இவ்வளவு முடி கொட்டுவதை பார்த்து மொட்டையே அடித்து கொள்ளலாம் என்று தோணுமா? முடி உதிர்வை கட்டுப்படுத்தி, வலுவான முடி வளர்ச்சியை பெற, இதோ ஒரு பவர்ஃபுல் ஹேர் பேக்.

hair10
- Advertisement -

சில பேருக்கு முடி கொட்டுவதை பார்த்தால் அழுகையே வரும். அவ்வளவு முடி கொட்டிக் கொண்டே இருக்கும். ஏதேதோ ட்ரை பண்ணி பார்ப்பாங்க. ஆனா ரிசல்ட் மட்டும் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் இந்த குறிப்பை மட்டும் பின்பற்றி வாருங்கள். உங்களுடைய தலைமுடி வலுவாக உதிராமல் வளர்வதை மூன்றே வாரத்தில் கண்டுபிடிக்க முடியும். அப்படி என்ன குறிப்பு. இதற்கு நிறைய சிரமப்பட வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. மிக மிக எளிய வழி தான் இது. வாங்க குறிப்பை பார்த்து விடலாம்.

நாம் எல்லோருக்குமே தெரியும் ஆளி விதை முடி வளர்ச்சிக்கு மிக மிக உதவியாக இருக்கும் என்று. அந்த ஆளி விதையை வாங்கிக் கொள்ளுங்கள். 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரில், 2 ஸ்பூன் ஆளி விதைகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி அந்த ஜல்லை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆளி விதை தண்ணீரில் கொதிக்கும் போது கொழ கொழப்பாக வரும். வடிகட்டும்போது அலோவேரா ஜெல் போல ஒரு ஜெல் நமக்கு கிடைக்கும். (இந்த ஜெல்லை ரொம்பவும் திக்காக காய்ச்சாதீங்க. கொஞ்சம் லிக்விட் பதத்திலேயே இருக்கட்டும்.) அந்த ஜெல்லில் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கு எண்ணெய் இரண்டில் ஏதாவது ஒரு எண்ணெயை போட்டு நன்றாக கலக்க வேண்டும். விளக்கெண்ணெய் சேர்த்தால் மிக மிக நல்லது. (சரியாக சொல்லப்போனால் இந்த ஜெல் முட்டையின் வெள்ளை கரு போல நமக்கு கிடைக்கும்.)

- Advertisement -

இந்த ஜல்லை இப்போது உங்களுடைய ஸ்கால்பில் படும்படி நன்றாக தடவி விடுங்கள். மீதம் இருக்கும் ஜெல்லை எடுத்து முடியின் நுனிபாகம் வரை தடவி விட்டு, 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு எந்த ஷாம்புவை வேண்டும் என்றாலும் நீங்கள் போட்டு குளிக்கலாம்.

எல்லா ஷாம்பூவும் கெமிக்கல் கலந்த ஷாம்பு தானே. கெமிக்கல் இல்லாத ஷாம்புவாக பார்த்து நீங்கள் குளிக்க வேண்டும் என்றால் அது நீங்களே தயார் செய்த ஷாம்புவாக தான் இருக்க வேண்டும். சரி, நீங்கள் பயன்படுத்தும் எந்த ஷாம்புவாக இருந்தாலும் சரி, அது உங்களுடைய தலையை பாதிக்காமல் இருக்க என்ன செய்வது.

- Advertisement -

அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் நமக்கு தேவை. அந்த கஞ்சி தண்ணீரை ஒரு சிறிய கப்பில் எடுத்துக்கொண்டு. அதில் நீங்கள் தலைக்கு போடும் ஷாம்புவை ஊற்றி நன்றாக கலந்து விட்டு இப்போது இந்த கலவையை உங்கள் தலையில் போட்டு கசக்க வேண்டும். கெமிக்கல் கலந்த ஷாம்புவாகவே இருந்தாலும், முடிக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்க கஞ்சி தண்ணி தான் சிறந்த வழி. சாதம் வெந்த பிறகு, வடித்த கஞ்சி தண்ணீர்.

வாரத்தில் இரண்டு நாள் மேல் சொன்ன குறிப்பை பின்பற்றி வர வேண்டும். கூடவே உடலுக்கு ஊட்டச்சத்து தரும் சத்தான ஆகாரங்களை சாப்பிட்டு வர வேண்டும். எண்ணி 30 நாட்களில் முடி உதிர்வில் வித்தியாசம் தெரியும். அடுத்த 30 நாட்களில் முடி வளர்ச்சியை காணலாம். நீங்க வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க. மொட்டை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதை விட்டுப் போய்விடும். முடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும்.

- Advertisement -