இதனால் தான் பரு வருதா? உடல் ஆரோக்கியத்தில் இருக்கக்கூடிய பிரச்சனையை கண்டுபிடிக்க உதவும் முகப்பரு. உங்க முகத்தில் அடிக்கடி எந்தெந்த இடத்தில் முகப்பரு வரும்?

pimple
- Advertisement -

பையனுக்கு முகப்பரு வந்து விட்டால், ஏதோ ஒரு பொண்ணு உன்னை குறுகுறுன்னு பார்க்குது என்று சொல்லுவார்கள். பெண்களுக்கு முகப்பரு வந்து விட்டால் ஏதோ ஒரு பையன் உன்னை சைட் அடிக்கிறான் அப்படின்னு சும்மா விளையாட்டாக சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த முகப்பரு வருவதற்கு என்னதான் காரணமாக இருக்கும். நமக்கு தெரிந்த வகையில் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் முகப்பரு வரும். ஹார்மோன் இன் பேலன்ஸ் காரணமாக முகப்பரு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர உடல் உள் உறுப்புகளில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை கண்டுபிடிக்கவும் இந்த முகப்பரு உதவியாக இருக்குமாம். முகத்தில் எந்தெந்த இடத்தில் முகப்பரு வந்தால் ஆரோக்கியத்தில் எந்தெந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆரம்பமாக உள்ளதா. வாங்க பார்க்கலாம்.

நெற்றியில் பரு வந்தால்:
ஒருவருக்கு அடிக்கடி நெற்றியில் பரு வந்து போகிறது என்றால் அவருக்கு ஜீரண சக்தி சீரில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம். உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் சரியாக வெளியேற்ற படாததாலும், நெற்றியில் முகப்பரு அடிக்கடி வரும். நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு பண்டங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். நிறைய தண்ணீரை குடிப்பது அவசியம். குறிப்பாக நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் பழங்களை உட்கொள்ளலாம். உதாரணத்திற்கு ஆரஞ்சு பழம், மாதுளை பழம், சாத்துக்குடி, போன்ற பழங்களை சாப்பிடுங்கள். காய்கறிகளை அதிகமாக உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர் பானங்களை நீங்கள் குடிக்க கூடாது.

- Advertisement -

புருவங்களுக்கு அருகில் பரு வந்தால்:
புருவங்களுக்கு அருகில் பருக்கள் வருவதற்கு முதல் காரணம் தூக்கம் இன்மை. சரியாக தூங்காததினால் மன அழுத்தம், உடல் சோர்வு ஏற்படுகிறதா. உடல் சோர்வு மன சோர்வு இருப்பதினால் சரியாக தூக்கம் வரவில்லையா. எந்த காரணமாக இருந்தாலும் நீங்கள் சரியாக தூங்கவில்லை. எப்போதுமே டென்ஷனாக இருந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. தூக்கமும் சரியாக இருக்காது. இப்படி அடிக்கடி புருவங்களுக்கு மேலோ, புருவங்களுக்கு கீழே உங்களுக்கு முகப்பரு வருகிறது என்றால் நீங்கள் உங்களுடைய மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இரவு நன்றாக தூங்க வேண்டும். காலையில் எழுந்து மனதை அமைதி படுத்த பத்து நிமிடங்கள் தியானம் செய்து பழகுவது நல்லது.

இரண்டு புருவங்களுக்கு நடுவில் அல்லது மூக்கில் பரு வந்தால்:
இப்படி மூக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் பரு வந்தால் உங்களுடைய கல்லீரலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தம் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்கள் அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்த்துக் கொள்ளலாம். குறைந்த காரமுள்ள பொருட்களை சாப்பிடலாம். இதே போல கெட்ட பழக்கத்துக்கு அடிமையாக இருப்பவர்களுக்கும் இந்த முகப்பரு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கும் சமயத்தில் மூக்கில் முகப்பரு வரும்.

- Advertisement -

இரண்டு கன்னங்களில் பரு வந்தால்:
அதிகம் தூசி உள்ள இடங்களில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு இப்படி கன்னங்களில் பரு வரும். காரணம் மாசு நிறைந்த காற்று நம்முடைய கன்னங்களில் படியும்போது சரும பிரச்சனைகளால் கன்னங்களில் முகப்பரு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேபோல நீங்கள் படுக்கக் கூடிய தலையணை அழுக்காக இருந்தாலும் கன்னத்தில் முகப்பரு வரும்.

தாடையில் முகப்பரு:
ஹார்மோன் சுரப்பதில் பிரச்சனைகள் இருந்தால், தாடையில் முகப்பரு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை சாப்பிட வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த பொருட்களை உணவுகளோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது.

- Advertisement -

கன்னத்தின் ஓரங்களில் அதாவது கன்னத்திற்கும் காதிற்கும் இடையில் முகப்பரு வந்தால்:
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் இந்த இடத்தில் முகப்பரு வரும். சில பேருக்கு மாதவிடாய் வருவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே இந்த முகப்பரு வரும். அவர்கள் பார்த்த உடனே கண்டுபிடித்து விடுவார்கள். சில நாட்களில் மாதவிடாய் வரப்போகிறது என்று. குறிப்பிட்ட இந்த இடம் பிறப்பு உறுப்போடு சம்பந்தம் உடையதாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இதுவும் ஹார்மோன் குறைபாடு காரணமாகத்தான் வருகின்றது.

காதுகளில் முகப்பரு வந்தால்:
சில பேருக்கு காதுகளில் கூட முகப்பருவரும். உடலில் நீர் சத்து குறையும் போது, இந்த முகப்பரு வருவதாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. உணவில் உப்பை அளவோடு சேர்த்து சாப்பிடுங்கள். உப்பின் அளவு அதிகமாகி விட்டாலும் காதில் முகப்பரு வரும். நிறைய நீராகாரங்களை எடுத்துக் கொள்ளும் போது இந்த முகப்பரு வருவதை படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம்.

முகத்தில் வரக்கூடிய பருக்களின் மூலம் நம் உடம்பில் இருக்கும் ஆரோக்கிய குறைபாடுகளையும் தெரிந்து கொள்வதற்காக இந்த குறிப்புகள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இப்படி எல்லாம் பருக்கள் வந்தால் எனக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் இருக்குமோ என்று பயந்து விட வேண்டாம். தொடர்ந்து இப்படி ஒரே இடத்தில் பருக்கள் மீண்டும் மீண்டும் வருகிறது எனும் பட்சத்தில் உங்களுடைய மருத்துவரை அணுகுவது நல்லது.

- Advertisement -