ஆந்திரா ஸ்டைல் கார சட்னி என்றால் சும்மாவா? காரசாரமான குண்டூர் கார சட்னியை சுவை மாறாமல் அரைப்பது எப்படி?

chutney4
- Advertisement -

ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் கார சட்னியை அரைத்து இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். சும்மா காரம் சுர்ருன்னு சாப்பிட நாக்குக்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இதை அரைக்க நிறைய கஷ்டப்பட வேண்டாம். நிறைய பொருட்கள் எல்லாம் தேவையில்லை. நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களை வைத்து மிக மிக எளிமையாக இந்த கார சட்னியை அரைக்கலாம். ஆந்திரா ஸ்டைல் சட்னி பிடிக்கும் என்பவர்கள், இந்த ரெசிபியை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. காரம் பிடிப்பவர்களும் இந்த சட்னியை மிஸ் பண்ண கூடாது. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த இன்ட்ரஸ்டிங்கான சட்னி ரெசிபி எப்படி இருக்கும் என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

10 லிருந்து 15 பல் தோல் உரித்த பூண்டை ஒரு சின்ன உடலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 10 லிருந்து 12 தோல் உரித்த சின்ன வெங்காயத்தையும் அந்த உடலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக நசுக்கி அதையும், எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். (சின்ன வெங்காயத்தை விட, பூண்டின் அளவு கொஞ்சம் கூடுதலாக இருக்க வேண்டும் அதை கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

அடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் காம்புகள் கிள்ளி, விதை நீக்கிய 10 வர மிளகாய், சின்ன கோலி குண்டு அளவு புளி, போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். இதுவும் அப்படியே ஊறட்டும். வரமிளகாயில் விதைகளை நீக்கி விட்டால் காரம் குறைந்து விடும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து ஊற வைத்த வரமிளகாய், புளி, உப்பு போட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையே இதில் ஊற்றி விழுதாக நைசாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், கருவேப்பிலை 2 கொத்து, போட்டு தாளித்து முதலில் இடித்து வைத்திருக்கும் பூண்டை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

- Advertisement -

பிறகு இடித்து வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் நன்றாக வதக்கி விடவும்‌. (இந்த இரண்டு பொருட்களும் கண்ணுக்குத் தெரியாமல் நன்றாக எண்ணெயில் வதங்கட்டும்.)

அடுத்தபடியாக அரைத்து வைத்திருக்கும் இந்த வர மிளகாய் புளி, உப்பு சேர்த்து அரைத்த விழுது இருக்கிறது அல்லவா. அதை கடாயில் ஊற்றி சுருள சுருள வதக்குகள். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் மேலே திரிந்து பிரிந்து வரும் அளவிற்கு வதக்கி, இறுதியாக 1/4 ஸ்பூன் வெல்லத்தூள் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: காலைல எழுந்து டிபன் பாக்ஸ் கட்டணுமா? 1 கைப்பிடி கொத்தமல்லி மட்டும் இருந்தால் 10 நிமிடத்தில் சுவையான மல்லி சாதம் தயார் செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!

அவ்வளவுதான் மணமணக்கும் கமகமக்கும் காரசாரமான குண்டூர் காரச்சட்னி தயார். இது யாருதான் பிடிக்காது என்று சொல்லுவார்கள். இது கொஞ்சம் காரசாரமான சட்னி என்பதால் இதில் நல்லெண்ணெயை கூடுதலாக சேர்த்துக் கொள்ளவும். யாருமே இந்த சட்னியை மிஸ் பண்ணாம ஒரே ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னியின் ருசிக்கு வீட்டில் இருப்பவர்களின் நாக்கு நிச்சயம் அடிமையாகிவிடும்.

- Advertisement -