குப்பையில் தூக்கிப் போடும் இந்த 1 பொருள் இருந்தால் போதும். உங்கள் தலையில் இருந்து ஒரு முடி கூட உதிர்ந்து இனி குப்பைக்கு போகவே போகாது.

hair10
- Advertisement -

தலைமுடி உதிர்வு என்பது எல்லோருக்கும் இயற்கையாக இருக்கக்கூடிய ஒரு விஷயம்தான். 20 லிருந்து 30 முடிகள் கொட்டுவதன் மூலம் பெரியதாக எந்த பாதிப்பும் இருக்காது. அதுவே அளவுக்கு மீறி ஒரு நாளைக்கு கொத்துக்கொத்தாக முடி உதிர்வு கையோடு வருகிறது எனும் போது தான் நாம் கொஞ்சம் அந்த முடி உதிர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முடி உதிர்வை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக விலை உயர்ந்த ஷாம்பு எண்ணெய் இவைகளை தேடி ஓட வேண்டாம்.

உங்களுடைய உடம்பு ஆரோக்கியமாக தான் இருக்கிறது. எந்த காரணத்தினால் முடி கொட்டுகிறது என்று தெரியவில்லை எனும்போது முதலில் சில இயற்கையான குறிப்புகளை பின்பற்றி பார்ப்பதில் தவறு கிடையாது. இப்படிப்பட்ட இயற்கையான குறிப்புகளை பின்பற்றியும் இரண்டு மூன்று மாதம் கழித்து முடி உதிர்வு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஆனால் உங்களுக்கு இப்படிப்பட்ட குறிப்புகளை பின்பற்றியும் இன்னும் அதிகமாக முடி உதிர்வு இருக்கிறது எனும் போது, மட்டும் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

- Advertisement -

சரி இப்படிப்பட்ட முடி உதிர்வை நிறுத்துவதற்கு நம்முடைய வீட்டிலேயே கிடைக்கக்கூடிய எளிமையான பொருட்களை வைத்து ஒரு சீரம் எப்படி தயார் செய்யப் போகின்றோம் என்பதை பற்றிய அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். எளிமையான இந்த அழகு குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக முடி உதிர்வில் நல்ல வித்தியாசம் தெரியும். முடி உதிர்வு ஒரு சில நாட்களில் படிப்படியாக குறைவதை உணருவீர்கள்.

முடி உதிர்வை தடுத்து நிறுத்தும் சீரம் தயார் செய்வது எப்படி?
இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள். வாழைப்பழ தோல் – 1, பெரிய வெங்காயம் – 1, காபித்தூள் – 1 ஸ்பூன், அரிசி – 2 டேபிள் ஸ்பூன், 1/2 லிட்டர் – தண்ணீர்.

- Advertisement -

ஏதாவது ஒரு வாழைப்பழத்தின் தோலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தோலை எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல மீடியம் சைஸில் இருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தின் தோல் நீக்கி விட்டு அதையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பெரிய வெங்காயத்தை பயன்படுத்துவது நல்லது.

ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் வாழைப்பழ தோல், பெரிய வெங்காயம், காபித்தூள், அரிசி இந்த நான்கு பொருட்களையும் போட்டு அரை லிட்டர் அளவு குடிக்கின்ற நல்ல தண்ணீரை அதில் ஊற்றி இதை அப்படியே அடுப்பில் வைத்து மிதமான தீயில் 7 லிருந்து 8 நிமிடம் கொதிக்க வையுங்கள். எல்லா பொருட்களில் இருக்கும் சத்தும் அந்த தண்ணீரில் இறங்கிவிடும்.

- Advertisement -

அடுப்பை அணைத்து ஒரு மூடி போட்டு இந்த தண்ணீரை நன்றாக ஆறவிடுங்கள். அதன் பின்பு ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி பிழிந்து இந்த தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 7 நாட்கள் வரை கெட்டுப்போகாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள், அப்படி இல்லை என்றால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த ஸ்ப்ரேவை தலையில் அடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஸ்ப்ரேவிலிருந்து அவ்வளவு கெட்ட வாடை ஒன்றும் நமக்கு வீசாது. நீங்கள் வெளியே செல்ல வேண்டும் உங்களுக்கு இந்த வாடை பிடிக்கவில்லை என்றால் தலைக்கு குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இந்த ஸ்பிரேவை மயிர் கால்களில் படும்படி அடித்து லேசாக விரல்களை வைத்து மசாஜ் செய்து அதன் பின்பு தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இனி தேங்காய் எண்ணெய் காய்ச்சும் போது இந்த ட்ரிக்ஸ் பாலோ பண்ணுங்க, பத்தே நிமிஷத்துல எப்போதையும் விட அதிகமாவே எண்ணெய் காய்ச்சலாம். இந்த ட்ரிக்ஸ் சூப்பரா ஒர்கவுட் ஆகும்

இந்த ஸ்ப்ரே உங்களுடைய முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தும். முடியை உதிராமல் பாதுகாக்கும். தேவைப்பட்டால் இந்த ஸ்ப்ரேவை முடியின் நுனிவரை கூட அடித்துக் கொள்ளலாம். ரொம்பவும் டிரை ஆக இருக்கக்கூடிய உங்க முடி சில்கியாக மாறும். அதற்கு உண்டான சத்து வாழைப்பழத் தோலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேலே சொன்ன இந்த எளிமையான அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -