ஒரு ஸ்பூன் உப்பு இருந்தால் போதும். வெள்ளை முடியை மிக மிக சுலபமாக கருப்பாக மாற்றிடலாம்.

hair22
- Advertisement -

வெள்ளை முடியை சுலபமாக கருப்பாக மாற்றுவதற்கு செலவில்லாமல், பக்க விளைவுகள் இல்லாமல் ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த குறிப்பை முதல் முறை பயன்படுத்தும் போது உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். வயதான பின்பு நீண்ட நாட்களாக இருக்கும் வெள்ளை முடிக்கும் இதை பயன்படுத்தலாம். இளநரை உள்ள சிறிய பிள்ளைகளுக்கும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். நிச்சயமாக பக்க விளைவுகள் இருக்காது. முடி கொட்டுமோ என்ற பயமும் தேவை கிடையாது. இரண்டு அல்லது மூன்று முறை பியன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க. உங்களுடைய முடி நிரந்தரமாக கருப்பாக இருக்கும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 டம்ளர் தண்ணீரை அதில் ஊற்றி, நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் சூடாகி கொதித்து வந்ததும் அதில் உப்பு – 1 ஸ்பூன், டீ தூள் – 4 டேபிள் ஸ்பூன் சேர்க்க வேண்டும். எந்த ஸ்பூனில் உப்பை அளந்தீர்களோ, அதே ஸ்பூனில் டீத்தூளை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். மசாலா டீ தூள், இஞ்சி டீ தூள் பயன்படுத்த வேண்டாம். மற்றபடி சாதாரணமாக இருக்கும் எந்த பிராண்ட் டீத்தூளை வேண்டும் என்றாலும் இதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

தண்ணீர் நன்றாக கொதித்து சுண்டி வர வேண்டும். 1 டம்ளர் தண்ணீர், 1/2 டம்ளர் தண்ணீர் அளவு வந்ததும் இதை வடிகட்டி பிழிந்து எடுத்தால் கொஞ்சமாக டீ டிகாஷன் நமக்கு கிடைக்கும் அல்லவா இதை தான் ஆற வைத்து தலையில் அப்ளை செய்ய வேண்டும். இது தண்ணீராக இருக்கிறதே தலையில் ஒட்டுமா என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு தலையின் மேலே வெள்ளை முடிகள் இருக்கும் இடத்தில் படும்படி இதை நன்றாக அப்ளை செய்து, ஃபேன் காற்றில் காய விட்டு விடுங்கள். தலைக்கு குளிக்க வேண்டாம். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மறுநாள் காலை எழுந்து வெறும் தண்ணீரில் தலையை அலசிக் கொள்ளுங்கள்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக ஒரு சில வாரங்களில் உங்களுடைய வெள்ளை முடி கருப்பாக மாறி இருக்கும். அதன் பின்பு வாரத்திற்கு 1 நாள் கூட நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றி வரலாம். டீ த்தூளில் இருக்கக்கூடிய கலர் நம்முடைய முடியில் நன்றாக ஒட்டிப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் உப்பை இதில் நாம் சேர்த்திருக்கின்றோம்.

- Advertisement -

உப்பை தலையில் போடுவதால் முடி கொட்டும் என்ற பயம் தேவை இருக்காது. சில பேருக்கு உப்பு தண்ணீரில் தலைக்கு குளித்தால் முடி கொட்டும் என்று சொல்லுவார்கள். ஆனால், போர் வாட்டரில் இருக்கக்கூடிய உப்பு வேறு. நாம் சாப்பிடுவதற்கு பயன்படுத்தக்கூடிய உப்பு என்பது வேறு என்பதையும் இந்த இடத்தில் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

ஹேர் டை போட, இருக்கிறதுலையே ரொம்ப ரொம்ப சுலபமான குறிப்புன்னா அது இதுதான். செலவில்லாத குறிப்புனாலும் அது இதுதான். பக்க விளைவுகள் வராத குறிப்பு என்றாலும் அது இதுதான். ஒருமுறை பயன்படுத்தி உங்களுடைய தலையில் வெள்ளை முடியின் நிறம் கருப்பாக மாறவில்லை என்றாலும், மூன்றில் இருந்து நான்கு முறை பயன்படுத்தி பாருங்கள். ஒவ்வொருவரின் முடி தன்மை ஒவ்வொரு மாதிரி இருக்கும். சில பேருக்கு ரிசல்ட் உடனே தெரியும். சில பேருக்கு ரிசல்ட் சில நாட்கள் கழித்து தெரியும். மிஸ் பண்ணாதீங்க ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -