தலை முடி அருவி போல நல்லா நீண்டு சுருண்டு விழுவது போல வளர வேண்டும்மா ? அப்படியானால் நான்கு கொய்யா இலையை இப்படி பயன்படுத்தி பாருங்கள். நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு அபாரமான முடி வளர்ச்சியை பெறலாம்.

hair tips
- Advertisement -

தலைமுடி நீண்டு கருகருவென்று வளர இதுவரை என்னவெல்லமோ குறிப்புகளை பார்த்து இருப்போம். அந்த வகையில் இந்த அழகு குறிப்பு பதிவிலும் தலை முடி நீண்டு சுருண்டு அழகாக வளரக் கூடிய ஒரு எண்ணையை எப்படி தயாரிப்பது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த எண்ணெயில் நாம் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் முடி வளர்ச்சியை தூண்டக் கூடிய முக்கியமான பொருள்கள் தான். வாங்க இப்போது அந்த எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.

முடி வளர்ச்சியை தூண்டும் எண்ணெய் தயாரிக்கும் முறை
இந்த எண்ணெய் காய்ச்ச முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெய் 100 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் இந்த எண்ணெய் ஊற்றி வைத்து லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு பல் பூண்டு, ஒரே ஒரு கற்பூரம் இரண்டையும் லேசாக தட்டி அதில் போட்டு விடுங்கள். இவை இரண்டும் இதில் நன்றாக கலந்து வர வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக நான்கு கொய்யா இலைகளை இந்த எண்ணெயில் சேர்த்து அடுப்பை மிதமான தீக்கு மாற்றி விடுங்கள். இத்துடன் ஒரு கைப்பிடி அளவு வெந்தயத்தையும், ஒரு நீள கற்றாழை மடலை சிறிய துண்டுகளாக நறுக்கி அதையும் சேர்த்து எண்ணையை லேசாக நிறம் மாறும் வரை காய்ச்சிக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் சூடேறி நிறம் மாற பத்து நிமிடம் வரையாகும். கடைசியாக இறக்குவதற்கு முன்பாக ஒரே ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணையை மட்டும் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை ஆற வைத்து ஒரு பாட்டிலில் வடிகட்டி ஊற்றிக் வைத்து கொள்ளுங்கள். இதில் அனைத்து பொருளையும் காய்ச்சி சேர்த்து இருப்பதால் கெட்டு போகாது.

- Advertisement -

நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக இந்த எண்ணெயை உங்கள் தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து அரை மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சீயக்காய் அல்லது மைல்டான ஷாம்பூ சேர்த்து நன்றாக முடியை அலசி ஆற விடுங்கள். இந்த முறையை தொடர்ந்து செய்து வரும் போது முடி உதிர்வு, முடி பிளவுபடுவது நரைமுடி போன்ற எதுவும் வராது.

இதையும் படிக்கலாமே: 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் இந்த 2 பொருள் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து பாருங்கள், கொஞ்சம் கூட சுருக்கம் இல்லாமல் 10 வயசு குறைஞ்ச மாதிரி இருக்கும்!

இந்த எண்ணெயில் சேர்த்திருக்கும் ஒவ்வொரு பொருளுமே முடி வளர்ச்சி அதிகரிக்க கூடியவை தான். இந்த எண்ணையை வாரத்திற்கு இரண்டு நாள் பயன்படுத்தி வரும் போது நம் தலையின் உஷ்ணம் குறைந்து குழுமை அடைந்து ரத்த ஓட்டம் அதிகரித்து இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முடி அபரீதமான வளர்ச்சியை பெறும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..

- Advertisement -