தலைமுடி உதிர்வை 10 நாட்களில் கட்டுப்படுத்தி பொடுகு தொல்லையை முற்றிலுமாக போக்கும் இந்த 1 பொருளை தேங்காய் எண்ணெயில் சேர்த்தாலே போதும்!

small-onion-hair-oil
- Advertisement -

ஒவ்வொரு பிரச்சினைக்கும், ஒவ்வொரு விதமான தீர்வுகள் உண்டு, அதில் எந்த பிரச்சனைக்கான தீர்வு எதில் இருக்கும்? என்பதை தெரிந்து கொண்டாலே அந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விடுகிறது. இது தெரியாமல் தான் பலரும் தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில் தலை முடி உதிர்வை சரி செய்து, பொடுகுத் தொல்லையை நீக்க கூடிய அந்த ஒரு பொருள் என்ன? அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பெரும்பாலான தலை முடி உதிர்வுக்கு காரணமாக அமைவது பொடுகு பிரச்சனை தான். தலை முடியின் வேர்க்கால்களில் படிந்திருக்கும் இந்த வெள்ளை திட்டுகளை பொடுகு என்று கூறுகிறோம். தலைமுடியை பிரித்துப் பார்த்தால் தெரியும் வெள்ளை வெள்ளையாக குப்பை போல ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும். அது மட்டுமல்லாமல் தலை முடியின் நுனிப்பகுதியில் முடிகள் பிளந்து கொண்டு ரெட்டைவால் குருவி போல காட்சி தரும். இந்த இரண்டு பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக தலைமுடி வேகமாக உதிரத் தொடங்கும்.

- Advertisement -

முடி நீளமாக வளர்ந்தாலும், அடர்த்தி வெகுவாக குறைந்து கொண்டே செல்லும். இந்தப் பிரச்சனைக்கு எளிதாக இயற்கையான முறையில் எப்படி தீர்வு காணலாம்? தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தக்கூடிய சத்துக்கள் சின்ன வெங்காயத்தில் கூடுதலாக ஒளிந்து கொண்டிருக்கிறது. 100ml தேங்காய் எண்ணையை ஒரு இரும்புச் சட்டியில் போட்டு காய்ச்சிக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த எண்ணெய் தயாரிக்கும் பொழுது அடுப்பை குறைந்த தீயில் தான் வைத்திருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

குறைந்த தீயிலேயே எண்ணெய்யை நன்கு காய்ச்சுங்கள். காய்ச்சிய எண்ணெயில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து ஒன்றிரண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தில் இருக்கும் சாறு முழுவதும் தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயாக இருப்பது இன்னும் கூடுதல் பலன் கொடுக்கும். இப்போது வரும் தேங்காய் எண்ணெய்களில் பாதி கலப்படம் தான்.

- Advertisement -

சுத்தமான தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் சின்ன வெங்காயத்தை இந்த அளவிற்கு சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெங்காயத்தின் நிறம் குறைந்த தீயிலேயே பொன்னிறமாக மாற வேண்டும். அதுவரை நீங்கள் நன்கு காய்ச்ச வேண்டும். இதற்கு அதிகபட்சம் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை எடுக்கும். 15 நிமிடம் நன்கு காய்ச்சிய பிறகு வெங்காயம் அனைத்தும் பொன்னிறமாக மாறி விட்டிருக்கும். இப்போது இந்த எண்ணெயை நன்கு வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த சின்ன வெங்காய சாறு கலந்த எண்ணெயை தான் தலைக்கு நீங்கள் பயன்படுத்த வேண்டும். நேரடியாக சின்ன வெங்காய சாற்றை தலைக்கு தடவினால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே கவனமாக இவற்றை மேற்கொள்ளுங்கள். அது போல் 100ml தேங்காய் எண்ணெய்க்கு 10 சின்ன வெங்காயம் போதுமானது. அதற்குமேல் சேர்க்கக் கூடாது. இரும்பு சட்டியில் வைத்து காய்ச்சும் பொழுது இரும்பு சத்தும் நமக்கு கிடைக்கிறது.

இந்த எண்ணெயை ஒரு ஸ்பூன் அளவிற்கு தினமும் கையில் எடுத்துக் கொண்டு தலையின் வேர்கால்களுக்கு மசாஜ் செய்து கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் பொடுகுகள் நீங்கி, வேர்கால்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். இதனால் முடி பிளவுகள் நாளடைவில் மாறத் துவங்கும். மேலும் முடி உதிர்வையும் 10 நாட்களில் கட்டுப்படுத்தும். தலைக்கு எண்ணெய் தேய்க்காதவர்கள் நீங்கள் குளிக்க செல்லும் முன் இப்படி மசாஜ் செய்துவிட்டு குளித்துக் கொள்ளலாம். ஆண், பெண், குழந்தைகள் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த எண்ணெயை தாராளமாக பயன்படுத்தலாம்.

- Advertisement -