கொத்துக் கொத்தாக கொட்டும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட உதிராமல் இருக்க, இந்த ஹேர் பேக்கை மட்டும் வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதும்

hair-pack
- Advertisement -

சிறிய வயது இருப்பவர்கள் முதல் பெரியவர்கள் வரை முடி கொட்டும் பிரச்சனை அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்குக் கூட முடி கொட்டும் பிரச்சனை இருக்கிறது. முன்பு இருந்ததை விட இப்போது அனைவருக்கும் தலை முடியின் வலிமை குறைந்து தான் உள்ளது. அந்த அளவிற்கு தேவையான அளவு ஊட்டச்சத்து என்பது யாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கவனம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அது போல தலை முடியை பராமரிப்பதற்கும் கொஞ்சம் தனி கவனம் கொடுத்து தான் ஆக வேண்டும். அதற்குத் தேவையான ஊட்டச்சத்தை உணவின் மூலம் கொடுக்க முடியாவிட்டால் நாம் தான் அதனை சரிசெய்ய வேண்டும். அதற்கு இயற்கையாகவே கிடைக்கும் சில பொருட்களை வைத்து வீட்டிலேயே இந்த ஹேர் பேக்கை தயார் செய்து கொள்ளலாம். அதனை வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் போதும். உங்கள் முடி கொட்டும் பிரச்சனை உடனே தெரிந்துவிடும்.

தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் – 5, செம்பருத்திப் பூ – 10, செம்பருத்தி இலை – ஒரு கைப்பிடி, மருதாணி இலை – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, கரிசலாங்கண்ணி – ஒரு கைப்பிடி, வேப்ப இலை – ஒரு கொத்து, வெந்தயம் – 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அனைத்து இலைகளையும் தண்ணீரில் சுத்தமாக அலசி வைக்க வேண்டும்.

பிறகு ஐந்து நெல்லிக்காயிலும் அதில் உள்ள கொட்டையை மட்டும் அகற்றி விட்டு, அதனை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய், சின்ன வெங்காயம் மற்றும் ஊறவைத்த வெந்தயம் இவற்றை மட்டும் சேர்த்து முதலில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் செம்பருத்திப் பூ, கருவேப்பிலை, மருதாணி இலை, வேப்பிலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி இலை ஆகிய அனைத்தையும் சேர்த்து, இவற்றுடன் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு வடிகட்டி வைத்து நன்றாக வடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தலை முடியில் எண்ணெய் தடவி இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி முடியின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு இந்த ஹேர் பேக்கை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவி விட வேண்டும். பிறகு பத்து நிமிடத்திற்கு நன்றாக மசாஜ் செய்து, அதன் பின்னர் முடியை சுருட்டி கட்டிவிட வேண்டும். இவ்வாறு ஒரு மணி நேரத்திற்கு ஊற வைத்த பின்னர், தலைமுடியை நன்றாக அலசி விட வேண்டும். இதனை மூன்று நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்திற்கு ஒருமுறையோ பயன்படுத்தி வர முடி கொட்டும் பிரச்சனை உடனே நின்று விடும்.

- Advertisement -