வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முகத்தை பளபளப்பாக மாற்ற இதை செய்தாலே போதும். பிறகு பாருங்கள் உங்களின் அழகை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

face
- Advertisement -

இன்றைய அவசர காலக்கட்டத்தில் பெண்கள் தங்களை கவனித்து கொள்ள தனியாக நேரம் கிடைப்பதில்லை. வெளியிலும் வேலைக்கு சென்று வந்த பின் வீட்டையும் கவனித்துக் கொள்வதால் அவர்களுக்கு தங்களை அழகு படுத்திக் கொள்ள தனியாக நேரம் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் தான் வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருள்களை கொண்டு அவர்களின் அன்றாட வீட்டு பணிகளுக்கு இடையே தங்களை அழகு படுத்திக் கொள்ள மிகவும் எளிமையான அதே நேரத்தில் அதிக செலவும் இல்லாத வகையில் பத்து குறிப்புகள்.

* காய்ச்சாத பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்க வேண்டும். பின்பு ஒரு பத்து நிமிடம் கழித்து முகம் அலம்பி விடுங்கள். ஏனெனில் இயற்கையாகவே பாலிற்கு சுத்தம் செய்யும் தன்மை உண்டு அது நம் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி முகத்தை பளப்பளப்பாக வைக்கும் இதை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை கூட செய்யலாம்.

- Advertisement -

* காய்ந்த திராட்சை மற்றும் பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவில் எடுத்து நைசாக அரைத்து முகத்திற்கு பேஸ் மாஸ்காக உபயோகிக்கலாம்.

* பச்சை பயிரை நன்றாக காய வைத்து அரைத்து குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு தேய்த்து பின் குளிக்கலாம். இதை உடல் முழுவதும் கூட பயன்படுத்தலாம் இதை உபயோகித்தால் போதும் சோப் போட வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

* கற்றாழை ஜெல்லுடன் சிறிது சர்க்கரை சேர்த்து முகத்தில் தேய்த்து பின்பு அலசிவிடலாம் இதுவும் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும்.

* உலர்ந்த ரோஜா இதழுடன் சிறிது பன்னிரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் மாறும்.

- Advertisement -

* மஞ்சள், இதை பொதுவாகவே பெண்கள் தினமும் உபயோகித்தால் நம் சருமத்தின் நிறம் மாறாது அதுமட்டுமின்றி இது ஒரு நல்ல கிருமி நாசினியும் கூட எனவே பெண்கள் தினமும் மஞ்சள் தேய்த்து குளித்து வந்தாலே எந்த சரும பிரச்சினைகளும் நெருங்காது.

* அதே போல வேப்பிலையும் ஒரு நல்ல கிருமி நாசனி தான். வாரம் ஒருமுறை வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி முகம் பொலிவாகும்.

* வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து இரவு படுக்க போகும் முன்பு முகத்தில் தேய்த்து பின்பு அரை மணி நேரம் கழித்து முகம் கழுவி விடுங்கள்.

* ரோஸ் வாட்டர், சந்தனம் இரண்டையும் கலந்து பேஸ்ட்டாக செய்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி பருக்களும் மறைய தொடங்கும்.

* துளசி சாறும் முருங்கை இலை வேரும் அரைத்து முகத்தில் தேய்த்து வர முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி சிவப்பாக மாறும்

இதை போன்று உங்கள் கைவசம் உள்ள பொருட்களை கொண்டே உங்களின் முக அழகைக் கூட்டிக் கொள்ளலாம் இதற்காக ரசாயனம் கலந்த கீரிம் போன்றவைகளை உபயோகித்து பணத்தையும் செலவு செய்து சருமத்தை பழக்காமல் முடிந்த அளவுக்கு இயற்கை முறையை பயன்படுத்தி பயன்பெறலாம்.

- Advertisement -