முகத்தில் தழும்புகள், வடுக்கள், கீறல்கள் போன்றவை இருந்தால் முற்றிலும் இயற்கையாக எப்படி துரத்துவது? மின்னும் சருமம் பெற என்ன செய்யலாம்?

orange-thalumbu
- Advertisement -

எல்லோருக்குமே தங்களுடைய முகம் பளிச்சென ஜொலிக்க வேண்டும் என்பது தான் ஆசை! ஆனால் எத்தனை பேருக்கு அப்படி இருக்கிறது? காலையில் முகம் கழுவி விட்டு வேலைக்கு சென்றால், ஓரிரு மணி நேரங்களில் முகத்தில் இருக்கும் பொலிவு மங்கிப் போய் சோர்வுற ஆரம்பித்துவிடும். முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் முகத்தில் இருக்கும் தழும்புகள், வடுக்கள், கீறல்கள் போன்றவை முக அழகிற்கு இடையூறாக இருக்கிறதா? அதற்கான எளிய தீர்வை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

rose

வறண்டு போன சருமம் இருந்தாலும், சிலருக்கு முகத்தில் சுருக்கங்களும், பொலிவின்மையும் ஏற்பட்டுவிடும். இதனால் எப்போதும் ஈரப்பதத்துடன் மென்மையாக இருப்பதற்கு, வறண்ட சருமம் கொண்டவர்கள் கொஞ்சம் பன்னீரை பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் ஒற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நன்கு உலர்ந்த பின்பு முகத்தை அலம்பினால், வறண்ட சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

- Advertisement -

சருமத்தில் எங்காவது தழும்புகள், கீறல், வடுக்கள் போன்றவை ஏற்பட்டால் அது அவ்வளவு எளிதாக மறைவது இல்லை. குறிப்பாக பருக்கள் வந்து சென்ற அடையாளம் எப்பொழுதும் முகத்தில் அழியா தழும்பாக இருக்கும். இதனால் நம்முடைய முகம் ரொம்பவே வயதானது போல தோற்றமளிக்க ஆரம்பித்துவிடும். முகத்தில் இருக்கும் இத்தகைய கீறல்கள், வடுக்கள், தழும்புகள் ரொம்பவே எளிதாக பத்து பைசா செலவில்லாமல் நீங்குவதற்கு நீங்கள் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி பழ சாற்றை விதைகள் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

tomato

அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தழும்புகள் இருக்கும் இடத்தில் மட்டும் அல்லாமல், முகம் முழுவதும் தடவி நன்கு உலர விட்டு விடுங்கள். குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊறிய பின்பு முகத்தை அலம்பி விடுங்கள். இது போல வாரம் ஒருமுறை செய்து வர வடுக்கள், தழும்புகள் எது இருந்தாலும், அது இருந்த இடம் தெரியாமல் முற்றிலும் நீங்கிவிடும்.

- Advertisement -

அதே போல நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், சொரசொரப்பு தன்மை நீங்கி வழவழப்பாக, பளபளப்பாக இருப்பதற்கு பெஸ்ட் ஐடியா என்று சொன்னால் அது மக்காச்சோள மாவு தான். கான்ஃப்ளவர் என்று கூறப்படும் இந்த மக்காச்சோள மாவு நம் முகத்திற்கு ஸ்கரப்பர் போல செயல்படும். மக்காச்சோள மாவு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு முகம் முழுவதும் மசாஜ் செய்து, 15 நிமிடம் உலரவிட்டு கழுவினால் முகம் பளபளவென 100% மின்ன ஆரம்பித்துவிடும்.

conflour-powder

கமலா ஆரஞ்சு என்று சொல்லப்படும் ஆரஞ்சு வகையில் ஒரு வகையாக இருக்கும் இந்த ஆரஞ்சு பழங்களை தினமும் ஒன்றிரண்டு சாப்பிட்டு வருபவர்களுக்கு சரும ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவது இல்லை. இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உடலை பளபளப்பாக வைத்திருக்கும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். ஆரஞ்சு பழத் தோலை காய வைத்து அதனை நைசாக பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த பவுடரில் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி உலர விட்டு கழுவினால் முகத்தில் மாசு, மருவின்றி இயற்கையாகவே மின்னும் சருமத்தை அடையலாம்.

- Advertisement -