- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஎலி வால் போல் சுருண்டு இருக்கும் உங்கள் முடி காடு போல் அடர்த்தியாக வளர இந்த...

எலி வால் போல் சுருண்டு இருக்கும் உங்கள் முடி காடு போல் அடர்த்தியாக வளர இந்த ஒரு ஹேர் பேக் மட்டும் போதும்

- Advertisement -

ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இருக்கின்ற பொதுவான கவலை என்னவென்றால் அவர்களின் முடி வளர்ச்சி பற்றி தான். வெளியில் வேலைக்கு சென்று வருபவர்களாக இருந்தாலும், பள்ளி, கல்லூரிக்கு சென்று வருபவர்களாக இருந்தாலும் சரி இன்றய சூழ்நிலையில் சுற்றுச் சூழல் காரணமாக அதிகப்படியான மாசுபாடு ஏற்படுகிறது. எனவே இந்த மாசுக்கள் அனைத்தும் நமது தலை முடியில் நேரடியாக படுவதன் மூலம் அவை ஸ்கேல்பில் விடாப்பிடியாக ஒட்டிக்கொள்கின்றன. என்னதான் தலையில் ஷாம்பூ போட்டு சுத்தமாக குளித்தாலும் இந்த மாசுக்கள் அனைத்தும் ஸ்கேல்பை விட்டு வெளிவருவதில்லை. எனவே முடி கொட்ட ஆரம்பிக்கிறது. பொடுகு தொல்லை, பேன் தொல்லை போன்றவை உண்டாகிறது. புதிய முடி வளராமல் போகிறது. இவ்வாறு தலையில் ஏற்படுகின்ற ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ முறைகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால் இதன் மூலம் தேவையில்லாத பணவிரயம் தான் ஏற்படும். ஆகவே எளிமையாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து இந்த தலைமுடி பிரச்சனையை விரைவாக சரிசெய்யமுடியும். வாருங்கள் அது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, துளசி – ஒரு கைப்பிடி, முருங்கைக் கீரை – இரண்டு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை மூடி தேங்காயை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிறத் துணியை ஒரு கிண்ணத்தின் மீது வைத்து, அதன் மீது இந்த தேங்காய் விழுதை ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வடிகட்டிய தேங்காய் பாலை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதே மிக்சி ஜாரில் ஒரு கைப்பிடி துளசி இலையை தண்ணீரில் நன்றாக அலசிய பின் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இரண்டு கைப்பிடி முருங்கைக் கீரையை நன்றாக அலசி கொண்டு, மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் தேங்காய் பாலை வடிகட்டியது போன்றே, இதனையும் ஒரு வெள்ளை துணியை ஒரு பாத்திரத்தின் மீது வைத்து, அதில் இந்த விழுதை சேர்த்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் பாலுடன் அரைத்து வைத்துள்ள இந்த விழுதையும் சேர்த்து, இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவற்றை ஒன்றாக கலந்து விடும்பொழுது வழவழப்பான பதத்திற்கு வந்துவிடும்.

பின்னர் தலைமுடியை வாகு எடுத்து இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஹேர் பேக்கை கையில் எடுத்து முடியின் வேர் கால்களில் படுமாறு தலை முழுவதும் நன்றாக தடவி விட வேண்டும். பிறகு ஒரு 15 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு, 20 நிமிடத்திற்கு அப்படியே ஊறவிட வேண்டும். அதன் பின்னர் தண்ணீர் வைத்து தலைமுடியை அலசி, குளித்து விட்டால் போதும். உங்கள் முடி பஞ்சு போன்று அழகாக மாறிவிடும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செய்துவர எலி வால் போன்றிருக்கும் உங்கள் முடி அடர்த்தியாக மாறிவிடும்.

சற்று முன்