அனைத்து பிரச்சனைகளை போக்கும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள்

parigaram-logo

நாம் இப்போது வாழும் வாழ்க்கை என்பது நமது முற்பிறவி வினைகள் மற்றும் இப்பிறவியில் இதுநாள் வரை நாம் செய்த காரியங்களின் வினைப்பயனால் தீர்மானிக்கப்படுகிறது. இப்போது வாழும் வாழ்க்கையில் இதற்கு முன்பு வரை தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களுக்கான பலனை தற்போது அனுபவிப்பதாக பலரும் கருதுகின்றனர். தாங்கள் செய்த பாவங்களுக்காக வருந்துபவர்களுக்கு, அந்த செயல்களுக்காக ஏற்படும் கர்ம வினைகளின் கடுமைத்தன்மையை குறைக்கவும் அல்லது போக்கவும் சில “சக்தி வாய்ந்த பரிகாரங்கள்” என்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.

shiva

இன்று நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பல விதமான கஷ்டங்களுக்கு நாம் முன்பு செய்த செயல்களுக்கான கர்ம வினைப்பயன் தான் கரணம் என்பது இந்தியாவில் தோன்றிய “இந்து, புத்த, ஜைன” மதங்களின் கோட்பாடாகும். வாழ்வில் தொடர்ந்து பலவிதமான கடினமான சூழ்நிலைகள், கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் வாரத்தின் ஏதாவது ஒரு நாளில் அருகிலுள்ள சிவ பெருமான் கோவிலில் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து “ருத்ராபிஷேகம்” மந்திரத்தை ஜெபம் செய்து வருவது நல்லது. இந்த ருத்ரபிஷேக மந்திர ஜெபத்தை வாரத்திற்கு ஒரு நாள் என்கிற ரீதியில் பதினோரு வாரங்கள் செய்து வந்தால் உங்கள் வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

உங்களுக்கும் உங்களின் உறவினர்கள், நெருக்கமானவர்களுக்குமிடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தால் மாதத்தில் ஒரு வியாழக்கிழமை தினத்தில் ஒரு நபருக்கு தேவைப்படும் அரிசி மற்றும் கடலைப்பருப்புகளை யாசகர்களுக்கு தானமளித்து வந்தால் மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும். கிடைத்த வேலையை காப்பாற்றிக்கொள்ளவும், தற்காலிக பொருளாதார நெருக்கடி தீரவும் முழுமன விருப்பமில்லாவிட்டாலும் வெயில், மழை என்றும் பாராமல் வெளியில் அலைந்து திரிந்து செய்யும் வகையான வேலைகளை செய்கின்றனர். இவர்கள் சந்திரனின் வளர்பிறை தினங்களின் இரவு வேளைகளில் சந்திரனை பார்த்து கைகூப்பி வணங்கியவாறு “ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரோம் சஹ் சந்திரமஸேஹ் நமஹ” என்கிற மந்திரத்தை 11 முறை கூறி வந்தால் அலைச்சல்கள் அதிகம் இல்லாத வேலைவாய்ப்புகள் கிடைக்க அருள் புரிவார் சந்திர பகவான்.

சனி கிழமைகளில் அடர் நீல நிற ஆடைகளை அணிந்து சனி பகவானை வழிபட்டு வர அவரின் பூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். சனியால் ஏற்படகூடிய பாதிப்புகள் நீங்கும். உங்களின் தந்தை தொடர்ந்து உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்தாலோ, நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, ஒவ்வொரு ஞாயிறு அன்றும் யாசகர்களுக்கு உணவை அளிக்கும் போது, 10 பாதாம் பருப்புகளை கொடுத்து வர தந்தையின் ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்று விரைவில் நல்ல உடல் நலம் பெறுவார். வருடத்திற்கு ஒரு முறை உங்கள் வீட்டில் “மஹாம்ரித்துஞ்சய ஹோமம்” மற்றும் ஜெபத்தை செய்து வந்தால் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து விதமான கஷ்டங்களும் தீரும்.

இதையும் படிக்கலாமே:
புரட்டாசி மாதத்தில் புது வீட்டில் குடியேறாமல் இருப்பதற்கான காரணம் என்ன

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Powerful pariharam in Tamil.