- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamil30 நிமிடத்தில் முடி உதிர்வு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதினா.

30 நிமிடத்தில் முடி உதிர்வு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதினா.

- Advertisement -

தலையிலிருந்து கொத்துக்கொத்தாக முடி உதிர்கிறது என்றால் காரணம் இல்லாமல் கிடையாது. தலையில் ஏதோ ஒரு இன்பெக்சன் காரணமாகத்தான் முடி உதிர்வு ஏற்படுகிறது. ஸ்கால்ப்பில் பொடுகு, பேன், ஈறு, கொப்பளம் இப்படி எந்த பிரச்சினைகள் இருந்தாலும் அதை சரிசெய்து 30 நிமிடத்தில் முடிஉதிர்வை கட்டுப்படுத்தக் கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த சூப்பரான ஒரு ஹேர் பேக்கை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு மூன்று பொருட்கள் தான் தேவை. 1 கைப்பிடி புதினா இலைகள், 1 கைப்பிடி தேங்காய்துருவல், கடுக்காய் பொடி. நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் பொடி என்று கேட்டால் கொடுப்பார்கள் அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், புதினா இலைகள் ஒரு கைப்பிடி போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாருடன் கடுக்காய் பொடி 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்தால் பேக் தயார். இந்த பேக் கொஞ்சம் லிக்விடாக தான் நமக்கு இருக்கும்.

இந்தக் பேக்கை மயிர்க்கால்களில் படும்படி நன்றாக அப்ளை செய்து விட்டு உங்களுடைய இரண்டு கைகளையும் வைத்து தலையை மசாஜ் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய மண்டைப் பகுதிக்குள் இந்த பேக் நன்றாக இறங்க வேண்டும். லிக்யூடாக இருப்பதால் பேக்கை அப்ளை செய்ய அவ்வளவு கஷ்டம் தெரியாது. பேக்கை போட்டுவிட்டு  20 நிமிடத்திலிருந்து 30 நிமிடங்கள் வரை இந்த பேக் தலையில் அப்படியே ஊறட்டும்.

- Advertisement -

அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலையை நன்றாக அலசிக் கொள்ளுங்கள். முதல் முறை இந்த பேக்கை பயன்படுத்தும் போது தலையில் இருக்கும் இன்ஃபெக்ஷன் பேன் பொடுகுத் தொல்லை குறைவதை பார்க்க முடியும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை போடலாம். தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து முறை இந்த பேக்கை போட்டுவிட்டு அதன் பின்பு நிறுத்தி விடுங்கள்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தேவைப்பட்டால் இந்த பேக்கை போடலாம். இந்த பேக்கில் நாம் கடுக்காய் பொடி சேர்த்து இருக்கின்றோம் கடுக்காய் பொடி உங்களுடைய முடியை லேசாக டிரை ஆக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய முடியில் முதலில் நிறைய தேங்காய் எண்ணெயை வைத்து விட்டு, அதன் பின்பு இந்த பேக்கை போட்டுக் கொள்ளுங்கள்.

ஒருவேளை தலையில் நீங்கள் எண்ணெய் வைக்கவில்லை என்றால் இந்த பேக்குடன் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இப்படி ஏதாவது ஒரு எண்ணெயை இரண்டு ஸ்பூன் ஊற்றி கலந்து அதன் பின்பு பேக்கை தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். முடி உதிர்வு குறைந்து, தலையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளைப் போக்கி பாதுகாப்பாக முடியை வளரச் செய்ய இந்த பேக் மிகவும் உதவியாக இருக்கும்.

சற்று முன்