சப்த கன்னிகளில் ஒருவராக திகழக் கூடியவர் வாராகி அம்மன். ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக திகழக்கூடியவரும் வாராகி அம்மன் தான். இவர் விஷ்ணுவின் அம்சமாக திகழக்கூடியவர். மேலும் நீல நிற முகமுடையவராகவும் திகழ்கிறார். நம்மை பாதுகாக்கும் ஒரு காவல் தெய்வமாகவும் இந்த அம்மன் திகழ்கிறார். அப்படிப்பட்ட இந்த அம்மனிடம் நாம் எந்த முறையில் வேண்டுதல் வைத்தால், நடக்காத காரியம் நடந்திடும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வாராகி வழிபாடு
ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்வார்கள். அந்த முயற்சிகளில் தோல்வியை தொடர்ந்து கண்டு காணும் பொழுது அவர்களுக்கு ஒரு வித விரக்டி ஏற்பட்டு, அந்த வேலையை செய்யாமலேயே விட்டுவிடுவார்கள். அப்படி விரக்டி அடைந்த வேலையையும் விரைவில் செய்து முடிப்பதற்கு வாராகி அம்மன் நமக்கு அருள் புரிவார். இந்த வாராஹி அம்மனை நாம் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் வழிபட முடியும். அந்த அம்மனின் வழிபாட்டு முறைகளில், அந்த அமலுக்குரிய மந்திரங்களும் மிகவும் சிறப்பு கூறியதாகவே திகழ்கிறது. இந்த வழிபாட்டை பஞ்சமி அல்லது அஷ்டமி தினத்தில் ஆரம்பிப்பது என்பது மிகவும் சிறப்பு. அதுவும் வளர்பிறையில் வரக்கூடிய பஞ்சமி, அஷ்டமியாக இருந்தால் அது இன்னும் பல சிறப்புகள் உடையதாகவே திகழும்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாக வாராகி அம்மனுக்கு என்று தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு மிகவும் எளிமையான முறையில் கற்கண்டு தேன் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்கலாம். இயன்றவர்கள் பானகத்தை நெய்வேத்தியமாக வைப்பது மிகவும் சிறப்பு. அடுத்ததாக அம்மனுக்கு செம்பருத்தி பூ என்பது மிகவும் பிடித்தமான பூவாக திகழ்கிறது. இந்த செம்பருத்தி பூவை பறித்து வைத்துக்கொண்டு அம்மனின் மந்திரத்தை கூறி அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். 54 அல்லது 108 என்ற எண்ணிகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். மந்திரம் “ஓம் சௌபாக்கிய வாராகியே நமஹ”. இந்த மந்திரத்தை கூறி செம்பருத்தி இதழ்களை வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ எந்த காரியம் உங்களுக்கு நடக்காமல் தடைப்பட்டு கொண்டு இருக்கிறதோ அந்த காரியம் விரைவிலேயே நடைபெற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாராகி அம்மனுக்கு இந்த மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு விரைவிலேயே அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வழியை அந்த அம்மன் காட்டுவாள்.
இதயம் படிக்கலாமே: சகல நன்மைகளும் ஏற்பட பௌர்ணமி பரிகாரம்
மிகவும் எளிமையான வாராகி அம்மன் வழிபாட்டை முழு மனதுடன் செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்த காரியம் நடைபெறுவதோடு அனைத்து விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும். என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.