இனி தேங்காய் எண்ணெய் காய்ச்சும் போது இந்த ட்ரிக்ஸ் பாலோ பண்ணுங்க, பத்தே நிமிஷத்துல எப்போதையும் விட அதிகமாவே எண்ணெய் காய்ச்சலாம். இந்த ட்ரிக்ஸ் சூப்பரா ஒர்கவுட் ஆகும்

- Advertisement -

எந்த ஒரு பொருளுமே கடையில் வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலே செய்து மிகவும் நல்லது. அதிலும் உண்ணும் பொருள்களை நாமே செய்யும் போது பொருளின் தரமும், ருசியும் கூடுதலாகவே இருக்கும். இந்த தேங்காய் எண்ணெய் பொறுத்த வரையில் கடையில் வாங்குவதை விட, நம் வீட்டில் மாதத்தில் ஒரு நாள் இதற்கென ஒதுக்கினால் போதும். வீட்டிலே சுலபமாக எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தலாம். இதனால் பணமும் மிச்சமாகும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அது எப்படி என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முதலில் ஓட்டிலிருந்து தேங்காய் தனியாக எடுக்க வேண்டும். தேங்காய் துருவி எண்ணெய் காய்ச்ச வேண்டும் என்றால் ஒரு நாள் முழுவதும் துருவ வேண்டும். கையெல்லாம் வலி எடுத்து விடும். இந்த முறையில் தேங்காயை தனியாக பிரித்து எடுப்பது மிகவும் சுலபம். அதற்கு ஸ்டவ்வை பற்ற வைத்து இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். அதன் மேல் இட்லி தட்டை வைத்து தேங்காய் முடிகளை வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக விட்டு அதன் பிறகு சூடு ஆறியவுடன் எடுத்து ஒரு கத்தி வைத்து லேசாக சுழட்டுங்கள் தேங்காய் ஓட்டிலிருந்து தேங்காய் சுலபமாக வெளியே வந்து விடும்.

- Advertisement -

இந்த தேங்காயை பொடி பொடியாக அரிந்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தேங்காய் பால் எடுப்பதற்கு பச்சை தண்ணீருக்கு பதிலாக வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றுங்கள். தேங்காய்ப் பால் திக்காக அதே நேரத்தில் அதிகமாகவும் கிடைக்கும். இதில் இன்னொரு முக்கியமான டிப்ஸ்ம் பாலோவ் செய்யலாம். இந்த தேங்காய் அரைக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு சேர்த்து அரைத்து விட்டால்,தேங்காய்ப்பால் இன்னும் அதிக கெட்டியாக கிடைக்கும். தேங்காய் பால் கெட்டியாக இருந்தால் பாலும் அதிகமாக கிடைக்கும்.

இப்படி அரைத்த தேங்காய் விழுதை ஒரு பாத்திரத்தின் மேல் ஜல்லி வைத்து, அரைத்த விழுதை எல்லாம் அதில் சேர்த்து விடுங்கள். தேங்காய் பால் மொத்தமாக வடிந்து பாத்திரத்தில் சேர்ந்து விடும்.

- Advertisement -

இப்போது தேங்காய் பாலை நீங்கள் நேரடியாக அடுப்பில் ஊற்றி காய்ச்சி தொடங்கினால் இன்றெல்லாம் காய்ச்சி கொண்டே இருக்க வேண்டியது தான். அதற்கு இந்த தேங்காய் பாலை ஒரு பிளாஸ்டிக் கண்டைனரில் ஊற்றி ப்ரீசர் பாக்ஸ்சில் வைத்து விடுங்கள்.  இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தால், தேங்காய் எண்ணெய் கொழுப்பு மேலே இருக்கும் தண்ணீர் மொத்தமும் அடியில் தங்கி விடும். மேலே தங்கியிருக்கும் கொழுப்பை மட்டும் எடுத்து கடாயில் சேர்த்து காய்ச்சல் தொடங்கலாம். இந்த கண்டெனரை இன்னொரு முறை வைத்தாலும் இதே போல் கொழும்பு மேலே வரும் நீங்கள் மொத்தமாக அனைத்தையும் சேகரித்து வைத்து கூட காய்ச்சலாம். மீதம் இருக்கும் அந்த தண்ணீரையும் வீணாக்காமல் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கடாயில் ஊற்றி காய்ச்சத் தொடங்கும் போது எண்ணெய் நன்றாக பிரிந்து ஓரங்களில் திப்பி போல வர ஆரம்பிக்கும். எண்ணெய் கொதிக்க கொதிக்க இந்த திப்பிகளை எல்லாம் ஓரமாக சேகரித்துக் கொண்டே வர வேண்டும் இல்லையென்றால் இதில் எண்ணெயில் தங்கி, எண்ணெய் வீணாகி விடும்.

- Advertisement -

இந்த முறையில் ஒரு பத்து நிமிடம் காய்ச்சினாலே போதும் தேங்காய் எண்ணெய் உங்களுக்கு தரமானதாக அதே நேரத்தில் அதிகமாகவும் கிடைத்து விடும். அதன் பிறகு இதை ஆற வைத்து ஒரு பாட்டில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: அட வெள்ளை ஷூ சாக்ஸை துவைக்கிறது இவ்வளவு சுலபமா! அப்ப இனி கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியமே இல்ல. அந்த சூப்பர் ஐடியாவை தெரிஞ்சிக்கலாம் வாங்க.

இந்தப் பதிவில் உள்ள குறிப்புகளை பயன்படுத்தி தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் எடுக்கும் போது உங்களுக்கு எப்போதும் விட எண்ணெய் கூடுதலாக கிடைக்கும். அது மட்டும் இன்றி சுலபமாக வேலையும் முடிந்து விடும். இனி நீங்களும் உங்கள் வீட்டில் தேங்காய் பால் எடுக்கும் போது எந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணி சுலபமாக தேங்காய் எண்ணெய் காய்ச்சலாம்.

- Advertisement -