குப்பையில் தூக்கி போடும் இதை உங்க தலை முடிக்கு போடுங்க. முடி அது பாட்டுக்கு வளரும்.

hair12
- Advertisement -

நம் கையால் குப்பையில் தூக்கிப் போடும் நிறைய பொருட்களில் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. சில பொருட்கள் கெட்டுப் போனாலும் அதில் இருக்கும் சத்துக்கள் இன்னும் அதிகமாகும். கெட்டுப் போய்விட்டது என்று சொல்லும் வாழைப்பழத்தை உங்களுடைய தலையில் இப்படி ஹேர் பேக் ஆக போட்டு பாருங்கள். உங்களுடைய தலை முடி அந்த அளவிற்கு கடகடன்னு வளர தொடங்கும். வாழைப்பழத்தின் தோல் கொஞ்சம் கருத்து போய்விட்டால் அதை பெரும்பாலும் சாப்பிட பயன்படுத்த மாட்டோம். தூக்கி குப்பையில் போட்டு விடுவோம். அப்படி போடாதீங்க. அதை ஹேர் பேக்காக எப்படி மாற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்த பழுத்த வாழைப்பழத்தை அப்படியே அரைத்து ஹேர்பேக்காக போடக்கூடாது. முந்தைய நாள் இரவே 2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை ஊற வைத்த இந்த வெந்தயத்தை தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். பழுத்த மீடியம் சைஸில் இருக்கும் 2 வாழைப்பழங்களை தோல் உரித்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி அதையும் வெந்தயத்தோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். (மிக்ஸி ஜாரில் ஊற வைத்த வெந்தயம் பழுத்த வாழைப்பழம் இந்த இரண்டையும் போட்டு நன்றாக அரைக்க போறீங்க.)

- Advertisement -

மொழு மொழுவென சூப்பரான ஒரு ஹேர் பேக் நமக்கு கிடைத்திருக்கும். இந்த பேக்கை அப்படியே தலையில் போடலாம் தவறு கிடையாது. தேவைப்பட்டால் இந்த ஹேர் பேக்கை ஒரு வெள்ளை துணியில் ஊற்றி நன்றாக உங்கள் கையை கொண்டு பிழிந்தால், ஹேர் பேக் திப்பியில்லாமல் ஸ்மூதாக நமக்கு கிடைக்கும். ஆனால் பேக்கை வடிகட்டுவது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம்.

நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், இதில் ஒரு முட்டையின் வெள்ளை கருவை, வடிகட்டிய இந்த ஹேர் பேக்கோடு சேர்த்து நன்றாக கலந்து உங்களுடைய தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். ஹேர் பேக்கை தலையில் போடுவதற்கு முன்பு உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெயை வைத்து விடுங்கள். அப்ளை செய்யும்போது இந்த பேக் அவ்வளவு ஸ்மூத்தாக இருக்கும். 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு போட்டு தலையை நன்றாக சுத்தம் செய்து அலசிவிடுங்கள் அவ்வளவு தான்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் கூட இந்த ஹேர் பேக்கை நீங்க போடலாம். உங்களுக்கு பழுத்த வாழைப்பழம் எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இந்த பேக் ட்ரை பண்ணுங்க. உங்களுடைய தலைமுடி உதிர்வது குறைந்து தலைமுடி டிரையாகாமல் உதிராமல் வளர்ந்து கொண்டே செல்லும். செம சூப்பரான ஹெர் பேக் இது. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: உங்களுக்கு பிரஷ்ஷாக கிடைக்கும் அலோவேரா ஜெல் கிடைத்தால் அதையும் இந்த பேக்கோடு சேர்த்து கலந்து உங்களுடைய தலைக்கு அப்ளை செய்து கொள்ளலாம். செம்பருத்தி பூ, செம்பருத்தி பூ இலை, இப்படி தலை முடி வளர உதவி செய்யும் இயற்கையான பொருட்கள் எது கிடைத்தாலும் அதை நீங்கள் இந்த பேக்கோடு சேர்த்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. கருவேப்பிலையை கூட சேர்க்கலாம். உங்களுடைய முடியின் தன்மைக்கு ஏற்றவாறு உங்களுக்குத் தெரிந்த முடி வளர்ச்சியை தூண்டும் பொருட்களை பழுத்த வாழைப்பழத்துடன் சேர்த்து அரைத்து பயன்படுத்துவது உங்களுடைய விருப்பமும் கூட.

- Advertisement -