உங்கள் சருமத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்கி முகம் முழுவதும் பளிச்சென்று வெள்ளையாக மாற இந்த இரண்டு பேஸ் பேக்குகளை உடனே தயார் செய்து கொள்ளுங்கள்

face-kadalai-maavu-curd
- Advertisement -

ஆண், பெண் இருவருக்குமே சரும பிரச்சனைகள் என்பது பொதுவான விஷயம் தான். அதில் பெண்களுக்கு கொஞ்சம் மிருதுவான சருமமும், ஆண்களுக்கு வலிமையான சருமம் இருக்கும். ஆனால் முகத்தில் உண்டாகும் சரும பிரச்சனைகள் அனைத்தும் ஒரே விதமாகத்தான் இருக்கும். டீன்ஏஜ் வந்த உடனேயே முகத்தில் வரும் முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்காக இவர்கள் கடைகளில் விற்கும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்து விடும். ஆனால் அதற்கு உள்ளே இருக்கும் ஆழமான பிரச்சனை என்றும் மறைவதில்லை. இதனால் சில நாட்களுக்குப் பிறகு அதிகப்படியான முகப்பருக்கள் வர ஆரம்பிக்கும். இதன் காரணமாக முகத்தில் கருப்பு புள்ளிகள் மற்றும் தழும்புகள் உண்டாகும். இவற்றை முழுவதுமாக அகற்றவும், முகத்தை பளிச்சென்று மாற்றவும் இந்த ஃபேஸ் பைக்குகள் வீட்டிலேயே சுலபமாக செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஃபேஸ் பேக்: 1
உடலில் இருக்கும் தோலின் தன்மையை முகத்தில் இருக்கும் தோலின் தன்மையை விட மிகவும் மிருதுவாக இருக்கும். இதனை எப்பொழுதும் மென்மையாக பராமரிக்க வேண்டும். தேவையில்லாத க்ரீம்களை பயன்படுத்துவது, ஊசி, பின் இவற்றை வைத்து முகப்பருக்களை சரி செய்வது போன்ற எந்தவித தரும பாதிப்புகளையும் செய்யக்கூடாது.

- Advertisement -

எனவே ஆயுர்வேத முறைப்படி நமது வீட்டிலிருக்கும் பொருட்களையோ, அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொருட்களை வைத்தோ நமது சரும பிரச்சனையை சரிசெய்து கொள்ளலாம். அவ்வாறு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய அஸ்வகந்தா பொடியை வாங்கி கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அஸ்வகந்தா பொடி மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே ஊற விட்டு, அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சரும பிரச்சனைகள் அனைத்தும் முழுமையாக மறைந்து முகம் அழகாக மாறும்.

- Advertisement -

ஃபேஸ் பேக்: 2
ஒரு சிறிய கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு தக்காளி பழத்தை இரண்டாக அரிந்து அதில் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அதன் சாறை பிழிந்து எடுக்க வேண்டும். பிறகு கடலை மாவுடன் இந்த தக்காளி சாறை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் இவற்றை முகத்தில் அப்ளை செய்து தக்காளியை வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். கடிகாரம் சுழற்றும் முறையில் மசாஜ் செய்ய நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு செய்த பிறகு மறுபடியும் கொஞ்சம் க்ரீமை எடுத்து முகத்தில் நன்றாக தடவி 20 நிமிடம் ஊற வைத்து அதன் பின்னர் முகத்தை கழுவி கொள்ள வேண்டும்.

- Advertisement -