உங்கள் தலை முடி காடு போல் அடர்த்தியாக வளர ஆசையா? அப்போது உடனே இந்த ஹேர் பேக்கை பயன்படுத்திப் பாருங்கள். நீங்கள் ஆச்சரியப்படும் அளவில் சிறந்த பலன் கிடைக்கும்

hair
- Advertisement -

பெண்களுக்கு அழகே அவர்களின் கூந்தல் தான். அதேபோல் ஆண்களும் இப்போதெல்லாம் தங்களுக்கான சிகை அலங்காரம் செய்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் முடி கொட்டும் பிரச்சனையும் உண்டாகிறது. இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவு முதல், சுற்றுச்சூழல் வரையில் ஆரோக்கியத்திற்கான சவாலாகத்தான் இருக்கிறது. நம் தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் பெண்கள் அனைவருக்குமே நீளமான கூந்தல் இருக்கும். அவர்கள் இப்படி அதிக முடி வளர்ச்சிக்காக தனியான கவனம் எதுவும் செலுத்தியது கிடையாது. ஆனால் அவர்களின் உணவு முறையும் சுற்றுச்சூழலுமே நல்ல ஆரோக்கியமான உடலையும், முடி வளர்ச்சியையும் கொடுத்திருந்தது. ஆனால் மனிதனின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து இப்பொழுது நாம் உண்ணும் உணவில் கிடைப்பதில்லை. எனவே கூந்தல் வளர்ச்சிக்காக தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டி தான் இருக்கிறது. அவ்வாறு இயற்கையாக கிடைக்கக் கூடிய ஆரோக்கியமான பொருட்களை வைத்து இந்த ஹேர் பேக்கை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். இதனை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வர முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி, செம்பருத்தி இலை – ஒரு கைப்பிடி, தேங்காய் – கால் மூடி.

- Advertisement -

செய்முறை:
ஒரு கைப்பிடி உளுத்தம்பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். இவ்வாறு முதல் நாள் இரவு ஊற வைக்க வில்லை என்றாலும், இந்த ஹேர் பேக்கை தயார் செய்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக உளுத்தம்பருப்பை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஊறவைத்த உளுத்தம் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு கைப்பிடி செம்பருத்தி இலையை தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு சேர்க்க வேண்டும். அதன்பின்னர் கால் மூடி தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். பிறகு துருவிய தேங்காயையும் மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவை அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும் இவற்றை அரைப்பதற்க்கு உளுத்தம் பருப்பு ஊறவைத்த தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த விழுதை ஒரு மெல்லிய துணியை வைத்து, ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
முதலில் தலைமுடி முழுவதிலும் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் தலை முடியை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும். அதன்பின் ஹேர் பேக்கை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து முடியின் வேர் கால்களில் படுமாறு தடவி விட வேண்டும். இவ்வாறு முழுவதுமாக தடவிய பிறகு கைகளை வைத்து 20 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர் அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட்டு, சீயக்காய் அல்லது ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளித்து விட வேண்டும்.

- Advertisement -