களுடைய உடலிலும் முகத்திலும் நிச்சயம் பொலிவு ஏற்படும். சோக்கம் என்ற மூதேவி உங்களை வந்து அடையவே மாட்டாள். ஆன்மீக ரீதியாகவும் இது உங்களுக்கு நன்மையை தரும். அறிவியல் ரீதியாகவும் உங்களது உடலை இந்த கஸ்தூரி மஞ்சள் பாதுகாக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.  சாதாரண மஞ்சளில் நிறம் பிடிக்கும். கஸ்தூரி மஞ்சள் நிறம் பிடிக்காது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

- Advertisement -

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களும் இதை பின்பற்றி வரலாம். முடிந்தால் உங்களுடைய வீட்டின் அருகில் வேப்ப மரம் இருந்தால் தினம்தோறும் நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரு கொத்து வேப்ப இலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடியை போட்டு, 10 நிமிடங்கள் கழித்து எப்போதும்போல அந்த தண்ணீரை பயன்படுத்தி நீங்கள் குளித்துக் கொண்டு வரலாம்.

veppilai-water

சாதாரணமாக தண்ணீரில் குளிப்பதற்கும், இப்படியாக இந்த இரண்டு பொருட்களை சேர்த்து குளித்தபின்பு இருக்கும் புத்துணர்ச்சிக்கும் நிச்சயம் உங்களால் வித்தியாசத்தை உணரமுடியும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் குளிக்க தொடங்கிய முதல் நாளில் இருந்தே நன்றாக வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு காலையில் நீங்கள் இப்படி ஒரு முதல் படியை ஆரோக்கியமானதாக, எடுத்து வைக்கும் போது உங்களுக்கு ஒரு மனநிறைவு ஏற்படும். அந்த மன நிறைவே உங்களை வாழ்க்கையில் முன்னேறி விடும்.

இதையும் படிக்கலாமே
சிவபெருமானின் சிலைக்கு மேல் மட்டும் பெய்த மழை! இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த அதிசய வீடியோ காட்சி உங்களுக்காக!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.