முழங்காலை தொடும் அளவு கருமையான அடர்ந்த நீண்ட கூந்தல் வேண்டுமா? இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து அதிகம் உதிர்கிறதா? முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு இந்த ஒரு பொருள் மட்டும் இருந்தால் போதும்

hair
- Advertisement -

முடி உதிர்வு என்பது இன்றைய காலத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை  ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. முன்பெல்லாம் இது பூதாகரமான விசயம் இல்லை. இன்று இளம் வயது பிள்ளைகளுக்கு கூட தலையில் வழுக்கை, இளநரை போன்று பார்ப்பதற்கே வயதானவர்கள் போல தோன்றுகிறது. இது அவர்களுக்கு மிகவும் மன உளைச்சலை எற்படுத்தி விடுகிறது. இனி இதை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட தேவை இல்லை. நம் சமையல் அறையில் இருக்கும் ஒரே ஒரு பொருளைக் கொண்டு முடி உதிர்வு பிரச்சினையை நீங்குவதுடன், நீண்ட அழகான கருகூந்தலையும் பெறலாம்.

இந்த பொருள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அது வேறேதும் இல்லை சின்ன வெங்காயம் தான். நம் தலைமுடி உதிர்வதற்கும், தலையில் புண், பொடுகு, இள நரை போன்ற அனைத்து தலைமுடி சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த சின்ன வெங்காயம்  இருந்தாலே போதும். இந்த சின்ன வெங்காயத்தில் இருக்கும் சல்பரானது தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுவாக  உள்ளது.

- Advertisement -

சின்ன வெங்காயம் பத்து பதினைந்து அளவு எடுத்து கொள்ளுங்கள். இதை நன்றாக அரைத்து சாறை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், இதை தலை முடி வேர்க்கால்களில் படும்படி தேய்த்து, அடிமுடி வரையிலும் நன்றாக தடவி விடுங்கள், பிறகு ஒரு பத்து நிமிடம் கழித்து மசாஜ் செய்து விடுங்கள். அதன் பிறகு ஏதாவது ஒரு மைல்டான ஷாம்பு உபயோகித்து தலை முடியை நன்றாக அலசி விடுங்கள்.

சின்ன வெங்காயம் குளிர்ச்சியானது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது என்று நினைப்பவர்கள் இந்த சின்ன வெங்காயத்தை அரைத்து தேங்காய் எண்ணெய்யை காய வைத்து அதில் கலந்தும் தடவி வரலாம், இதுவும் நல்ல மருந்து. தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயத்தோடு புதினா இலைகளையும் சேர்த்து அரைத்து சேர்க்கலாம், எலுமிச்சை சாறு கலந்தும் தேய்க்கலாம். இவை அனைத்துமே தலைமுடி நன்றாக வளர உதவும்.

சின்ன வெங்காயத்தை தொடர்ந்து தேய்த்து வர நிச்சயம் உங்கள் தலைமுடி உதிர்வது நின்று விடும், இளநரை மறையும்‌. வெங்காயத்தை அரைத்து அப்படியே தலையில் தேய்த்தால் திட்டு திட்டாக இருக்கும். காய்ந்த பின் அதை எடுப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். எனவேதான் அரைத்து நன்றாக சாறு எடுத்த பின் அதை தடவ வேண்டும் . இதை ஒரு முறை செய்து பின் விட்டுவிட கூடாது. தொடர்ந்து தலைமுடியில் தேய்த்து வர வேண்டும். வாரம் ஒருமுறை கட்டாயம் இப்படி செய்து வாருங்கள் நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.

- Advertisement -