வெயிலின் தாக்கத்தினால் உங்கள் முகம் பொலிவிழந்து மங்கலாக இருக்கிறதா, அப்போது உடனே இதனை ட்ரை செய்து பாருங்கள். உங்கள் கலர் ப்ரைட்டாக மாறிவிடும்

- Advertisement -

முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு வெயில், தூசு, சுற்றுச்சூழல் என எதுவாக வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் முகம் எப்படி வேணாலும் இருக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா! முகத்தை பொலிவாக மாற்ற இயற்கையான முறையில் பேஸ் பேக் பயன்படுத்துவது மிகவும் நல்லது. அவ்வாறு உங்கள் முகத்தில் இழந்த பொலிவை மீண்டும் மீட்டெடுக்க அதிமதுரப்பொடி ஒன்று இருந்தால் போதும். இதனை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது உங்கள் முக கருமை நீங்கி, முகம் பளிச்சென்று மாறிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் வறட்சியான சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுகின்றது. எனவே விரைவாகவே உங்கள் முகம் பளிச்சென்று மாறிவிடும். வாருங்கள் இந்த அதிமதுரப்பொடியை முகத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அதிமதுரப் பொடி – ஒரு ஸ்பூன், கடலை மாவு – ஒரு ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – அரை ஸ்பூன், தேன் – ஒரு ஸ்பூன், பன்னீர் – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை:
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அதிமதுரப் பொடி, ஒரு ஸ்பூன் கடலை மாவு இவை இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து விட வேண்டும். இவை மிகவும் கெட்டியாக இருந்தால் தேவையான அளவிற்கு இவர்கள் பன்னீர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் அதன் பின்னர் இந்த அதிமதுர பொடி கலவையை முகத்தில் தடவி 10 லிருந்து 20 நிமிடத்திற்கு அப்படியே உலர விட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதில் ஆன்டி-பயாடிக் பண்புகள் அதிகமாக இருப்பதால் உங்கள் சருமத்தை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. முகப்பொலிவும் அதிகரிக்கிறது.

- Advertisement -

ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
அதிமதுர பொடி – 2 ஸ்பூன், முல்தானிமட்டி – ஒரு ஸ்பூன், தயிர் – 2 ஸ்பூன், பால் – ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் – ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – அரை ஸ்பூன்.

செய்முறை:
முதலில் ஒரு சிறிய பௌலில் இரண்டு ஸ்பூன் அதிமதுரப் பொடி ஒரு ஸ்பூன் முல்தானி மட்டி 2 ஸ்பூன் தயிர் இவற்றை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் பால் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் முகத்தை சுத்தமான நீரில் கழுவித் துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி, அரை மணி நேரத்திற்கு அப்படியே ஆறவிட வேண்டும். இவற்றை முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள், கரும்புள்ளிகள் இவற்றை முழுவதுமாக அகற்றி, முகத்தை எப்பொழுதும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

- Advertisement -