இரண்டே நாட்களில் முகத்தை கலராக மாற்றும் மைசூர் பருப்பு, இதனை எப்படி அப்ளை செய்யலாம் தெரியுமா?

face1
- Advertisement -

ஒரு சிலர் குழந்தையாக இருக்கும்பொழுது நல்ல கலராக வெள்ளையாக இருந்திருப்பார்கள். ஆனால் வயதாக ஆக அவர்களின் நிறம் சற்று மங்கலாக மாறிக்கொண்டே வரும். இதற்கு காரணம் அவர்களின் உணவு பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்கள் தான். வெயிலில் அதிகமாக செல்ல வேண்டி இருந்தாலும், அவர்களின் நிறம் குறைந்து கொண்டே செல்லும். அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் அவர்களின் நிறம் மங்கிக் கொண்டே போகலாம். ஆனால் இப்படி தங்களின் இளமைக் கால நிறத்தை மீண்டும் கொண்டு வர எந்தவித செலவும் செய்யாமல், வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பருப்பு வகையை தான் பயன்படுத்த போகிறோம். இந்த பருப்பு உணவாக மட்டுமல்லாமல் சிறந்த அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது .வாருங்கள் இதனை எவ்வாறு பயன்படுத்தினால் தோலின் நிறத்தை வெள்ளையாக மாற்ற முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வீட்டுப் பெண்மணிகள் சாம்பார் வைப்பதற்கு அதிகமாக துவரம்பருப்பை பயன்படுத்துவார்கள். அதற்கு அடுத்ததாக பாசிப்பருப்பு மற்றும் மைசூர் பருப்பை வைத்து சாம்பார் செய்வார்கள். இந்த மூன்று பருப்புகளில் ஒன்றான மைசூர் பருப்பை பயன்படுத்தினால் உங்களின் நிறம் விரைவாக கலராக மாறும். இந்த மைசூர் பருப்பு பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் அழகாக இருக்கும்.

- Advertisement -

இந்த மைசூர் பருப்பில் ஊட்டச் சத்து, புரதச்சத்து, பல வித விட்டமின் சத்துக்கள், ஸ்டார்சுகள் போன்றவை நிறைந்துள்ளன. பொதுவாக இந்த கருப்பு சருமத்தின் நிறமிழப்பு, முகப்பரு, முக சுருக்கம், கருவளையம் போன்ற சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் சிறந்த தீர்வாக இருக்கிறது.

பொதுவாகவே முகம் சம்பந்தமான அழகு குறிப்புகள் செய்யும்பொழுது ஸ்கிரப் செய்வது மிகவும் முக்கியமான ஒரு செயல்முறையாகும். இவ்வாறு செய்யும்பொழுது முகத்தில் இருக்கும் உள்ளார்ந்த அழுக்குகள் அனைத்தும் வெளியேறி முகம் புத்துணர்ச்சி அடையும். அவ்வாறு செய்யும் பொழுது மிகவும் நாட்பட்ட அழுக்குகள் கூட வெளியேறி முகம் பொலிவுடன் காணப்படும்.

- Advertisement -

இப்படி ஸ்க்ரப் செய்வதன் மூலம் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எனவே பல விதமான சரும பிரச்சனைகள் குணப்படுத்தப்படுகிறது. அவ்வாறு தான் இந்த மைசூர் பருப்பை வைத்து முகத்திற்கு ஸ்கிரப் செய்து முகத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்ய போகிறோம். முதல் நாள் இரவு படுக்கச் செல்லும் முன் 2 ஸ்பூன் மைசூர் பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலை ஊறிய மைசூர்பருப்பை பத்தி மிக்ஸி ஜாகிர் சேர்க்க வேண்டும். அதனுடன் 1/2 தக்காளி பழம்,2 ஸ்பூன் தயிர் சேர்த்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த விழுதை முகத்தில் தடவி பதினைந்து நிமிடத்திற்கும் மசாஜ் செய்து, அப்படியே உலர வைத்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர உங்கள் தோலின் நிறம் விரைவாக கலராக மாறி விடும்.

- Advertisement -