ஒரே இரவில் முகம் செம கலரா மாறி சினிமா ஹீரோயின் போல சும்மா தகதகன்னு ஜொலிக்க, இந்த புதினா இலை ஃபேஸ் பேக் டிரை பண்ணுங்க. ரிசல்ட் வேற லெவல்ல இருக்கும்.

mint lady
- Advertisement -

பெரும்பாலும் நமக்கெல்லாம் முகம் அழகாகவும் கலராகவும் மாற வேண்டும் என்று அதிக அளவு யோசிக்க வைத்ததே சினிமாக்களில் வரும் ஹீரோயின்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் அவர்களை பார்க்கும்போது நமக்கு அழகு தேவதை போல ஜொலிப்பார்கள் நாமும் அப்படி ஆக மாட்டோமா என்று எண்ணம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பு தான். அந்த எண்ணத்தை நிஜமாக்கக்கூடிய ஒரு அற்புதமான பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம் அதுவும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ரொம்ப வித்தியாசமான முறையில் எளிமையாக எப்படி செய்வது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒரே இரவில் முகம் வெள்ளையாக:
இந்த பேக்கை தயாரிக்க நாம் முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களைக் கொண்டு தான் செய்யப் போகிறோம். அதுவும் இல்லாமல் இதில் சேர்க்கப்படும் பொருட்களை இதுவ ரை நாம் அழகிற்காக பயன்படுத்தி இருக்கிறோமா என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான். அப்படியான புதுமையான ஒரு பேக் தான் இது. வாங்க இப்போ இதை எப்படி தயார் பண்றதுன்னு தெரிஞ்சுக்கணும்.

- Advertisement -

இந்த பேக்கை தயாரிக்க முதலில் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி எடுத்து நன்றாக சுத்தம் செய்த பிறகு சின்ன சின்னதாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் புதினாவையும் வாங்கி இலைகளை மட்டும் தனியாக எடுத்து அதையும் சின்னதாக நறுக்கி கொள்ளுங்கள். இதை நறுக்கி வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை நறுக்கி செய்யும் போது கொஞ்சம் சீக்கிரமாக வேலை செய்யும்.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். இந்த தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது எடுத்து வைத்த இந்த புதினா மல்லி இலைகளை போட்டவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் கால் டம்ளர் ஆகும் வரை அப்படியே சுண்ட விடுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்து விடுங்கள். இது அப்படியே ஆறட்டும்.

- Advertisement -

இதற்குள்ளாக இயற்கையான முறையில் விளைந்த கற்றாழை எடுத்து அதன் தோள்களை நீக்கிய பிறகு நான்கு அல்லது ஐந்து முறை அதன் ஜெல்லை சுத்தமாக கழுவி விடுங்கள். அதன் பிறகு அதை இரண்டு ஸ்பூன் வரும் அளவிற்கு எடுத்துக் கொண்டு அத்துடன் இந்த புதினா கொத்தமல்லி சாறையும் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து கொண்டே இருந்தால் இளம் பச்சை நிறத்தில் பேஸ்ட் போல கிடைக்கும்.

இந்த பேஸ்டை இரவு உறங்க செல்லும் முன் உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு முகத்தில் அப்ளை செய்து விட்டு அப்படியே உறங்கி விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்ததும் சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள். சோப்பு பயன்படுத்த வேண்டாம். இந்த முறையில் பேக்கை பயன்படுத்திய பிறகு முகத்தை சுத்தம் செய்த உடனே உங்களுடைய முகத்தில் பெரிய அளவில் மாற்றம் தெரியும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் முகப்பரு கரும்புள்ளிகள் சன் டன் போன்றவை அனைத்தும் ஒரே நேரத்தில் சரியாகும் அதுவும் ஒரு முறை போடும் போதே.

இந்த பேக்கை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது நீங்களே எதிர்பார்க்காத அளவு உங்களுடைய நிறம் அதிகரித்து அழகாக மாறி விடுவீர்கள். இதை அதிக அளவில் தயாரித்து வைத்து பிரிட்ஜில் கூட வைத்து பயன்படுத்தலாம் தவறில்லை. இயற்கையான முறையில் அழககை அதிகரித்துக் கொள்ளும் இந்த ஃபேஸ் பேக் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -