வீட்டு விசேஷங்களுக்கு தயாராகும் முன் இந்த ஒயிட்னிங் ஃபேசியலை செய்து கொள்ளுங்கள், உங்கள் முகம் தங்கம் போல் மின்ன ஆரம்பிக்கும்

face
- Advertisement -

பெண்கள் பொதுவாகவே ஏதாவது விசேஷங்களுக்கு தயாராகும் முன்னர் தங்கள் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள பலவித ஃபேசியல்களை செய்து கொள்வார்கள். முகத்திற்கு ஃபேசியல் செய்வதன் மூலம் முகத்தின் அழகும் அதிகரித்து, முகத்தில் இரத்த செல்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் அனைத்தும் நிரந்தரமாக வெளியேறிவிடும். இப்படி ஃபேசியல் செய்வது அதிக நன்மைகள் இருக்கின்றது. இதற்காக கடைகளுக்குச் சென்று பணம் அதிகம் செலவழித்து தான் ஃபேசியல் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் கிடையாது. வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்து நல்ல ரிசல்ட் தரக் கூடிய ஃபேயல்களை செய்து கொள்ளலாம். இதன் மூலம் சருமத்திற்க்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். வாருங்கள் இப்படி இயற்கை முறையில் எவ்வாறு சரும அழகை அதிகரிக்க முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பேசியல் செய்வதாக இருந்தால் முதலில் முகத்தை சுத்தம் செய்வதற்கு கிளின்சிங் செய்ய வேண்டும். இதனை செய்வதற்கு வீட்டில் இருக்கும் காய்ச்சாத பசும்பாலை இரண்டு ஸ்பூன் அளவிற்கு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு காட்டனை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக நனைத்து முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.

- Advertisement -

அதன் பின்னர் முகத்தை சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் முழுவதுமாக சுத்தம் செய்யப்படும். இவ்வாறு அடிக்கடி பசும் பால் வைத்து முகத்தை சுத்தம் செய்ய முகம் பளிச்சென்று அழகாக மாறிவிடும்.

முதலில் ஒரு கேரட்டை பொடியாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து, அதனை வடிகட்டி சாறு எடுக்க வேண்டும். இந்த கேரட் ஜூஸுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை முகத்தில் கருப்புத் திட்டுகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.

- Advertisement -

அதன் பின்னர் ஒரு சுத்தமான பவுலில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் பாதாம் பவுடர் மற்றும் இரண்டு ஸ்பூன் கேரட் ஜூஸ் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து, 20 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவேண்டும். மசாஜ் செய்த பின்னர் பத்து நிமிடம் அப்படியே விட்டு விட்டு முகத்தை கழுவ வேண்டும்.

பின்னர் இறுதியாக ஃபேஸ் பேக் போட வேண்டும். இதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் காரட் ஜூஸ், ஒரு ஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை முகம் முழுவதும் அப்ளை செய்து, 20 நிமிடத்திற்கு அப்படியே உலற விட்டு, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு இந்த எளிமையான ஃபேசியலை வாரத்திற்கு ஒரு முறை செய்து வர உங்கள் முகம் பார்லருக்கு செல்லாமலேயே பளபளப்பாக மாறிவிடும்.

- Advertisement -