மரணத்தையே தள்ளிப்போடக்கூடிய சக்திவாய்ந்த இந்த ஹோமத்தை ஒருமுறை செய்தால் போதும். ஜாதக தோஷம் முதல் நீண்ட நாள் நோயை தீர்ப்பது வரை பலவற்றிற்கு இந்த ஹோமம் தீர்வாக இருக்கும்.

sivan
- Advertisement -

பிறப்பு எப்படி இயற்கையானதோ, அதே போன்று தான் இறப்பு என்பதும் இயற்கை விதிக்கு உட்பட்டதாக உள்ளது. இந்த உலகில் எந்த உயிரும் இறப்பு எனும் நிகழ்வில் இருந்து தப்ப முடியாது. இதில் மனித இனமும் விதிவிலக்கல்ல என்றாலும் மற்ற எந்த உயிர்களைக் காட்டிலும் மனித இனத்திற்கு நீண்ட காலம் நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ வேண்டும் என்கிற ஆசை அதிகம் உள்ளது. அப்படி மனிதர்களுக்கு நோய்நொடிகள், அகாலமரணம் போன்ற எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் காக்கும் “ம்ரித்யுஞ்ய ஹோமம்” குறித்தும், இந்த ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பது குறித்தும் இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

“மிருத்யு” என்றால் மரணத்தையே வெல்பவர் என்பது பொருள். அனைத்து தீமைகளையும் அழிக்க வல்ல கடவுளான சிவபெருமானுக்கு “ம்ரித்யுஞ்ஜயன்” என்கிற ஒரு பெயரும் உண்டு. மரணத்தையே தடுக்கவல்ல மிருத்யுஞ்ஜய பெருமான் அருள் வேண்டி செய்யப்படும் ஹோமம் தான் ம்ரித்யுஞ்ஜய ஹோமம். நீண்ட காலம் நோய் நொடிகளால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள், மரணத்தை குறித்து மிகவும் பயப்படுபவர்கள், ஜாதகத்தில் இருக்கின்ற கிரக தோஷங்கள் நீங்க, துஷ்ட சக்திகளால் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த ம்ரித்யுஞ்ஜய ஹோமத்தை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

மகா சக்தி வாய்ந்த இந்த மிருத்யுஞ்ஜய ஹோமத்தை வீட்டில் செய்வதைக் காட்டிலும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளை தரக்கூடிய பரிகாரத் தலங்களாக விளங்கும் கோயில்களில் இந்த ஹோமத்தை செய்து கொள்வது சிறப்பான பலனைக் கொடுக்கும். இந்த மகா மிருத்யுஞ்ஜய ஹோமத்தை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் தமிழ் மாதங்களின் அடிப்படையில் வருகின்ற தங்களின் பிறந்த நாளன்று ஹோம பூஜை செய்வது சிறப்பு.

ஹோமம் செய்யும் தினத்தன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, தூய்மையான ஆடைகள் அணிந்து, உணவு ஏதும் உண்ணாமல் ஹோம பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு.

- Advertisement -

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்களை கொண்டு இந்த மிருத்யுஞ்ஜய ஹோம பூஜை செய்யவேண்டும். பூஜை முடிந்த பிறகு ஒரு சிறிய மண் குடுவையில் நீரை ஊற்றி, இருக்கைகள் இணைந்தாற்போல் அந்த குடுவையை ஏந்தி சிவபெருமானை நினைத்து, அவரின் முழுமையான அருளாசி வேண்டும் என சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த ஹோமம் 24 மணி நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு ஒரு முறை 4 பிரகாரங்களாக செய்யப்படும். ஹோமம் முடிந்த பிறகு இந்த ஹோம குண்டத்தில் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக தரப்படும். இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் வழிபடுவதும், அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதாலும் ஹோமம் செய்துகொண்ட நபர்களின் தோஷங்கள் அனைத்தையும் போக்கும்.

இந்த மிருத்தியுஞ்சய ஹோமத்தை செய்து கொள்ளும் நபர் மற்றும் அவரின் குடும்பத்தினரும் எல்லாவிதமான தீய சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள். மரணத்தையே தள்ளிப்போடும் சக்தி இந்த ஹோமத்திற்கு உண்டு. உடல் ஆரோக்கியம் குன்றி இருந்தாலும் இந்த ஹோமம் செய்து கொண்ட நபர்களுக்கு சிறிதுசிறிதாக உடல்நலம் மேம்பட்டு, நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

- Advertisement -