- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமூன்றாம் பிறை பணவசிய தாந்திரீக பரிகாரம்

மூன்றாம் பிறை பணவசிய தாந்திரீக பரிகாரம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக பல வழிகளில் பல விதங்களில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பலர் இருக்கிறார்கள். இருப்பினும் ஒரு சிலருக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவர்களுடைய கஷ்டத்திற்குரிய பணவரவு என்பது வராமல் இருக்கும். அதையும் மீறி பண வரவு வந்தாலும் அந்த பணவரவு நல்ல செயல்களுக்காக பயன்படாமல் வீண் விரயமாக செலவாகி கொண்டு இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு பண வசியம் என்பது இல்லாமல் இருப்பது தான் இப்படி நடப்பதற்கு காரணம். இந்த பண வசியத்தை ஏற்படுத்துவதற்கு மூன்றாம் பிறை நாளன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

மூன்றாம் பிறை பரிகாரம்

மூன்றாம் பிறை என்பது சிவபெருமானின் தலையில் இருக்கக்கூடிய சந்திரனை குறிப்பது. இந்த மூன்றாம் பிறை நாளில் நாம் சிவ தரிசனம் செய்வதும் சந்திர தரிசனம் செய்வதும் பல மடங்கு பலனை நமக்கு வாரி வழங்கும் என்றே கூறலாம். யார் ஒருவர் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறையை தரிசிக்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களும் பெற்று எந்தவித குறையும் இல்லாமல் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய மூன்றாம் பிறையானது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. வியாழக்கிழமை என்பது குருபகவானுக்கு மட்டுமல்லாமல் குபேர பகவானுக்கும் உகந்த கிழமை. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரம் பண வசியத்தை அதிகரிக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று மாலை 6:00 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு இரண்டு ரூபாய் நாணயமும், கல் உப்பும் வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யக்கூடியவர்கள் குளித்திருக்க வேண்டும் என்பது முக்கியம். பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம், அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். முதலில் ஒரு சிறிய கிண்ணம் நிறைய கல் உப்பை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் இரண்டு ரூபாய் நாணயத்தையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு விரிப்பை விரித்து மேற்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு வலது கையில் இரண்டு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு சந்திர பகவானிடம் நிலவு வளர்ந்து முழுமதி ஆவது போல என்னுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான செல்வங்களும் வளர்ந்து சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு “ஓம் தத்பூர்ணாய நம” என்னும் மந்திரத்தை 15 நிமிடம் கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய இரண்டு ரூபாயை எடுத்து கிண்ணத்தில் வைத்திருக்கும் கல்லுப்பின் மேல் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த கல்லுப்பு கிண்ணமானது பூஜை அறையிலும் இருக்கலாம், சமையலறையிலும் இருக்கலாம். இரவு முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் அதாவது அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலையில் இந்த இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு பேப்பரில் மடித்து பணம் வைக்கும் இடத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சஷ்டி மூன்றாம் நாள் வழிபாடு

மூன்றாம் பிறை நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு எந்த அளவிற்கு நற்பலன்களை தருமோ அதே போல் இந்த தாந்திரீக பரிகாரமும் பண வசியத்தை அதிகரிக்கும் முழு நம்பிக்கையோடு செய்து முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்