உங்கள் முகம் பளிச்சென்று பட்டு போல மின்ன இதை ஒரே ஒருமுறை முகத்தில் தேய்த்தால் போதுமே!

face-curd-rice-flour
- Advertisement -

முகம் எப்பொழுதும் தூங்கி வழிந்தாற் போல டல்லாக இருக்கிறதா? வயதிற்கு மீறிய முதிர்வு சிலருடைய முகத்தில் தென்படும். முகத்தில் இருக்கும் தோல் தளர்வடைந்து சுருக்கங்கள் விழ ஆரம்பிப்பதால் இது போன்ற தோற்றம் பொதுவாக ஏற்படுகிறது. நவீன நாகரீகம் என்கிற பெயரில் உடலுக்கு ஒவ்வாத சில உணவு முறை மாற்றத்தினால் இளம் வயதினர் கூட முதிர்ச்சியான தோற்றத்தைப் பெற்று விடுகின்றனர். ஒருமுறை இந்த பேக்கை முகத்தில் போட்டால் முகம் பளிச்சென பட்டு போல மின்ன ஆரம்பிக்கும். அதை எப்படி தயாரிப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

முகத்தில் இருக்கும் சிறு சிறு துவாரங்கள் வழியே மாசுகளும், தூசுகளை உள்ளே சென்று முகப்பருக்களை ஏற்படுத்தி விடுகிறது. இந்த முகத்தில் இருக்கும் துவாரங்களை அடைத்து முகத்தை இறுக்கமடையச் செய்யும் எளிய பொருட்கள் நம் வீட்டிலேயே இருக்கின்றது. இதற்காக அதிக செலவு செய்து முகத்தைப் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்தே 10 பைசா செலவில்லாமல் வீட்டிலேயே ஒரு முறை இந்தப் பேக்கை முகத்தில் தடவி விட்டால் போதும், நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய முகம் பளிச்சென மாறும்.

- Advertisement -

பல ஆயிரங்களை செலவு செய்து முகத்தை பராமரிக்கும் பெண்களும், ஆண்களும் வீட்டிலேயே கிடைக்கக் கூடிய இந்த இயற்கை அழகு பொருட்களின் மீது கவனம் செலுத்துவது இல்லை. ஒரு சிறிய பௌலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி மாவிற்கு பதிலாக கடலை மாவு அல்லது கோதுமை மாவு கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முகத்திற்கு ப்ளீச் போல இந்த மாவு உங்களுக்கு செயல்படும்.

இதனுடன் நாம் சேர்க்கப் போகும் பொருட்களும் முகத்தை பொலிவாக்கும் தன்மை படைத்தவை. ஒரு ஸ்பூன் அளவுக்கு கெட்டியாக இருக்கும் ஃப்ரெஷ் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். புளித்த தயிரை சேர்க்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்துங்கள். பின்னர் ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும். கற்றாழை ஜெல் இயற்கையாக நீங்கள் பறித்து அதில் இருக்கும் ஜெல்லை எடுத்து பயன்படுத்தினாலும் சரி, கடைகளில் விற்கும் டியூப்களில் அடைத்த ஜெல்லை பயன்படுத்தினாலும் சரி, நீங்கள் பெண்களாக இருந்தால் கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆண்களாக இருக்கும் பட்சத்தில் இதனை தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -

பின்னர் நன்கு அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் படி அடித்துக் கொள்ளுங்கள். கிரீமி போல உங்களுக்கு இந்த பேக் கிடைத்துவிடும். பின்னர் முகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முன்னும் பின்னுமாக லேசாக அழுத்தம் கொடுக்காமல் மசாஜ் செய்யுங்கள். முகப்பரு அதிகமாக இருப்பவர்கள் மசாஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அப்படியே உலர விட்டு விடுங்கள்.

5 நிமிடம் மசாஜ் செய்த பின்பு உலர விட்டு பின்னர் மீண்டும் அதன் மீது இன்னும் கொஞ்சம் அடர்த்தியான லேயராக முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். தயிர், மஞ்சள், கற்றாழை, அரிசி மாவு ஆகிய இந்த நான்கு பொருட்கள் முகத்தில் இருக்கும் வேர்க்கால்கள் முதல் ஊடுருவி சென்று முகத்தை சுத்தம் செய்து உங்கள் முகத்தை ஒரே முறையில் பளிச்சிட வைக்கும். இதனை அடிக்கடி செய்ய தேவையில்லை, மாதம் ஒருமுறை செய்தால் போதுமானது.

- Advertisement -