- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி அடர்த்தியாக தெரிய டிப்ஸ்

முடி அடர்த்தியாக தெரிய டிப்ஸ்

- Advertisement -

மாறிவரும் உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக அதிக அளவு தலைமுடியானது உதிர்ந்து விடுகிறது. தலைமுடியின் அடர்த்தி குறையும் பொழுது, இயற்கையாகவே நம் தோற்றமும் மாற்றம் காண்கிறது. தலைமுடி அடர்த்தியாக வளருவதற்கு என்னெல்லாமோ முயற்சி செய்கிறோம். தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்தி, இயற்கையாகவே அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்? தற்காலிகமாக நம் தலைமுடி அடர்த்தியாக தெரிவதற்கு பல்வேறு செயற்கை பொடிகள் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்த பொடியை கொஞ்சம் போல் தலையில் தூவினாலே போதும், தலைமுடி அடர்த்தியாக தெரியும்.

மெலிந்த நம் தலை முடியை அடர்த்தியாக தெரிவது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதற்கு இந்த பொடியை பயன்படுத்துவார்கள். இது கருப்பு நிறத்தில் இருக்கும். மயிர் கால்களுக்கு இடையில் தூவும் பொழுது தலைமுடி அடர்த்தியாக இருப்பது போல காட்சி தரும். இந்த ரசாயனம் கலந்த பொடியை பயன்படுத்துவதை தவிர்த்து நம் வீட்டிலேயே எப்படி இந்த பொடியை சுலபமான முறையில் தயார் செய்து பயன்படுத்த போகிறோம்? என்பதைத்தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

- Advertisement -

ரசாயனம் கலந்த பொடியை பயன்படுத்தும் பொழுது அது ஒரு சிலருக்கு ஒவ்வாமையையும், அலர்சியையும் ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக நம் வீட்டிலேயே சாதாரணமாக இந்த பொடியை தயார் செய்து வைக்கலாம். முதலில் ஒரு தேங்காய் சிரட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். ஈரம் இல்லாத உலர்ந்த சிரட்டை தேவை. இதை அப்படியே கேஸ் ஸ்டவ்வை ஆன் செய்து இடுக்கியை பிடித்துக் கொண்டு நெருப்பில் காண்பியுங்கள்.

ஓரிரு நிமிடங்களில் நெருப்பு பிடித்து சிரட்டை நன்கு எரிய ஆரம்பிக்கும். அதன்பின்பு இந்த சிரட்டையை தூப காலில் போடுங்கள் அல்லது உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு பெரிய தட்டில் போட்டு முழுவதுமாக எரிந்து சாம்பலாக விடுங்கள். சிரட்டை எறிந்து முடியும் வரை மின்விசிறியை ஆப் செய்யுங்கள். எரிந்து சாம்பல் ஆனதும் அதை அப்படியே ஆறவிட வேண்டும். ஆறிய பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உரலில் இட்டு நைசாக பவுடர் போல இடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த பவுடரை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளுங்கள். அப்போது தான் ரொம்பவும் நைசான பவுடர் நமக்கு கிடைக்கும். சலித்த மீதம் இருக்கும் பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலிக்க வேண்டும். இப்படி சலித்து கிடைத்த நைசான பவுடரை ஒரு ஸ்பிரிங்கில் செய்யக்கூடிய கண்டெய்னரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சதவீதம் கூட கெமிக்கல் இல்லாத இந்த பவுடரை நீங்கள் திடீரென வெளியில் கிளம்ப போகிறீர்கள் என்றால், தலை முடி அடர்த்தியாக தெரிவதற்கு மயிர்க்கால்களில் தூவி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
அதிசக்தி வாய்ந்த முருகனின் ஒரு வரி மந்திரம்

மெலிந்த உங்களுடைய கேசம் ரொம்பவும் அடர்த்தியாக அழகாக காட்சி தரும். இதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதால், தாராளமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தலைக்கு குளிக்கும் பொழுது சுலபமாக அவை நீங்கிவிடும். பின்னர் நம் தலைமுடி இயற்கையாக அடர்த்தியாக வளர சின்ன வெங்காயத்தை பயன்படுத்த மறக்காதீர்கள். கொஞ்சம் சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாற்றை தினமும் சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து ஸ்கால்ப் பகுதியில் தடவி மசாஜ் செய்து வாருங்கள், நிச்சயம் சீக்கிரமே முடி அடர்த்தியாக கருகருன்னு வளரும்.

சற்று முன்