பெண்கள் என்றாலே அழகு தான். அதிலும் நல்ல கருகருவென்று நீண்ட கருங்கூந்தல் கொண்ட பெண்களை பேரழகிகள் என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் அனைத்து பெண்களும் நல்ல கருகருவென்று நீண்ட கருங் கூந்தலை வளர்த்து வந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படியான பெண்களை பார்ப்பது அபூர்வமாகி விட்டது.
இதற்கு நாகரீகம் வளர்ந்து விட்டது அதனால் முடியை யாரும் பெரிதாக வளர்க்க விரும்புவதில்லை என்று ஒரு புறம் சொன்னாலும், அப்படி முடி வளர்ப்பதில் இன்றைய காலக்கட்டத்தில் பெரும் சிக்கல் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். முடியை பராமரிப்பதற்கான நேரமும் கால சூழ்நிலையும் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இப்படியான சூழ்நிலையில் நம் அனைவருக்கும் எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு பூவை வைத்து மிகவும் சுலபமாக அடர்த்தியான அழகான கூந்தலை பெற முடியும். இதை கேட்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. வாங்க அது எப்படின்னு இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கருமையான அடர் கூந்தலை பெற சங்குப்பூ
இதற்கு முதலில் பத்து சங்கு பூக்களை பறித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்கும் பொழுது பறித்து வைத்து சங்கு பூவை அதில் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும்.
அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த சங்குப்பூ சேர்த்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தலைமுடிக்கு தேவையான சங்குப்பூ டோனர் தயாராகி விட்டது. நீங்கள் தலைக்கு குளிக்கும் போது எப்போதும் போல சீயக்காய் அல்லது மயில்டான ஷாம்பூ சேர்த்து தலையை நன்றாக அலசி விடுங்கள்.
அதன் பிறகு இந்த சங்குப்பூ சேர்த்த தண்ணீரை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். ஒரு பத்து நிமிடம் வரை இப்படி மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள். இந்த தண்ணீரை சேர்த்து மசாஜ் செய்த பிறகு சோப்பு, ஷாம்பு இவைகளை பயன்படுத்தக் கூடாது.
இந்த முறையில் வாரம் இரண்டு முறை நம்முடைய தலையை மசாஜ் செய்யும் பொழுது புதிய முடிகள் முளைக்கும். அது மட்டும் இன்றி ஏற்கனவே செம்பட்டையான முடிகள் கூட நன்றாக கருமை நிறத்திற்கு மாற தொடங்கி விடும். முன்பெல்லாம் அழகு தொடர்பான எந்த ஒரு விஷயத்திற்கும் இது போன்ற இயற்கையான முறைகளை தான் பயன்படுத்தி வந்தார்கள்.
இதையும் படிக்கலாமே: முடி வளர்ச்சியை தூண்டும் ஹேர் மாஸ்க்
இந்த முறைகள் எளிமையானவை என்பதை காட்டிலும் பக்க விளைவுகள் இல்லாதவை பணமும் செலவு ஆகாது. ஆகையால் இது போன்ற எளிய முறைகளை தெரிந்து கொண்டு நம்மை பராமரித்துக் கொள்வது ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த முறை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.