1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் இந்த 2 பொருள் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து பாருங்கள், கொஞ்சம் கூட சுருக்கம் இல்லாமல் 10 வயசு குறைஞ்ச மாதிரி இருக்கும்!

coconut-oil-massage-face
- Advertisement -

நம்முடைய முகம் ரொம்பவே சென்சிடிவ் ஆனது. சரும துவாரங்கள் இலகுவாக இருக்கும். இதில் சுலபமாக தூசுகளும், மாசுகளும் நுழைவதால் முகப்பருக்களும், கரும்புள்ளி, வெண் புள்ளிகளும் எளிதாக தோன்றுகின்றது. இதிலிருந்து நம்முடைய முகத்தை ரொம்பவே எளிதாக பாதுகாப்பது எப்படி? தேங்காய் எண்ணெயுடன் எந்த பொருட்களை சேர்த்து மசாஜ் செய்தால் அசத்தலான ரிசல்ட்டை காணலாம்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேங்காய் எண்ணெய் சிறந்த ஒரு மசாஜ் எண்ணெய்யாக இருக்கிறது. இது குழந்தைகளுக்கு சருமம் முழுவதும் தடவி மசாஜ் செய்யலாம். அது போல எந்த வயதினரும் தேங்காய் எண்ணெயை முகத்திற்கு மசாஜ் எண்ணெய்யாக பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கக் கூடிய பலனை அனுபவிக்கலாம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த தேங்காய் எண்ணெயை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் வேரா ஜெல் எனப்படும் கற்றாழை மடலை கிழித்து கிடைக்கக் கூடிய ஜெல்லை பயன்படுத்த வேண்டும். இயற்கையாக கிடைக்கக்கூடிய ஜெல்லாக இருந்தாலும் சரி அல்லது கடையில் நீங்கள் செயற்கை ஜெல் வாங்கினாலும் சரி.

கடைசியாக இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்க்க வேண்டும். சுத்தமான மலை தேன் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் பேஸ்ட் போல அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் அல்லது மசாஜ் பிரஸ் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பேஸ்ட் போல அடித்து வைத்ததும், இதனை நெற்றி, முகம், தடை போன்ற எல்லா பகுதிகளிலும் தடவி கொள்ள வேண்டும். கண்கள் மற்றும் புருவங்களில் தடவ வேண்டாம். அது போல உதடுகளில் கூட விட்டு விடுங்கள்.

- Advertisement -

பிறகு கீழிருந்து மேலாக மென்மையாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் ஆன்டி கிளாக் வைஸ் மற்றும் கிளாக் வைஸ் ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்யுங்கள். மூக்குப் பகுதியிலும் கீழிருந்து மேலாக மென்மையாக ஒரு விரலால் தடவிக் கொடுங்கள். இது போல எல்லா இடங்களிலும் மசாஜ் செய்த பின்பு, ஒரு சுத்தமான காட்டன் துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். முகத்தை நீரால் கழுவ வேண்டாம்.

ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் இந்த பேஸ்டை முகம் முழுவதும் தடவி மசாஜ் எதுவும் செய்யாமல் உலர விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்து காய்ந்ததும் முகத்தை இதே போல துடைத்து எடுத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் கடலை மாவு அல்லது பாசி பயறு மாவு போன்றவற்றை பயன்படுத்தி முகத்தை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளலாம். முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவதை விட இது போன்ற கடலை அல்லது பயத்த மாவை பயன்படுத்தும் போது சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
முல்தானிமட்டியுடன் இதை சேர்த்தால் முகம் மினுமினுப்பாகுமா? கண்ணாடி போல முகம் ஜொலிக்க ஈசியான டிப்ஸ்!

இந்த மாவு பொருட்கள் இல்லாதவர்கள் நீங்கள் உங்கள் சருமதிற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் ஏதாவது பயன்படுத்தலாம். சோப்பை மட்டும் தவிர்க்க வேண்டும். இது போல தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கக் கூடிய சுருக்கங்கள் முற்றிலுமாக நீங்கி, முகம் இளமையுடன் 10 வயது குறைந்தது போல பளிங்கு மாதிரி ஜொலிக்கும்.

- Advertisement -