மூலம் நட்சத்திர தோஷ பரிகாரம்

27 நட்சத்திரங்களில் மூலம் நட்சத்திரம் என்றாலே தோஷம் நிறைந்த ஒரு நட்சத்திரமாக பார்க்கப்படுகிறது. இந்த மூல நட்சித்திரத்தில் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ.

ஜோதிடம் என்பது வானியல் கலந்த ஒரு விஞ்ஞானம். உலகத்தில் மனிதர்கள் அனைவருமே ஜோதிடத்தில் கூறப்பட்டிருக்கும் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களின் ஆதிக்கத்தில் தான் பிறக்கின்றனர். இந்த 27 நட்சத்திரங்களில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறக்கும் சிலருக்கு அந்த நட்சத்திரத்தால் தோஷங்களும், பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அந்த வகையில் பெரும்பாலானோர் “மூலம்” நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் அவர்களுக்கும், பிறருக்கும் பாதிப்புகள் ஏற்படுவதை பற்றி அஞ்சுகின்றனர். மூல நட்சத்திரத்தை பற்றியும், மூல நட்சத்திரத்தின் தோஷங்களை நீக்குவதற்கான பரிகாரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

kethu

மூலம் நட்சத்திரம் “கேது” பகவானின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும். 27 நட்சத்திரங்களில் பத்தொன்பதாவது நட்சத்திரமாக மூலம் நட்சத்திரம் வருகிறது. நட்சத்திரங்களில் ராட்சஸ தன்மையை கொண்டது. மூல நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் பிறந்தவர்களால் அவர்களின் தந்தைக்கு பாதிப்புகள் ஏற்படும். மூல நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களால் அவர்களின் தாயாருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். மூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சொந்த வாழ்வில் பெரும்பாலான காலங்கள் பொருளாதார சிக்கல்கள் இருக்கும். மூல நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும்.

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் நட்சத்திர தோஷத்தை போக்கவும், அதிகமான நன்மைகளை பெறவும் இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினந்தோறும் காலையில், குளித்து முடித்ததும், விநாயக பெருமானை வழிபட்ட பின் மற்ற காரியங்களை செய்ய தொடங்குவது நன்மைகளை உண்டாக்கும். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களால் முடிந்த போது அடர்பழுப்பு(பிரவுன்) நிற ஆடைகளை வசதியில்லாதவர்களுக்கு தானம் அளிப்பது மூல நட்சத்திர தோஷத்தை போக்கும்.

poojai arai

கோவில்களில் திருவிழாக்கள், உற்சவங்கள் போன்றவற்றை தொடங்கும் போது கோவிலில் ஏற்றப்படும் கொடியை உங்கள் செலவில் செய்து கோவிலுக்கு காணிக்கையாக கொடுப்பது சிறந்த பரிகாரமாகும்.மூல நட்சத்திரத்தில் உங்களுக்கு குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் குழந்தை பிறந்த 27 ஆம் நாளில் நட்சத்திர சாந்தி பூஜை செய்வதால் குழந்தை மூல நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் பிறந்திருந்தாலும், எதிர்கால வாழ்க்கையில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் காக்கும். பூஜை சடங்குகளை செய்யும் வேதியர்களுக்கு அரிசி, ஆடை போன்றவற்றை தானமாக அளிப்பது நற்பலன்களை தரும்.

- Advertisement -

மூல நட்சத்திரத்தில் பிறந்த பல ஆண்களும் பெண்களும் திருமணம் தடை தாமதங்கள் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சித்தர்கள் கூறிய ஒரு எளிய பரிகாரம் உள்ளது. சிவன் கோயில் தல விருட்சத்தின் வேர்ப்பகுதியில் இருக்கும் மண் ஒரு கைப்பிடி, விநாயகரின் அம்சமாக இருக்கும் யானை கால் பட்ட மண் ஒரு கைப்பிடி, பால் சுரக்கும் பசுமாடு கால் பட்ட மண் ஒரு கைப்பிடி, பாம்பு புற்று மண் ஒரு கைப்பிடி, வயல்வெளி அல்லது கண்மாயில் இருக்கின்ற நண்டு வளை மண் ஒரு கைப்பிடி. கண்மாய் அல்லது ஊருணியில் இருக்கும் மண் ஒரு கைப்பிடி, ஆறு அல்லது கடற்கரை மண் ஒரு கைப்பிடி என எடுத்துவைத்து கொண்டு, மேற்கண்ட மண்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் உடல் முழுவதும் இந்த மண்ணை நன்கு பூசிக்கொண்டு 45 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் மூல நட்சத்திர தோஷம் நீங்கப் பெற்று, இந்த குளியலை மேற்கொள்ளும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 90 நாட்களுக்குள் திருமண நிச்சயம் நடக்கும்.

இதையும் படிக்கலாமே:
அனைத்து பிரச்சனைகளை போக்கும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள்

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Moola nakshatra pariharam in Tamil. It is also called as Moola natchathirathil pirandhavargal seiyavendiya pariharam in Tamil or Moola natchathiram in Tamil or Nakshatra dhosham in Tamil.