சமையலறையில் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய இந்த 2 பொருட்களை தினமும் முகத்தில் தடவி வந்தாலே போதும். உங்கள் முகமும் வெள்ளையாக மாறி பளபளப்பாக ஜொலிக்கும்.

face2

முகம் வெள்ளையாக மாற வேண்டும் என்றால், முடிந்தவரை செயற்கையான பொருட்களை முகத்தில் தடவுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற இறந்த செல்களை நீக்கி விட்டாலே, முகத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதாவது, முகப்பரு, கரும்புள்ளிகள், முகச்சுருக்கம், கருந்திட்டுகள் இவை அனைத்தும் வருவதற்கு காரணம், முகம் பொலிவு இழப்பதற்கு காரணம், முகத்தில் இருக்கும் தேவையற்ற இறந்த செல்கள்தான். இதை சுலபமான முறையில், நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி நீக்குவது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

face1

நம் வீட்டு சமையலறையில் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய உப்பையும் சர்க்கரையும் வைத்து தான் இந்த அழகு குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. அதிகப்படியான செலவு கிடையாது. வெளியில் பணம் கொடுத்து எதையும் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களை நீங்களே 30 நாட்களில் அழகாக வெள்ளையாக பளபளப்பாக மாற்றிக் கொள்ளலாம். அது எப்படி இப்பவே பார்க்கலாம் வாங்க.

உப்பு நம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை மொத்தமாக நீக்கிவிடும். உப்பில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் முகத்தை ஆழமாக சுத்தம் செய்துவிடுகிறது. அடுத்ததாக சர்க்கரை. இயற்கையான ஸ்க்ரப்பர், இந்த சர்க்கரை என்று சொல்லலாம். நம் முகத்தில் இருக்கும் கரும் திட்டுகளை முழுமையாக நீக்கிவிடும். இதை இரண்டையும் ஒன்றாக கலக்க நாம் இதில் பயன்படுத்தப் போகும் மூன்றாவது பொருள் எலுமிச்சை பழ சாறு.

face

எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகமாக அடங்கியுள்ளதால், நம்முடைய முகத்தை பொலிவாக வைத்திருப்பதில் இதற்கு முதலிடம். இறுதியாக இதில் ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம். ரோஸ் வாட்டரை சேர்த்துக்கொள்வதால் நம்முடைய முகத்தில் முகப்பருக்கள் வராமல் இருக்கும். முகம் ஒரு நாள் முழுவதும் பொலிவிழக்காமல் இருக்க ரோஸ்வாட்டர் உதவியாக இருக்கும்.

- Advertisement -

முதலில் ஒரு அகலமான பவுல் எடுத்துக்கொள்ள போகிறீர்கள். அதில் 1 ஸ்பூன் அளவு சர்க்கரை, 1 ஸ்பூன் அளவு உப்பு, 1 ஸ்பூன் அளவு எலுமிச்சை பழச்சாரு, 1 ஸ்பூன் அளவு ரோஸ் வாட்டர், இந்த எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து அப்படியே வைத்து விடுங்கள். இப்போது நீங்கள் இந்த கலவையை எந்த இடத்தில் பயன்படுத்த போகிறீர்கள்.

face-wash

முகத்திலும் போட்டுக்கொள்ளலாம். முகத்திற்கு நாம் பயன்படுத்தும் பொருளை கட்டாயம் கழுத்து பகுதியிலும் போட வேண்டும். அப்போது தான் நம்முடைய அழகு முழுமையாக இருக்கும். அடுத்தபடியாக கை கால்களிலும் இந்த பொருளை வைத்து மசாஜ் செய்து தரலாம். ஆனால் எந்த இடத்தில் இந்த கலவையை நீங்கள் போட்டு மசாஜ் செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு முன்பாக உங்களுடைய சருமத்தின் மேல் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய்யை நன்றாகத் தடவி விட வேண்டும்.

face3

அதன் பின்பு தேங்காய் எண்ணெயின் மேல், தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவையை தொட்டு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விட்டு, 5 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் உங்களுடைய முகத்தை கழுவி விடலாம்.

face1

வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி செய்து வாருங்கள். ஒரே மாதத்தில் உங்களுடைய முகம் பொலிவடையும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நினைவிருக்கட்டும் முகத்தில் 2 சொட்டு தேங்காய் எண்ணெயை எடுத்து நன்றாக தடவி விட்டு, அதன் பின்பு, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவையை மசாஜ் செய்ய வேண்டும். உங்களுக்கு இந்தக் குறிப்பு பிடித்திருந்தால், நீங்கள் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வித்தியாசமான ‘வெந்தயக்கீரை புலாவ்’ இப்படி சுலபமாக ஒருமுறை செய்து பாருங்க! இனி அடிக்கடி வீட்டில் கேட்டுட்டே இருப்பாங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.