100 கிராம் பாசிப்பருப்பு மட்டும் இருந்தாலே போதும், நாவில் கரையும் அல்வா 10 நிமிஷத்தில் ரெடி!

moong-dal-alwa
- Advertisement -

இனிப்பு வகைகளில் அல்வா என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் வாயில் வைத்தவுடன் நாவில் கரைந்து விடும் அல்வாவிற்கு தனி மவுசு தான். இதனால் தான் இருட்டுக் கடை அல்வா, திருநெல்வேலி அல்வா என்று விதவிதமாக அல்வாக்கள் பிரசித்தி பெற்றது. எவ்வளவோ பொருட்களை வைத்து நாம் அல்வாவை செய்து இருப்போம். ஆனால் வெறும் பாசி பருப்பு மட்டும் வைத்து எப்படி அல்வா கிண்டுவது? இதை செய்ய பத்து நிமிடம் போதுமானது. 100 கிராம் பாசிப்பருப்பு உங்களிடம் இருந்தால் போதும். கடகடன்னு செஞ்சி, கமகமன்னு சாப்பிடலாம். அது எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

moong_daal3

நாவில் எச்சில் ஊறும் பதத்திற்கு அல்வா செய்து கொடுத்தால் ஒரு அளவுக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது, திகட்டி விடும். ஆனால் பாசிப்பருப்பு அல்வா எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். இதற்கு நெய் கூட அதிக அளவு தேவைப்படாது. குறைந்த அளவு நெய்யை வைத்து ஒரு சில பொருட்களை சேர்த்து நிமிடத்தில் அல்வாவை தயார் செய்து விடலாம். உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பாசிப்பருப்பு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

- Advertisement -

பாசிபருப்பு அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
பாசிபருப்பு – 100 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
பால் பவுடர் அல்லது பால் – 1/2 கப்
முந்திரி பருப்பு – 10
பாதாம் பருப்பு – 5
பிஸ்தா பருப்பு – 5
நெய் – தேவையான அளவிற்கு.

dal-alwa

பாசிபருப்பு அல்வா செய்ய செய்முறை விளக்கம்:
பாசிப்பருப்பு அல்வா செய்வதற்கு பால் பவுடர் இல்லை என்றால் பால் சேர்த்துக் கொள்ளலாம். முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு உலர்த்திக் கொள்ள வேண்டும். உணர்த்திய இந்த பாசிப்பருப்பை ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ஐந்து நிமிடம் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஆறியதும் மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ரவை அளவை விட சிறியதாக கொரகொரவென்று அரைத்தால் போதும்.

- Advertisement -

சர்க்கரையை மிக்ஸியில் சுற்றி நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். எந்த அளவிற்கு பாசிப்பருப்பை சேர்க்கிறோமோ! அதே அளவிற்கு சர்க்கரையும் சேர்க்க வேண்டும். அதற்கு அளவை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்த பாசிப்பருப்பு மாவுடன், அரைத்து வைத்த சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை கப் அளவிற்கு பால் பவுடரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் பவுடர் இல்லாதவர்கள் அதனை தவிர்த்து விடுங்கள்.

nuts

பின்னர் உங்களிடம் இருக்கும் நட்ஸ் வகைகளில் என்ன இருக்கிறதோ! அதை வைத்தும் செய்யலாம். பொடிப் பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை நீங்கள் நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். இவை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதால் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். தேவையான பொழுது சட்டென அல்வா கிண்டி அசத்தி விடலாம்.

- Advertisement -

dal-alwa1

இப்போது இந்த கலவையிலிருந்து 2 கப் அளவிற்கு மாவை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடேறியதும், இரண்டு தேக்கரண்டி அளவிற்கு நெய் விட்டுக் கொள்ளவும். அதில் இந்த மாவை சேர்த்து குறைந்த தீயில் வைத்து இடைவிடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு கெட்டியானதும் பால் பவுடர் சேர்க்காதவர்கள் பாலையும், பால் பவுடர் சேர்த்தவர்கள் தண்ணீரையும் தேவையான அளவிற்கு சேர்க்க வேண்டும். இரண்டு கப் மாவிற்கு, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானது.

rice-halwa2

சிறிது நேரம் கிண்டி விட்டு மூடி வைத்து விடலாம். அடுப்பை குறைந்த தீயில் வைத்து இருப்பது அவசியம். ஒரு 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் நெய் தெளிந்து, அல்வா பதத்திற்கு நிறம் மாறி சூப்பராக பாசிப்பருப்பு வெந்து வந்திருக்கும். அவ்வளவு தாங்க! ரொம்ப ரொம்ப சுலபமா பத்து நிமிஷத்துல ஈசியா செஞ்சிடலாம். சுட சுட சாப்பிடும் பொழுது அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். நாவில் வைத்த உடனேயே கரைந்து போய்விடும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த அல்வாவை அடிக்கடி வீட்டில் செய்து எல்லோருக்கும் கொடுத்து, நீங்களும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே
மழைக்காலத்தில் இப்படி ஒரு டீயை மட்டும் ஒரு முறை போட்டு பாருங்கள்! நாள் முழுவதும் ஆக்டிவா இருப்பீங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -