ஒரு சொட்டு கூட எண்ணெய் குடிக்காத மொறு மொறு தட்டை இப்படித்தான் செய்யணும்? இது கடையில் வாங்கிய தட்டை போலவே மொறுமொறுன்னு கிடைக்கும்.

- Advertisement -

தட்டை, நிறைய பேருக்கு விருப்பமான ஸ்நாக்ஸ் இது. பெரும்பாலும் இதை நாம் வீட்டில் செய்ய மாட்டோம். கடையில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் கடையில் வாங்கிய தட்டை எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பது நமக்கு தெரியாது. நம்முடைய வீட்டிலேயே நம்முடைய கையாலேயே தட்டையை தட்டி சுட்டுக் கொடுத்தால், அது நிச்சயம் மனதிற்கு திருப்தி தரும்படி இருக்கும் அல்லவா. கடையில் வாங்க கூடிய தட்டையை நம் வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது. எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுப்பாக தட்டை சுடுவது எப்படி என்பதை பற்றிய ரெசிபி இதோ உங்களுக்காக.

thattai2

எண்ணெய் குடிக்காமல் மொறு மொறு தட்டை செய்முறை:
முதலில் 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பை தண்ணீரில் போட்டு 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன உரலில் தோல் உரித்த – 6 பல் பூண்டு, மிளகு – 10, சீரகம் – 1/2 ஸ்பூன், போட்டு நன்றாக இடித்து நுணுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 3 டேபிள் ஸ்பூன் அளவு பொட்டுக்கடலையை, மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக மாவாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் பச்சரிசி மாவு 2 கப், அரைத்த பொட்டுக்கடலை 3 டேபிள்ஸ்பூன், மிளகாய் தூள் 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், ஊற வைத்த கடலைப்பருப்பு, இடித்து வைத்திருக்கும் பூண்டு, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு முதலில் சுட சுட இருக்கும் எண்ணெயை இரண்டு டேபிள் ஸ்பூன் இதில் ஊற்றி ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

thattai2

எண்ணெய் மாவில் எல்லா இடங்களிலும் படும்படி கலந்து கொடுக்க வேண்டும். சூடு ஆறிய பின்பு, உங்கள் கையை கொண்டு இந்த மாவை நன்றாக பிசைந்து விட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இந்த மாவை பிசைய தொடங்க வேண்டும். மாவு நன்றாக கட்டியாக பிசைய வேண்டும். அப்போதுதான் தட்டை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுப்பாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிசைந்த இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். ஒரு கவர் அல்லது வாழை இலையில் எண்ணெய் தடவி, இந்த தட்டையை வைத்து மேலே ஒரு கவரை வைத்து தட்டையான கிண்ணம் அல்லது டம்ளர் ஏதாவது இருந்தால் அதை எடுத்து அழுத்தினால், வட்ட வடிவில் கிடைக்கும். இப்படி வட்ட வடிவில் தட்டிய தட்டையை உங்கள் விரல்களை கொண்டு அழுத்தி கொஞ்சம் மெல்லிசாக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: ஆந்திரா ஸ்டைல் கார சட்னி என்றால் சும்மாவா? காரசாரமான குண்டூர் கார சட்னியை சுவை மாறாமல் அரைப்பது எப்படி?

தட்டையை பொறித்து எடுப்பதற்கு எண்ணெயை அடுப்பில் வைத்து சூடு செய்யவும். இந்த தட்டைகளை எல்லாம் அந்த எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொறித்து எடுத்தால், சூப்பரான மொறு மொறு தட்டை தயார். கடையில் வாங்க கூடிய அரிசி மாவிலேயே இந்த தட்டையை செய்யலாம். சூப்பராக நமக்கு கிடைக்கும். விருப்பமுள்ளவர்கள் இந்த தட்டை ரெசிபியை மிஸ் பண்ணாம உங்க வீட்ல முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -